Wednesday, 5 July 2017
மௌரியர் ஆட்சியில் பொருளாதார நிலை
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap
*********** ********** *********
மௌரியர் ஆட்சியில் அரசியல், சமூக, சமயப் பொருளாதார நிலை :
மௌரிய அரசர்களின் ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டத்தின்
பெரும்பகுதி ஒரே அரசரின் ஆதிக்கத்தில் இருந்தது .இதனால்
இந்தியா ஒரே நாடு என்ற தேசிய உணர்வு வளரத்தொடங்கிற்று.
குடிமக்களின் சமூகப் பொருளாதார நிலை உயர்ந்தது.
அரசியல் நிலை:
அரசப்பதவி மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. நாட்டின் ஆட்சியும்
நிர்வாக அதிகாரங்களும் அரசனிடம் குவிந்து இருந்தன.அவனே
அனைத்து சட்டங்களை இயற்றவும் ,நீதி வழங்கவும் உரிமை படைத்
தவன்.அரசனின் ஆணைகள் முறைப்படி மக்களால் பின்பற்றப்படு
வதை அரசு நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.
சந்திரகுப்த மௌரியர் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் எனக்
கருதி அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. அவரைச்
சுற்றி பெண் காவலர்கள் இருநதனர்.பேரரசர் அசோகர் அடிக்கடி
தர்ம யாத்திரை சென்று மக்களை சந்தித்து அவர்தம் குறைகளைக்
கேட்டறிந்தார். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று
அவர் கருதினார்.
பேரரசருக்கு ஆட்சியில் உதவி புரிய அமைச்சர் குழு இருந்தது.
அது நல்ல ஆலோசனைகளை வழங்கிற்று;.அவற்றை அரசர்
ஏற்கவேண்டுமென வற்புறுத்த இயலாது. அரசருக்கு குடிமக்களி
டம் வரி வசூலிக்க உரிமை உண்டு. அந்த வருவாயினை சந்திரகுப்த
மௌரியர் தனக்கு அரண்மனை, தர்பார் மண்டபம் கட்டி அலங்கரிக்க
செலவிட்டார் ஆனால் அசோகர் அனைத்து வருவாயையும் மக்கள்
நலப்பணிகளுக்குச் செலவிட்டார்.அந்நியர்கள் படையெடுத்து
வந்தால் குடிகளைப் பாதுகாத்திடும் கடமை அரசனுடையது
இவ்வாறு மௌரியர் ஆட்சியில் மக்கள் நலனே முதன்மையாக
கருதப்பட்டது.
அரசின் நிர்வாகம் திறம்பட இயங்கிட மௌரியப் பேரரசு
ஒற்றர்கள் படையை உருவாக்கிற்று அப்படையினர் மக்களிடையே
சென்று அவ்வப்போது அவர்தம் மனநிலையை அறிந்து வருவர்.
அரசுக்கு எதிரான கலகக்காரர்களையும் சதிகாரர்களையும் கண்ட
றிவர்.
சமூகநிலை :
மௌரியர் ஆட்சியில் மக்கள் பல வர்ணங்களாகவும்,வர்க்கங்
களாகவும் பிரிந்திருந்தனர்.சாதிப்பிரிவுகளும் வலுப்பெற்று இருந்
தது.வேதியர் உயர்நதவர்களாகவும்;சத்ரியரும்,வைசியரும் சமுதாயத்தால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர்.சூத்திரர் கடை
நிலைக்குத் தள்ளப்பட்டனர்.சாதிமறுப்புத் திருமணங்கள் தடைசெய்
யப்பட்டன.திருமணச் சடங்குகளுக்கு விதி முறைகள் இருந்தன.
மணமுறிவு செய்வதும் எளிதல்ல.
பெண்களின் நிலை உயர்வானதாக இல்லை. அவர்களுக்குத்
தனியுரிமை ஏதுமில்லை. சில பெண்கள் முன்னணிக்கு வந்த
போதும் சமூகம் அவர்களை அங்கீகரிக்கவில்லை.
அடிமைமுறை வழக்கில் இருந்தது.செல்வந்தர்கள் அவர்களைப்
பராமரிததனர்.அடிமைகளை வாங்கவும் விற்கவும் முடியும்.
செல்வந்தர் மது அருந்தினர்.அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகளில்
மக்கள குடிக்கலாம்.வேட்டையாடுதல்,நடனமாடுதல், மக்களின்
பொழுதுபோக்காக இருந்தது .பொதுமக்கள் ஒழுக்கநெறிகளைப்
பின்பற்றி வாழ்ந்தனர்.
தர்மமகாமாத்திரர் கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர்களை
கண்டறிந்து தண்டித்தனர்.இயற்கை அழகை ரசிப்பதிலும் உயர்தர
ஆடைகள் மற்றும் நகைஅணிவதிலும்,மக்கள் ஆர்வம் காட்டி னர்
பாடலிபுத்திரம் -கற்பனை ஓவியம்
,
கருதப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment