Wednesday, 5 July 2017

Megasthanes

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap ************* மெகஸ்தனிஸ்-கிரேக்கத் தூதுவர் : சநதிரகுப்த மௌரியரின் ஆட்சி சிறப்புகளை அறிய உதவும் நூல் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் எழுதிய இண்டிகா INDIKA ஆகும். இந்நூலின் சில பகுதிகள் தான் தற்போது உள்ளன. கி மு 303 ல் சந்திர குப்தர் கிரேக்கத்தளபதி செல்யூகஸ் நிகேடர் மீது போர் தொடுத்தார். அலெக்சாண்டர் கைப்பற்றிய இந்தியப் பகுதி களின் ஆளுநர் அவர்.போரில் தோல்வியுற்ற கிரேக்கத் தளபதி மௌரியப் பேரரசருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி,ஹீரட்,காந்தாரம், காபூல், பலுசிஸ் தான் ஆகியவை பேரரசுடன் இணைக்கப்பட்டன.தனது சகோதரியை சந்திரகுப்தருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்;500 யானைகள் பரிசாக வழங்கினார். மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்து அரசவைக்கு தூதுவராக அனுப்பப் பட்டார்.அவர் கி மு 302 முதல் 297 வரை அங்கிருந்தபோது இய ற்றிய நூல்தான் இண்டிகா. மெகஸ்தனிஸ் கூறும் மௌரியப் பேரரசின் சிறப்புகள் : அரசப்பதவி : மௌரியப் பேரரசர் அனைத்து அதிகாரங்களும் படைத்த யதேச்சாதிகாரி;.பெரும் செல்வத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்தார்.அவரது அரசவை பாரசீகப் பேரரசர்களின் அவையை விடச் சிறந்து விளங்கிற்று.பேரரசர் அரண்மனையை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு;வனவிலங்குகளை வேட்டையாடுவற்கு செல்வதுண்டு.சந்திர குப்தர் இயற்கை ஆர்வலர்;அழகை ஆராதித் தவர்.சதிகாரர்களின் கொலை மிரட்டலுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அறையில் உறங்குவார்.பெண் பாதுகாப்புப் படை அரசரை எந்நேரமும் காத்து நின்றது.ஒற்றர்களின் உதவியால் அவர் நாட்டு நடப்பைக் கேட்டறிந்தார் தனது முதலமைச்சர் கௌடில்யரின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார் சந்திரகுப்தர். படை நிர்வாகம் :மௌரியப் படையில் 60, 000 காலாட்படை வீரர் 30,000 குதிரைப்படை வீரர்,1000 யானைகள்,8000 தேர்கள் இருந்தன.ஒவ்வொரு தேரிலும் 3வீரர் செல்வர்.படை நிர்வாகிகள் 30 பேர்;6 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர்.பேரரசர் படைகளு க்குத் தலைமை தாங்கி முன் செல்வார். பொதுநிர்வாகம்:உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டது.மக்களின் நலன் கருதி நீர் வழிகளும் ,நெடுஞ்சாலைகளும். அமைக்கப்பட்டன. சாலைகளில் மைல் கற்கள் நடப்பட்டன. வணிகர்கள் தஙகிச்செல்ல சத்திரங்கள் இருந்தன.வழிப்பறிக் கொள்ளையர் ஒழிக்கப்பட்டனர். சிறப்பான உள்நாட்டு வணிகம் நடைபெற்றது. விற்பனை வரியாக அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. நீதி நிர்வாகம் :குற்றவாளிகள் கடுந்தண்டனை பெற்றனர்.நாடெங்கி லும் சிறு நீதிமன்றங்கள் இருந்தன.அரசவையே தலைமை நீதி மன்றம் ; பேரரசர் தலைமை நீதிபதி. தவறிழைப்பவர்களின் கை , கால்கள் வெட்டப்பட்டன.(வரும்...) மெகஸ்தனிஸ், இண்டிகா. (courtesy :Google images )

No comments:

Post a Comment