Wednesday, 12 July 2017

சாதவாகனர் 2

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap *************** ********* மௌரியர் ஆட்சியில். .சமய நிலை : அசோகரின் ஆளுகைக்கு முன்னர் மக்கள் சமயச்சடங்குகள் செய் வதிலும்,யாகங்கள் வளர்ப்பதிலும், மனிதர்கள் மிருகங்கள் பலி கொடுப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மூடநம்பிக்கை கள் மக்களுக்கு மகிழ்சசி தந்தன.வேதீயசமயமும் சமண மும், பௌத்தமும் பலரால் பினபற்றப்பட்டன. மௌரியப் பேரரசு பௌத்தசமயத்தை தேசிய அரசாக அங்கீகரித்த பின்னர் அச்சமயத்தைப் பரவச்செய்திட பல முயற்சிகள் மேற்கொ ண்டது .யாகங்கள் பலியிடுதல் எல்லாம் அதிக செலவினங்கள். பௌத்த துறவிகளுக்கும் அவற்றைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அனைத்து மக்களுக்கும் சமய சகிப்புத்தன்மை இருந்தது . பிற சமயங்களை அடக்கி ஒடுக்கும் மனநிலை இல்லை. பொருளாதார நிலை : மௌரியப் பேரரசின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். எருதுகள் ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்தினர்.பாசனத்திற்காக நீரோடைகள்,கிணறுகள், நீர்நிலைகள் இருந்தன.அவர்கள் பணப்பயி ர்கள் ,பழத்தோட்டங்கள் உருவாக்கிட ஆர்வம் காட்டினர்.ஜவுளி த்தொ ழிலும் வளரத்தொடங்கிற்று. நூல் நூற்றல் ,ஆடை நெய்தல் பணி களில் ஏராளமான பேர் ஈடுபட்டனர். நாட்டின் அனைத்து நிலங்களும் காடுகளும் அரசரது உடமைகள். உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் வளர்ச்சிபெற்றது. அரசு சரியான அளவில் உலோகக் காசுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது. கலை இலக்கிய வளர்ச்சி : அரசு மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டியமையால் படிப்பறிவு உள்ள மக்கள் மிகுந்திருந்தனர்.கல்விநிறுவனங்களின் அரசு நிதியுதவி வழங்கிற்று. ஆங்கிலேயர் காலத்ததை விட அசோகர் ஆட்சிக்காலத்தில் தான் அதிகக் கல்விக்கூடங்கள் இரு ந்தனவாம். அர்த்த சாஸ்திரம் சிற்பசாஸ்திரம் தவிர பல சமண, பௌத்த சமய நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. அசோகர் காலத்தில் கட்டிடக்கலை வளர்ச்சி பெற்றது.மௌரிய ரது கட்டிடங்களை காணவந்த அயல்நாட்டவரும் வியந்து பாரா ட்டினர்.'இவை மனிதரால உருவாக்கப்பட்டதல்ல.தேவதைகளால் கட்டப்பட்டவை' என்றனர். ஏறத்தாழ 8400 ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.அவற்றின் உயரம் 50-60 அடிகள்.ஒவ்வொன்றும் 50 டன் எடை உடைய இந்த ஸ்தூபி கற்தாண்கள் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. ஒவ்வொரு ஸ்தூபி உச்சியில் ஒரு விலங்கின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளுக்கு குடைவரைக் குகைகள் உருவாயின அவற்றின் சுவர்கள் பளிங்குக்கல் போன்று பளபளப்பாக உள்ளன் நேபாளத்தில் உள்ள தேவப்பட்டான்,காஷ்மீரில் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களைக் கட்டுவித்தவர் அசோகர். (வரும்...)

