Wednesday, 5 July 2017
வர்த்தமான மகாவீரர்
இந்திய வரலாறு மீள்பார்வை Recap
**********
வர்த்தமான மகாவீரர் (தொடர்ச்சி. ..)
தமது சீடர்களைப் பல குழுக்களாகப் பிரித்து அவற்றிற்கு கண
ங்கள் என்று பெயரிட்டார் மகாவீரர்.ஆடவர் மட்டுமின்றி பல இளம்
துறவறம் பூண்டு சமண சங்கத்தில் இணைந்தனர்.சமண துறவிக்குழு
க்கள் விரிவடைந்து சங்கங்கள் ஆயின.துறவிகள் போதனைப்படி வாழ்
ந்தனர்.தாம் கேட்டதைப் பிறருக்கும் போதித்தனர்.ஆனால் யாரையும்
சங்கத்தில் இணையும்படி வற்புறுத்தவில்லை.
சஙகத்துறவிகளின் கடமைகளாகச் சில நியமங்கள் இருந்தன
சமணசமயத்தில் சேர்ந்தவர்கள் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்
அனைத்து உலகியல் இன்பங்களையும் விட்டு விலகவேண்டும்.
வன்முறை, பொய் பேசுதல், திருட்டு போன்றவை கூபாது;சுயகட்டுப்
பாட்டுடன் உயரிய. நன்னெறிகளைப் பின்பற்றிட வேண்டும். தமது
சொல் ,செயல்களால் பிறருக்கு. துன்பம் விளைவித்தல் ஆகாது.பிறரு
டைய பொருட்களைக் கவரக்கூடாது.செல்வம் சேர்த்திடும் எக்காரிய
த்தையும் செய்யக்கூடாது.எண்ணெய். வாசனைத் திரவியங்கள்
பயன்படுத்தலாகாது,;அது போலவே காலனிகள்,குடைகள் கூடாது.
குருவின் ஆணைகளுக்குக் கட்டுப்படவேண்டும். ;மேலும் 5 விரதங்.
களை மேற்கொள்ள வேண்டும்.
அவை. : வரன்முறையற்ற ஜீவகாருண்யம்,உண்மை பேசுதல்
நல்லறிவை சேகரித்தல்,பிரமச்சாரிய விரதம் மேற்கொள்ளல் ,சரி
யான முயற்சி, சரியான கவனம் .
தமது 72 வது வயதில் வர்த்தமான மகாவீரர் காலமானார்.
அதன்பிறகு சமணசமயம் இரண்டாகப் பிரிந்தது.மகாவீரரின் சமயக்
கொள்கைகளைச் சிறிதும் மாற்றமின்றி ஏற்றுக் கொண்ட சமணத்
துறவிகள் திகம்பரர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் மேகமே ஆடை
யாகக் கொண்டவர்கள்.ஆடைகளைத் துறந்து நாடெங்கிலும் பயணம்
செய்து தமது சமயத்தைப் பரப்பினர். சுவேதம்பரர் என்ற சமணத்துற
விகள் வெண்ணிற ஆடை அணிந்தவர்.கால, இட மாற்றங்களுக்கு
ஏற்ப சிறிது கொள்கை மாற்றம் செய்வதில் தவறில்லை என்பது
இப்பிரிவினரின் எண்ணம்.
சமணசமயத்தில் ஏற்பட்ட இப்பிரிவால் அம்மதத்தின் வளர்ச்சி
தடைப்பட்டது. ஒரு காலத்தில் இச்சமயம் இந்தியத் துணைக் கண்
டம் முழுவதும் பரவியிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment