Sunday, 9 July 2017

Shunga Rulers

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap புஷ்ய மித்ர சுங்கர்(கி.மு 185-கி.பி 225) *************************************** பேரரசர் அசோகருக்குப் பின்னர் திறமையற்ற வாரிசுகளாலும் பதவிப்போட்டியாலும் மௌரியப் பேரரசு நிலைகுலைந்தது.இளவர சன் குணாளன் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்ய, அவரது தமையன் காஷ்மீரத்தை ஆளத்தொடங்கினார்.இதனால் பேரரசு பிளவுற்றது. குணாளனுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தமையால், அவனுடைய மகன்கள் தசரதன், சம்பிராதி என்ற இருவரும் நிர்வாகப் பொறுப்பே ற்றனர்.முதலவன் பாடலிபுத்திரத்தையும், அடுத்தவர் உஜ்ஜைனி யையும் தம் வசமாக்கிக் கொண்டனர்.பேரரசு மேலும் இரண்டா னது.மௌரிய அரசர்களில் கடைசியாக பிருகத்ரதன் ஆட்சிக்கு வந்தபோது படைத்தளபதி புஷ்ய மித்ர சுங்கர் அரசரைக கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.அத்தளபதியே சுங்க வம்சத்தை நிறு வியவர். சுங்கர்கள் யார்?: புஷ்ய மித்ர சுங்கர் ,பிம்பிசாரர் வம்சாவளி என்றும்,அவர் மௌரியர் என்றும் இரு கருத்துக்கள் உண்டு. பெய ரில்'மித்ரா ' இருப்பதால் அவர் பிராமண அரசர் என்று கூறப்படுகி றது.சுங்கர்கள் உஜ்ஜைனியிலிருந்து வந்து மௌரியர் படையில் பணியாற்றினர். மௌரிய அரசர் பிருகத்ரதன் குடிமக்களால் பெரிதும் வெறு க்கப்பட்டார்.இதனை அறிந்த கிரேக்கர்கள் பாடலிபுத்திரம் மீது படையெடுத்து வந்தனர். அப்போது ஏற்பட்ட படையினரின் புரட் சியால் அவர்களால் அயோத்தி, மதுரா வரைதான் முன்னேற முடி ந்தது.இந்த அரசியல் சூழ்நிலையில்தான் புஷ்ய மித்ர சுங்கர் ஆட்சி யைப் பிடித்தார். பேரரசு விரிவாக்கம்.:புஷ்ய மித்ர சுங்கர் பெரும் படையுடன் சென்று கிரேக்கப்படையினை விரட்டியடித்தார்.இந்திய விடுதலை காக்கப்பட்டது.பின்னர் யக்ஞசேனனை வென்று விதர்பா நாட்டைக் கைப்பற்றினார்.கலிங்க மன்னர் காரவேலனை வென்று அந்நாட்டை ப் பேரரசுடன் இணைத்தார்.இந்த வெற்றியை ஹாதி கும்பா கல்வெ ட்டு உறுதிப்படுத்துகிறது."மகாராஜ் ஆதிராஜ் " என்று பட்டம் சூட்டிக் கொண்ட புஷ்ய மித்ர சுங்கர் தனது மேலாண்மையை நிறுவிட "அஸ் வமேத யாகங்கள்" நடத்தினார்.மீண்டும் படையெடுத்து வந்த கிரேக் கர்களை அவரது மகன் வாசுமித்ரன் எதிர்கொண்டு வெற்றி பெற்றான். சுங்கர்கள் பேரரசில் பாடலிபுத்திரம், விதீசம் கலிங்கம், ஆக்ரா,அயோ த்தி, பீகார், திர்கட், சியால்கோட்(பஞ்சாப் )ஆகிய பகுதிகள் இருந்தன. சமயநிலை:புஷ்ய மித்ர சுங்கர் வைதிக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த சமயத்தைப் போற்றி வளர்த்தார்ஆனால் அவர் புத்த ,சமணத் துறவிகளை சித்திரவதை செய்ததாகவும் மடாலயங் களை இடித்ததாகவும் சமய நூல்கள் கூறுகின்றன.ஆனால் அது ஏற்புடையதல்ல.அவர் சமயச் சகிப்புத்தன்மை கொண்டவர்.வைதீக பிராமணர்களுக்கு ஆதரவளித்தார்.யாக வேள்விகள் அதிகரித்தன. சமண,பௌத்த மதங்களின் மீது மக்களுக்கு இருந்த நாட்டம் குறை யத் தொடங்கிற்று.போர்களில் தாம் பெற்ற வெற்றிகளைக் கொண் டாட இரண்டு முறை அஸ்வமேத யாகம் நடத்தினார். புஷ்ய மித்ர சுங்கரின் நீண்ட கால ஆட்சிக்குப் பின்னர் அவரது மகன் அக்னி மித்ரா 8 ஆண்டுகள் ஆண்டார். அந்த வம்சத்தின் கடைசி அரசர் தேவபூமியைக் கொன்று தளபதி வாசுதேவ கன்வர் பாடலிபுத்திரத்தின் அரசரானார். சுங்கர்கள் சிறப்பு :சத்திரிய வம்சம் நாடாளவேண்டும்;படை களுக்குத் தலைமை தாங்கிப் போருக்குச் செல்லவேண்டும் என்ற வர்ணாசிரம கோட்பாடுகளை மாற்றி பிராமணர் நாடாளமுடியும் எனக் காட்டியது சுங்க வம்சம்.கௌதமபுத்தர், மகாவீரர், அசோகர் ஆகிய சத்திரிய குலத்தவர் ஆட்சிப் பொறுப்பைத் துறந்து ஆன்மிக பாதையில் சென்றமையால் வேத பாரயணத்ததை விடுத்து பிரா மணர் நாடாளத் தொடங்கினர். சுங்கர்களின் சாதனையாக அவர்கள் கிரேக்கர்களையும், ஹூனர்களையும் கங்கைச்சமவெளியில் நுழையாமல் தடுத்த னர்.அந்த க் கால வைதிக சமயம் புத்துயிர் பெற்றது. மனுஸ்ம்ருதி போன்ற ஸ்மிருதி நூல்கள் எழுதப்பட்டன.வடமொழி இலக்கியம் வளர்ந்தது. நுன்கலைகளும் வளர்ச்சி பெற்றிருந்தது .மக்களின் கல்வி வளர்ச்சியில் சுங்கர்கள் அக்கறை காட்டினர் .மகாக் கவி காளிதாஸர் பிற்காலத்தில் இயற்றிய காவியம் "மாளவிகா அக்னி மித்ரா " நாயகன் சுங்க அரசன் அக்னி மித்ரா தான். புஷ்ய மித்ர சுங்கர் பேரரசு படம். வெள்ளிக்காசுகள, சுங்கர் அரசரின் clay mould. courtesy :Wikipedia

No comments:

Post a Comment