Sunday, 9 July 2017

Shunga Rulers

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap புஷ்ய மித்ர சுங்கர்(கி.மு 185-கி.பி 225) *************************************** பேரரசர் அசோகருக்குப் பின்னர் திறமையற்ற வாரிசுகளாலும் பதவிப்போட்டியாலும் மௌரியப் பேரரசு நிலைகுலைந்தது.இளவர சன் குணாளன் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்ய, அவரது தமையன் காஷ்மீரத்தை ஆளத்தொடங்கினார்.இதனால் பேரரசு பிளவுற்றது. குணாளனுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தமையால், அவனுடைய மகன்கள் தசரதன், சம்பிராதி என்ற இருவரும் நிர்வாகப் பொறுப்பே ற்றனர்.முதலவன் பாடலிபுத்திரத்தையும், அடுத்தவர் உஜ்ஜைனி யையும் தம் வசமாக்கிக் கொண்டனர்.பேரரசு மேலும் இரண்டா னது.மௌரிய அரசர்களில் கடைசியாக பிருகத்ரதன் ஆட்சிக்கு வந்தபோது படைத்தளபதி புஷ்ய மித்ர சுங்கர் அரசரைக கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.அத்தளபதியே சுங்க வம்சத்தை நிறு வியவர். சுங்கர்கள் யார்?: புஷ்ய மித்ர சுங்கர் ,பிம்பிசாரர் வம்சாவளி என்றும்,அவர் மௌரியர் என்றும் இரு கருத்துக்கள் உண்டு. பெய ரில்'மித்ரா ' இருப்பதால் அவர் பிராமண அரசர் என்று கூறப்படுகி றது.சுங்கர்கள் உஜ்ஜைனியிலிருந்து வந்து மௌரியர் படையில் பணியாற்றினர். மௌரிய அரசர் பிருகத்ரதன் குடிமக்களால் பெரிதும் வெறு க்கப்பட்டார்.இதனை அறிந்த கிரேக்கர்கள் பாடலிபுத்திரம் மீது படையெடுத்து வந்தனர். அப்போது ஏற்பட்ட படையினரின் புரட் சியால் அவர்களால் அயோத்தி, மதுரா வரைதான் முன்னேற முடி ந்தது.இந்த அரசியல் சூழ்நிலையில்தான் புஷ்ய மித்ர சுங்கர் ஆட்சி யைப் பிடித்தார். பேரரசு விரிவாக்கம்.:புஷ்ய மித்ர சுங்கர் பெரும் படையுடன் சென்று கிரேக்கப்படையினை விரட்டியடித்தார்.இந்திய விடுதலை காக்கப்பட்டது.பின்னர் யக்ஞசேனனை வென்று விதர்பா நாட்டைக் கைப்பற்றினார்.கலிங்க மன்னர் காரவேலனை வென்று அந்நாட்டை ப் பேரரசுடன் இணைத்தார்.இந்த வெற்றியை ஹாதி கும்பா கல்வெ ட்டு உறுதிப்படுத்துகிறது."மகாராஜ் ஆதிராஜ் " என்று பட்டம் சூட்டிக் கொண்ட புஷ்ய மித்ர சுங்கர் தனது மேலாண்மையை நிறுவிட "அஸ் வமேத யாகங்கள்" நடத்தினார்.மீண்டும் படையெடுத்து வந்த கிரேக் கர்களை அவரது மகன் வாசுமித்ரன் எதிர்கொண்டு வெற்றி பெற்றான். சுங்கர்கள் பேரரசில் பாடலிபுத்திரம், விதீசம் கலிங்கம், ஆக்ரா,அயோ த்தி, பீகார், திர்கட், சியால்கோட்(பஞ்சாப் )ஆகிய பகுதிகள் இருந்தன. சமயநிலை:புஷ்ய மித்ர சுங்கர் வைதிக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த சமயத்தைப் போற்றி வளர்த்தார்ஆனால் அவர் புத்த ,சமணத் துறவிகளை சித்திரவதை செய்ததாகவும் மடாலயங் களை இடித்ததாகவும் சமய நூல்கள் கூறுகின்றன.ஆனால் அது ஏற்புடையதல்ல.அவர் சமயச் சகிப்புத்தன்மை கொண்டவர்.வைதீக பிராமணர்களுக்கு ஆதரவளித்தார்.யாக வேள்விகள் அதிகரித்தன. சமண,பௌத்த மதங்களின் மீது மக்களுக்கு இருந்த நாட்டம் குறை யத் தொடங்கிற்று.போர்களில் தாம் பெற்ற வெற்றிகளைக் கொண் டாட இரண்டு முறை அஸ்வமேத யாகம் நடத்தினார். புஷ்ய மித்ர சுங்கரின் நீண்ட கால ஆட்சிக்குப் பின்னர் அவரது மகன் அக்னி மித்ரா 8 ஆண்டுகள் ஆண்டார். அந்த வம்சத்தின் கடைசி அரசர் தேவபூமியைக் கொன்று தளபதி வாசுதேவ கன்வர் பாடலிபுத்திரத்தின் அரசரானார். சுங்கர்கள் சிறப்பு :சத்திரிய வம்சம் நாடாளவேண்டும்;படை களுக்குத் தலைமை தாங்கிப் போருக்குச் செல்லவேண்டும் என்ற வர்ணாசிரம கோட்பாடுகளை மாற்றி பிராமணர் நாடாளமுடியும் எனக் காட்டியது சுங்க வம்சம்.கௌதமபுத்தர், மகாவீரர், அசோகர் ஆகிய சத்திரிய குலத்தவர் ஆட்சிப் பொறுப்பைத் துறந்து ஆன்மிக பாதையில் சென்றமையால் வேத பாரயணத்ததை விடுத்து பிரா மணர் நாடாளத் தொடங்கினர். சுங்கர்களின் சாதனையாக அவர்கள் கிரேக்கர்களையும், ஹூனர்களையும் கங்கைச்சமவெளியில் நுழையாமல் தடுத்த னர்.அந்த க் கால வைதிக சமயம் புத்துயிர் பெற்றது. மனுஸ்ம்ருதி போன்ற ஸ்மிருதி நூல்கள் எழுதப்பட்டன.வடமொழி இலக்கியம் வளர்ந்தது. நுன்கலைகளும் வளர்ச்சி பெற்றிருந்தது .மக்களின் கல்வி வளர்ச்சியில் சுங்கர்கள் அக்கறை காட்டினர் .மகாக் கவி காளிதாஸர் பிற்காலத்தில் இயற்றிய காவியம் "மாளவிகா அக்னி மித்ரா " நாயகன் சுங்க அரசன் அக்னி மித்ரா தான். புஷ்ய மித்ர சுங்கர் பேரரசு படம். வெள்ளிக்காசுகள, சுங்கர் அரசரின் clay mould. courtesy :Wikipedia

Friday, 7 July 2017

கௌடில்யர்

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap கௌடில்யர் ************** சந்திர குப்த மௌரியரின் ஆலோசகராகவும்,முதல் அமைச்சராக வும் இருந்தவர் கௌடில்யர்.தென்னிந்தியாவில் அவர் சாணக்கியன் என அறியப்படுகிறார்.மதிநுட்பம் மிக்கவர்; நந்தவம்ச அரசவையில் பணியாற்றினார்.அவரது கருப்பு நிறத்தை மகாபத்மநந்தன் கேலி செய்தமையால் கோபமுற்று வெளியேறிய கௌடில்யர் நந்தவம்ச த்தை அழித்திட உறுதி பூண்டார்.சந்திரகுப்தனை தன்னுடன் இணை த்துக் கொண்டார்.ஒரு பெரும்படை திரட்டப்பட்டது.அவ்வமயம இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரேக்க இளவரசர் அலெக் ஸாண்டரை சந்தித்து பாடலிபுத்திரத்தை தாக்குமாறு கௌடில்யஅ ரும், சந்திரகுப்தரும் வேண்டியதாக ஒரு செய்தி உண்டு. சந்திரகுப்தர் நந்தரை வீழ்த்தி மௌரியப் பேரரசினை நிறுவினார். கௌடில்யர் முதலமைச்சரானார்.அரசியல் மற்றும் நாட்டு நிர் வாகம் பற்றி பேரரசருக்குக் கற்பித்திட அவர் இயற்றிய வடமொழி நூல் அர்த்த சாஸ்திரம். மௌரியர் ஆட்சி நடைபெற்ற விதத்தை இந்நூலால் ஊகிக்கலாம். அரசர் அனைத்து அதிகாரங்களும் படைத்தவர். ஆனால் குடிமக்க ளுக்கு நலம் பயக்கும் விதத்தில் ஆட்சி புரியவேண்டும்.வலிமை மிக்க படையும் ஒற்றர் முறையும் ஒரு நாட்டினைக் காக்கும் என் கிறது அர்த்த சாஸ்திரம். அரசியல் சூழலுக்கு ஏற்ப பேரரசர் சிலசமயங்களில் சிங்கம் போல வும் சில சமயங்களில் ஆடு போன்று சாதுவாக இருக்கவேண்டும் என்கிறார் கௌடில்யர். ஒரு நல்ல குறிக்கோளை அடைந்ததிட பின்பற்றிடும் வழிமுறைகள் தவறானதாகவும் இருக்கலாம் என் பது அவருடைய அரசியல் கோட்பாடு

Wednesday, 5 July 2017

அசோகர் கலிங்கப்போர்

இந்திய வரலாறு மீள்பார்வை Recap ------ --------- -------- --------- ------ மௌரியப் பேரரசு (தொடர்ச்சி ) பிந்துசாரன(298-273): சநதிரகுப்த மௌரியர் தன்னுடைய மகன் பிந்துசாரரிடம் ஆட்சி யை ஒப்படைத்துவிட்டு துறவறம் மேற்கொண்டார்.போர் புரிவதில் வல்லமை படைத்த இளவரசன் அடுத்த 25 ஆண்டுகள் பேரரசைக் கட்டிக் காத்தார்.தென்னிந்தியாவில் கிருஷ்ணா நதிக்கு தெற்கே உள்ள நாடுகளையும் கலிங்க நாட்டையும் அவரால் கைப்பற்ற இயலவில்லை. மாவீரர் அசோகர் (கி.மு 273-232): இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் அரசராக கி.மு273-ல் ஆட் சிக்கு வந்த அசோகர் ஒரு போர் வெறியராக இருந்தார்.அதுகாறும் யாருக்கும் அடிபணியாத கலிங்க நாட்டைக் கைப்பற்றுவது அவரு டைய நோக்கமாக இருந்தது.அவரது தலைமையில் ஒரு மாபெரும் படை கலிங்கத்தைத் தாக்கிற்று. இந்தப் போரில் கலிங்கம் வீழ்ந்தது. அசோகர் வென்றார். 1 லட்சம் எதிரிப்படையினர் கொல்லப்பட்டனர்.2 லட்சம் பேர் காயமடைந்தனர். இதனால் இந்தியாவின் பெரும்பகுதினை முதன்முறையாக ஆட்சி புரிந்த பேரரசர் ஆனார் அசோகர். இந்த வெற்றி அசோகருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.துக்கததைக் கொண்டு வந்தது.கலிங்கப்போரால் ஏற்பட்ட அழிவும் உயிரிழப்பும் அசோகரைப் பெரிதும் பாதித்தது. போர்க்களத்தில் இறந்துகிடந்த மனித உடல்களும் கணவனை இழந்த பெண்களின் கதறல்களும் ஆதரவற்ற குழந்தைகளின் அழுகையும் பேரரசரின் உள்ளத்தினை உருக்கின. இனி எந்தக் காலத்திலும் போர் செய்வதில்லை என அவர் உறுதி பூண்டார்.(வரும். ..)

