Thursday, 7 September 2017

சிவகாசிப்பஞ்சம்( 1994 95)

சிவகாசிப்பஞ்சம் ****************** சாட்சியாபுரம்-சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில். உள்ளது.இங்கிருந்த கிருத்துவ பள்ளியில் 3,4 ,5 ம் வகுப்பு படித்தேன்.அது பெண் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி. வெளியிலிருந்து வரும் ஓரிரு என் போன்ற பசங்க ளையும் சேர்த்துக் கொள் வார்கள். இருவரில் மற்றொரு மாணவர் செல்வராஜ். தினமும் 2 கி மீ தூரம் நடந்து பள்ளிக்கு வருவோம். 1954-55 ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும்பஞ்சம்;வரட்சி. உண்ண உணவின்றி மக்கள் அலைந்தனர். மரவள்ளிக்கிழங்கு வேப்பம்பழம் போன்றவற்றைத் தேடிச்சென்று சாப்பிட்ட காலம்.வீடுகளில் கம்மங்கூழ்தான். புளித்தகஞ்சியில் களிக் கிண்டி கொடுத்தனர் எல்லா வகைக் கீரைகளும் உணவாகின. நானும் எனது தங்கை கைக்குழந்தையும் அம்மாவின் அரவணைப்பில். தந்தை காவல் துறை அதிகாரி. துப்பாக்கி தயாரிக்கும் பயி ற்சி க்காக செகந்திராபாத் சென்று விட்டார். இரண்டுஆண்டுகள்.அவர் அனுப்பும் பணம் தான்எங்கள் வீட்டு மாதச்செலவுக்கு.கடுமை யான வறுமை.சிவகாசியில் பட்டாசு,தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை தந்தன.ஒரு குரோஸ்(144) தீப்பெட்டி ஒட்ட கூலி அரை யணா.தீக்குச்சிகள் ஒரு சட்டம் அடுக்கினால் முக்காலணா(1ரூபாய்=-16அணா). அரசு நூல் நூற்றுத்தர அம்பர்சர்க்கா மெஷின்கள் வழங் கிற்று . இந்த வேலைகளில் அம்மாவிற்கு நான் உதவு வேன்.வேப்பமரத்தில் பழங்களைப் பறித்து வந்து காயவைத்து கொட்டைகளை விற்போம் நெடுஞ்சாலையில் மணி மாடுகள் மந்தையாக செல்லும். அவற்றை பின்தொடர்ந்து சென்று சாணம் சேகரித்து வந்து அம்மாவிடம் கொடுத் தால் அவர் வரட்டி தட்டி காயவைத்து அடுப்பு எரிக்க பயன்படுத்துவார். இந்த வரட்சி காலத் தின் உச்ச கட்டத்தில் காவல்துறையினர் பெரிய அண்டாக்களில் அமெரிக்கபால்பவுடர் கரைத்து கொதிக்க வைத்து குழந்தைகளு க்கு வழங்கினர். பள்ளிக்குச் செல்லும் எனது நிலை சொல்ல வொண்ணாதது. ஒட்டு போட்ட சட்டைதான் டிரவுசர்மேல்அரைஞாண் கயிறுதான்.ஒருநாள்நான்காம் வகுப்பில் ஆசிரியை பவல் மிஸ் எங்கள் இருவரையும் கூப்பிட்டு காலையில்சாப்பிட்டீர்களா என்று கேட்டார். எங்கள்முகம்வறறிப்போயிருந்ததால் அப்படிக் கேட்டார் .கொஞ்சம் கம்மங் கூழ் குடித்தோம் என்றோம் .பரவாயில்லை ஆசிரியர் விடுதிக்கு போய் சமையல்காரரைப் பாருங்க என் றார். அங்கு அந்த வேலையாள் இருவருக்கும் கேப்பைக்களி உருண்டைகள் தந்தார்.நீரில் கரைத்து குடித்தோம். வாழைப்பழம் தந்தார். சாப்பிட்டுவிட்டு வகுப்புக்கு வந்தோம். ஆசிரி யைகளும் களிதான் சாப்பிடுகிறார்கள் என அன்று தெரிந்தது . 3ம் வகுப்பு ஆசிரியை கிரேஸ் கிருத்துவ மதப் பாடல் களை இனிமையாகப் பாடுவார்அவை இன்னும் நினைவில் நிற்கின்றன. 5 ம் வகுப்பு ஆசிரியை ரமணி மிஸ் சிவகாசி யின் புகழ்பெற்ற தேவாலயப் பாதிரியார் மகள் .எங்களுக்கு நல்ல சட்டைத்துணிகள் வாங்கித் தந்தார்.அந்த ஆண்டு முழுவதும் அதே சட்டைதான். என் தந்தை பயிற்சி முடி ந்து செகந்திராபாத்திலிருந்து திரும்பினார். வறுமை ஒழிந்தது . தாயுள்ளத்தோடு எங்களுக்கு கல்வி புகட்டி அன்பு காட்டிய அந்த 3ஆசிரியைகளை இன் றளவும் நினைத்து வணங்குகிறேன். சிவகாசி ,சாட்சியாபுரம் கான்வென்ட், சர்ச் Images courtesy:Google.

No comments:

Post a Comment