Friday, 7 July 2017

கௌடில்யர்

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap கௌடில்யர் ************** சந்திர குப்த மௌரியரின் ஆலோசகராகவும்,முதல் அமைச்சராக வும் இருந்தவர் கௌடில்யர்.தென்னிந்தியாவில் அவர் சாணக்கியன் என அறியப்படுகிறார்.மதிநுட்பம் மிக்கவர்; நந்தவம்ச அரசவையில் பணியாற்றினார்.அவரது கருப்பு நிறத்தை மகாபத்மநந்தன் கேலி செய்தமையால் கோபமுற்று வெளியேறிய கௌடில்யர் நந்தவம்ச த்தை அழித்திட உறுதி பூண்டார்.சந்திரகுப்தனை தன்னுடன் இணை த்துக் கொண்டார்.ஒரு பெரும்படை திரட்டப்பட்டது.அவ்வமயம இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரேக்க இளவரசர் அலெக் ஸாண்டரை சந்தித்து பாடலிபுத்திரத்தை தாக்குமாறு கௌடில்யஅ ரும், சந்திரகுப்தரும் வேண்டியதாக ஒரு செய்தி உண்டு. சந்திரகுப்தர் நந்தரை வீழ்த்தி மௌரியப் பேரரசினை நிறுவினார். கௌடில்யர் முதலமைச்சரானார்.அரசியல் மற்றும் நாட்டு நிர் வாகம் பற்றி பேரரசருக்குக் கற்பித்திட அவர் இயற்றிய வடமொழி நூல் அர்த்த சாஸ்திரம். மௌரியர் ஆட்சி நடைபெற்ற விதத்தை இந்நூலால் ஊகிக்கலாம். அரசர் அனைத்து அதிகாரங்களும் படைத்தவர். ஆனால் குடிமக்க ளுக்கு நலம் பயக்கும் விதத்தில் ஆட்சி புரியவேண்டும்.வலிமை மிக்க படையும் ஒற்றர் முறையும் ஒரு நாட்டினைக் காக்கும் என் கிறது அர்த்த சாஸ்திரம். அரசியல் சூழலுக்கு ஏற்ப பேரரசர் சிலசமயங்களில் சிங்கம் போல வும் சில சமயங்களில் ஆடு போன்று சாதுவாக இருக்கவேண்டும் என்கிறார் கௌடில்யர். ஒரு நல்ல குறிக்கோளை அடைந்ததிட பின்பற்றிடும் வழிமுறைகள் தவறானதாகவும் இருக்கலாம் என் பது அவருடைய அரசியல் கோட்பாடு

No comments:

Post a Comment