வர்த்தமான மகாவீரர்

இந்திய வரலாறு மீள்பார்வை Recap ********** வர்த்தமான மகாவீரர் (தொடர்ச்சி. ..) தமது சீடர்களைப் பல குழுக்களாகப் பிரித்து அவற்றிற்கு கண ங்கள் என்று பெயரிட்டார் மகாவீரர்.ஆடவர் மட்டுமின்றி பல இளம் துறவறம் பூண்டு சமண சங்கத்தில் இணைந்தனர்.சமண துறவிக்குழு க்கள் விரிவடைந்து சங்கங்கள் ஆயின.துறவிகள் போதனைப்படி வாழ் ந்தனர்.தாம் கேட்டதைப் பிறருக்கும் போதித்தனர்.ஆனால் யாரையும் சங்கத்தில் இணையும்படி வற்புறுத்தவில்லை. சஙகத்துறவிகளின் கடமைகளாகச் சில நியமங்கள் இருந்தன சமணசமயத்தில் சேர்ந்தவர்கள் எளிய வாழ்க்கை வாழ வேண்டும் அனைத்து உலகியல் இன்பங்களையும் விட்டு விலகவேண்டும். வன்முறை, பொய் பேசுதல், திருட்டு போன்றவை கூபாது;சுயகட்டுப் பாட்டுடன் உயரிய. நன்னெறிகளைப் பின்பற்றிட வேண்டும். தமது சொல் ,செயல்களால் பிறருக்கு. துன்பம் விளைவித்தல் ஆகாது.பிறரு டைய பொருட்களைக் கவரக்கூடாது.செல்வம் சேர்த்திடும் எக்காரிய த்தையும் செய்யக்கூடாது.எண்ணெய். வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தலாகாது,;அது போலவே காலனிகள்,குடைகள் கூடாது. குருவின் ஆணைகளுக்குக் கட்டுப்படவேண்டும். ;மேலும் 5 விரதங். களை மேற்கொள்ள வேண்டும். அவை. : வரன்முறையற்ற ஜீவகாருண்யம்,உண்மை பேசுதல் நல்லறிவை சேகரித்தல்,பிரமச்சாரிய விரதம் மேற்கொள்ளல் ,சரி யான முயற்சி, சரியான கவனம் . தமது 72 வது வயதில் வர்த்தமான மகாவீரர் காலமானார். அதன்பிறகு சமணசமயம் இரண்டாகப் பிரிந்தது.மகாவீரரின் சமயக் கொள்கைகளைச் சிறிதும் மாற்றமின்றி ஏற்றுக் கொண்ட சமணத் துறவிகள் திகம்பரர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் மேகமே ஆடை யாகக் கொண்டவர்கள்.ஆடைகளைத் துறந்து நாடெங்கிலும் பயணம் செய்து தமது சமயத்தைப் பரப்பினர். சுவேதம்பரர் என்ற சமணத்துற விகள் வெண்ணிற ஆடை அணிந்தவர்.கால, இட மாற்றங்களுக்கு ஏற்ப சிறிது கொள்கை மாற்றம் செய்வதில் தவறில்லை என்பது இப்பிரிவினரின் எண்ணம். சமணசமயத்தில் ஏற்பட்ட இப்பிரிவால் அம்மதத்தின் வளர்ச்சி தடைப்பட்டது. ஒரு காலத்தில் இச்சமயம் இந்தியத் துணைக் கண் டம் முழுவதும் பரவியிருந்தது.

