Wednesday, 5 July 2017
அசோகர் கலிங்கப்போர்
இந்திய வரலாறு மீள்பார்வை Recap
------ --------- -------- --------- ------
மௌரியப் பேரரசு (தொடர்ச்சி )
பிந்துசாரன(298-273):
சநதிரகுப்த மௌரியர் தன்னுடைய மகன் பிந்துசாரரிடம் ஆட்சி யை
ஒப்படைத்துவிட்டு துறவறம் மேற்கொண்டார்.போர் புரிவதில்
வல்லமை படைத்த இளவரசன் அடுத்த 25 ஆண்டுகள் பேரரசைக்
கட்டிக் காத்தார்.தென்னிந்தியாவில் கிருஷ்ணா நதிக்கு தெற்கே
உள்ள நாடுகளையும் கலிங்க நாட்டையும் அவரால் கைப்பற்ற
இயலவில்லை.
மாவீரர் அசோகர் (கி.மு 273-232):
இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் அரசராக கி.மு273-ல் ஆட்
சிக்கு வந்த அசோகர் ஒரு போர் வெறியராக இருந்தார்.அதுகாறும்
யாருக்கும் அடிபணியாத கலிங்க நாட்டைக் கைப்பற்றுவது அவரு
டைய நோக்கமாக இருந்தது.அவரது தலைமையில் ஒரு மாபெரும்
படை கலிங்கத்தைத் தாக்கிற்று.
இந்தப் போரில் கலிங்கம் வீழ்ந்தது. அசோகர் வென்றார். 1 லட்சம்
எதிரிப்படையினர் கொல்லப்பட்டனர்.2 லட்சம் பேர் காயமடைந்தனர்.
இதனால் இந்தியாவின் பெரும்பகுதினை முதன்முறையாக ஆட்சி
புரிந்த பேரரசர் ஆனார் அசோகர்.
இந்த வெற்றி அசோகருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.துக்கததைக்
கொண்டு வந்தது.கலிங்கப்போரால் ஏற்பட்ட அழிவும் உயிரிழப்பும்
அசோகரைப் பெரிதும் பாதித்தது. போர்க்களத்தில் இறந்துகிடந்த மனித
உடல்களும் கணவனை இழந்த பெண்களின் கதறல்களும் ஆதரவற்ற
குழந்தைகளின் அழுகையும் பேரரசரின் உள்ளத்தினை உருக்கின.
இனி எந்தக் காலத்திலும் போர் செய்வதில்லை என அவர் உறுதி
பூண்டார்.(வரும். ..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment