Dear sir
கம்பையநல்லூர்
மறக்கவியலாத நல்லூர்
1969-70 SSLC பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாளில் ஒரு வினா :A journey by train கட்டுரை எழுது
அடுத்த ஆண்டு 11ம் வகுப்பு மாணவர்களிடம் நான் கேட்டேன் எத்தனை பேர்
இரயில் பயணம் செய்திருக்கிறார் என்று. ஒருவருமில்லை! 4 பேர். ரயிலைப்பார்த்
திருக்கிறார்கள் இதில் ஒன்றும் வியப்பில்லை,என் மகள் MSc MEd முடித்தவர் மணம்முடித்த பினனர்தான் மாப்பிள்ளையுடன் சேலத்தில் ரயிலேறினார்.
கம்பையநல்லூருககு அருகே மொரப்பூர் நிலையம் உள்ளது.
தலைமை ஆசிரியர் அனுமதியுடன் எனது நண்பர் குழு(அனைவரும் B Ed ஆசிரியர்கள் )ஒரு சுற்றுலாவிற்கு திட்டமிட்டது 100மாணவ மாணவியர் திரண்டனர்.
ஒரு நாள் காலை அனைவரும் பள்ளியிலிருந்து TNT பஸ் ஏறி மொரப்பூர் இரயில்
நிலையம் சென்றடைந்தோம் ஜோலார்பேட்டை பாசஞ்சர் 11 மணிக்கு வந்தது. ஸ்டேஷன்மாஸ்டர் அனைத்து குழந்தைகளும் ஏறிடும் வரை இரயிலை நிறுத்தினார். சுமார் 20 நிமிடப்பயணம் அடுத்த இரயில்நிலையம் தொட்டம்பட்டி
வந்துவிட்டடது.அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.இதில் PET ஆல்பர்ட்அவர்களின் மேற்பார்வை மகத்தானது
மாணவ மாணவியர் அருகில் இருந்த இரும்பு உருக்காலைக்குச் சென்று உருகியோடும் தீப்பிழம்பான இரும்பையும் அதனை வார்ப்படம் செய்யும் விதத்தையும் கண்டு வியந்தனர்.சுண்ணாம்புக்கல் கல்கரி இரும்புத்தாது கொஞ்சம்
பழைய இரும்பு இவை கலந்து blast furnace ல்உருக்கப்படுகிறது.
அடுத்ததாக அருகில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றின் தெளிந்த நீரில் அனைவரும் குளித்து விளையாடி மகிழ்ந்தனர்
ஜோலார்பேட்டை -பாசஞ்சர் 4 மணி அளவில் திரும்ப வந்தது மீண்டும் இரயிலேறி
குழந்தைகள் ஆடிப்பாடியபடி மொரப்பூர் வந்திறங்கினர்.TNT பஸ் பயணம் நடத்துனர் வஜ்ஜிரம் பொறுப்புடன் அனைவரையும் மாலை 6 மணியளவில்
கம்பையநல்லூர் கொண்டு. சேர்த்தார்.அனைவரும் மகிழ்வுடன் வீடு திரும்பினா
அடுத்து இது போன்ற பிக்னிக் ஆக இல்லாமல் தொலை தூரச் சுற்றுலாக்களும்
நடைபெற்றன.
இவ்வகையில் உங்கள் பணியும் மகத்தானது மாணவ சமுதாயம் என்றென்றும்
உங்களை நினைத்துப் போற்றும்.
கம்பையநல்லூர் அரசு உயர்நிலைஉயர்நிலைப்பள்ளியில் அதன்பிறகு தேர்ச்சி
அளவு உயர்ந்தது கடத்தூருக்கு இணையாக இந்தப்பள்ளியும் சிறந்த கல்வி நிலை
யமாக மாறியது.
மாணவர் பலர் அரசுப்பணிககுச சென்றனர் தலைமைச்செயலகத்தில் உயர் பதவி
யில் அமர்ந்தனர் சட்டமன்ற உறுப்பினராயினர் ஒருவர் AG ஆகவே உயர்ந்தார்
நண்பரே இதுவும் சமகாலத்து வரலாறு தானே?
கம்பையநல்லூரை ஆண்ட ராஜா ஆங்கிலேயருக்கு கிருஷ்ணகிரி நகரை நிர்மாணிக்க உதவினான் என்பதை நீங்களும் அறிவீர்கள் நன்றி!