மௌரியர் ஆட்சியில் பொருளாதார நிலை

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap *********** ********** ********* மௌரியர் ஆட்சியில் அரசியல், சமூக, சமயப் பொருளாதார நிலை : மௌரிய அரசர்களின் ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பகுதி ஒரே அரசரின் ஆதிக்கத்தில் இருந்தது .இதனால் இந்தியா ஒரே நாடு என்ற தேசிய உணர்வு வளரத்தொடங்கிற்று. குடிமக்களின் சமூகப் பொருளாதார நிலை உயர்ந்தது. அரசியல் நிலை: அரசப்பதவி மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. நாட்டின் ஆட்சியும் நிர்வாக அதிகாரங்களும் அரசனிடம் குவிந்து இருந்தன.அவனே அனைத்து சட்டங்களை இயற்றவும் ,நீதி வழங்கவும் உரிமை படைத் தவன்.அரசனின் ஆணைகள் முறைப்படி மக்களால் பின்பற்றப்படு வதை அரசு நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர். சந்திரகுப்த மௌரியர் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் எனக் கருதி அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. அவரைச் சுற்றி பெண் காவலர்கள் இருநதனர்.பேரரசர் அசோகர் அடிக்கடி தர்ம யாத்திரை சென்று மக்களை சந்தித்து அவர்தம் குறைகளைக் கேட்டறிந்தார். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கருதினார். பேரரசருக்கு ஆட்சியில் உதவி புரிய அமைச்சர் குழு இருந்தது. அது நல்ல ஆலோசனைகளை வழங்கிற்று;.அவற்றை அரசர் ஏற்கவேண்டுமென வற்புறுத்த இயலாது. அரசருக்கு குடிமக்களி டம் வரி வசூலிக்க உரிமை உண்டு. அந்த வருவாயினை சந்திரகுப்த மௌரியர் தனக்கு அரண்மனை, தர்பார் மண்டபம் கட்டி அலங்கரிக்க செலவிட்டார் ஆனால் அசோகர் அனைத்து வருவாயையும் மக்கள் நலப்பணிகளுக்குச் செலவிட்டார்.அந்நியர்கள் படையெடுத்து வந்தால் குடிகளைப் பாதுகாத்திடும் கடமை அரசனுடையது இவ்வாறு மௌரியர் ஆட்சியில் மக்கள் நலனே முதன்மையாக கருதப்பட்டது. அரசின் நிர்வாகம் திறம்பட இயங்கிட மௌரியப் பேரரசு ஒற்றர்கள் படையை உருவாக்கிற்று அப்படையினர் மக்களிடையே சென்று அவ்வப்போது அவர்தம் மனநிலையை அறிந்து வருவர். அரசுக்கு எதிரான கலகக்காரர்களையும் சதிகாரர்களையும் கண்ட றிவர். சமூகநிலை : மௌரியர் ஆட்சியில் மக்கள் பல வர்ணங்களாகவும்,வர்க்கங் களாகவும் பிரிந்திருந்தனர்.சாதிப்பிரிவுகளும் வலுப்பெற்று இருந் தது.வேதியர் உயர்நதவர்களாகவும்;சத்ரியரும்,வைசியரும் சமுதாயத்தால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர்.சூத்திரர் கடை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.சாதிமறுப்புத் திருமணங்கள் தடைசெய் யப்பட்டன.திருமணச் சடங்குகளுக்கு விதி முறைகள் இருந்தன. மணமுறிவு செய்வதும் எளிதல்ல. பெண்களின் நிலை உயர்வானதாக இல்லை. அவர்களுக்குத் தனியுரிமை ஏதுமில்லை. சில பெண்கள் முன்னணிக்கு வந்த போதும் சமூகம் அவர்களை அங்கீகரிக்கவில்லை. அடிமைமுறை வழக்கில் இருந்தது.செல்வந்தர்கள் அவர்களைப் பராமரிததனர்.அடிமைகளை வாங்கவும் விற்கவும் முடியும். செல்வந்தர் மது அருந்தினர்.அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகளில் மக்கள குடிக்கலாம்.வேட்டையாடுதல்,நடனமாடுதல், மக்களின் பொழுதுபோக்காக இருந்தது .பொதுமக்கள் ஒழுக்கநெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தனர். தர்மமகாமாத்திரர் கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து தண்டித்தனர்.இயற்கை அழகை ரசிப்பதிலும் உயர்தர ஆடைகள் மற்றும் நகைஅணிவதிலும்,மக்கள் ஆர்வம் காட்டி னர் பாடலிபுத்திரம் -கற்பனை ஓவியம் , கருதப்பட்டது.

மௌரியர் ஆட்சியில் சமய நிலை. .

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap *************** ********* மௌரியர் ஆட்சியில். .சமய நிலை : அசோகரின் ஆளுகைக்கு முன்னர் மக்கள் சமயச்சடங்குகள் செய் வதிலும்,யாகங்கள் வளர்ப்பதிலும், மனிதர்கள் மிருகங்கள் பலி கொடுப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மூடநம்பிக்கை கள் மக்களுக்கு மகிழ்சசி தந்தன.வேதீயசமயமும் சமண மும், பௌத்தமும் பலரால் பினபற்றப்பட்டன. மௌரியப் பேரரசு பௌத்தசமயத்தை தேசிய அரசாக அங்கீகரித்த பின்னர் அச்சமயத்தைப் பரவச்செய்திட பல முயற்சிகள் மேற்கொ ண்டது .யாகங்கள் பலியிடுதல் எல்லாம் அதிக செலவினங்கள். பௌத்த துறவிகளுக்கும் அவற்றைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அனைத்து மக்களுக்கும் சமய சகிப்புத்தன்மை இருந்தது . பிற சமயங்களை அடக்கி ஒடுக்கும் மனநிலை இல்லை. பொருளாதார நிலை : மௌரியப் பேரரசின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். எருதுகள் ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்தினர்.பாசனத்திற்காக நீரோடைகள்,கிணறுகள், நீர்நிலைகள் இருந்தன.அவர்கள் பணப்பயி ர்கள் ,பழத்தோட்டங்கள் உருவாக்கிட ஆர்வம் காட்டினர்.ஜவுளி த்தொ ழிலும் வளரத்தொடங்கிற்று. நூல் நூற்றல் ,ஆடை நெய்தல் பணி களில் ஏராளமான பேர் ஈடுபட்டனர். நாட்டின் அனைத்து நிலங்களும் காடுகளும் அரசரது உடமைகள். உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் வளர்ச்சிபெற்றது. அரசு சரியான அளவில் உலோகக் காசுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது. கலை இலக்கிய வளர்ச்சி : அரசு மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டியமையால் படிப்பறிவு உள்ள மக்கள் மிகுந்திருந்தனர்.கல்விநிறுவனங்களின் அரசு நிதியுதவி வழங்கிற்று. ஆங்கிலேயர் காலத்ததை விட அசோகர் ஆட்சிக்காலத்தில் தான் அதிகக் கல்விக்கூடங்கள் இரு ந்தனவாம். அர்த்த சாஸ்திரம் சிற்பசாஸ்திரம் தவிர பல சமண, பௌத்த சமய நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. அசோகர் காலத்தில் கட்டிடக்கலை வளர்ச்சி பெற்றது.மௌரிய ரது கட்டிடங்களை காணவந்த அயல்நாட்டவரும் வியந்து பாரா ட்டினர்.'இவை மனிதரால உருவாக்கப்பட்டதல்ல.தேவதைகளால் கட்டப்பட்டவை' என்றனர். ஏறத்தாழ 8400 ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.அவற்றின் உயரம் 50-60 அடிகள்.ஒவ்வொன்றும் 50 டன் எடை உடைய இந்த ஸ்தூபி கற்தாண்கள் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. ஒவ்வொரு ஸ்தூபி உச்சியில் ஒரு விலங்கின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளுக்கு குடைவரைக் குகைகள் உருவாயின அவற்றின் சுவர்கள் பளிங்குக்கல் போன்று பளபளப்பாக உள்ளன் நேபாளத்தில் உள்ள தேவப்பட்டான்,காஷ்மீரில் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களைக் கட்டுவித்தவர் அசோகர். (வரும்...)

Megasthanes

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap ************* மெகஸ்தனிஸ்-கிரேக்கத் தூதுவர் : சநதிரகுப்த மௌரியரின் ஆட்சி சிறப்புகளை அறிய உதவும் நூல் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் எழுதிய இண்டிகா INDIKA ஆகும். இந்நூலின் சில பகுதிகள் தான் தற்போது உள்ளன. கி மு 303 ல் சந்திர குப்தர் கிரேக்கத்தளபதி செல்யூகஸ் நிகேடர் மீது போர் தொடுத்தார். அலெக்சாண்டர் கைப்பற்றிய இந்தியப் பகுதி களின் ஆளுநர் அவர்.போரில் தோல்வியுற்ற கிரேக்கத் தளபதி மௌரியப் பேரரசருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி,ஹீரட்,காந்தாரம், காபூல், பலுசிஸ் தான் ஆகியவை பேரரசுடன் இணைக்கப்பட்டன.தனது சகோதரியை சந்திரகுப்தருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்;500 யானைகள் பரிசாக வழங்கினார். மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்து அரசவைக்கு தூதுவராக அனுப்பப் பட்டார்.அவர் கி மு 302 முதல் 297 வரை அங்கிருந்தபோது இய ற்றிய நூல்தான் இண்டிகா. மெகஸ்தனிஸ் கூறும் மௌரியப் பேரரசின் சிறப்புகள் : அரசப்பதவி : மௌரியப் பேரரசர் அனைத்து அதிகாரங்களும் படைத்த யதேச்சாதிகாரி;.பெரும் செல்வத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்தார்.அவரது அரசவை பாரசீகப் பேரரசர்களின் அவையை விடச் சிறந்து விளங்கிற்று.பேரரசர் அரண்மனையை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு;வனவிலங்குகளை வேட்டையாடுவற்கு செல்வதுண்டு.சந்திர குப்தர் இயற்கை ஆர்வலர்;அழகை ஆராதித் தவர்.சதிகாரர்களின் கொலை மிரட்டலுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அறையில் உறங்குவார்.பெண் பாதுகாப்புப் படை அரசரை எந்நேரமும் காத்து நின்றது.ஒற்றர்களின் உதவியால் அவர் நாட்டு நடப்பைக் கேட்டறிந்தார் தனது முதலமைச்சர் கௌடில்யரின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார் சந்திரகுப்தர். படை நிர்வாகம் :மௌரியப் படையில் 60, 000 காலாட்படை வீரர் 30,000 குதிரைப்படை வீரர்,1000 யானைகள்,8000 தேர்கள் இருந்தன.ஒவ்வொரு தேரிலும் 3வீரர் செல்வர்.படை நிர்வாகிகள் 30 பேர்;6 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர்.பேரரசர் படைகளு க்குத் தலைமை தாங்கி முன் செல்வார். பொதுநிர்வாகம்:உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டது.மக்களின் நலன் கருதி நீர் வழிகளும் ,நெடுஞ்சாலைகளும். அமைக்கப்பட்டன. சாலைகளில் மைல் கற்கள் நடப்பட்டன. வணிகர்கள் தஙகிச்செல்ல சத்திரங்கள் இருந்தன.வழிப்பறிக் கொள்ளையர் ஒழிக்கப்பட்டனர். சிறப்பான உள்நாட்டு வணிகம் நடைபெற்றது. விற்பனை வரியாக அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. நீதி நிர்வாகம் :குற்றவாளிகள் கடுந்தண்டனை பெற்றனர்.நாடெங்கி லும் சிறு நீதிமன்றங்கள் இருந்தன.அரசவையே தலைமை நீதி மன்றம் ; பேரரசர் தலைமை நீதிபதி. தவறிழைப்பவர்களின் கை , கால்கள் வெட்டப்பட்டன.(வரும்...) மெகஸ்தனிஸ், இண்டிகா. (courtesy :Google images )