Wednesday, 5 July 2017
மௌரியர் ஆட்சியில் சமய நிலை. .
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap
*************** *********
மௌரியர் ஆட்சியில். .சமய நிலை :
அசோகரின் ஆளுகைக்கு முன்னர் மக்கள் சமயச்சடங்குகள் செய்
வதிலும்,யாகங்கள் வளர்ப்பதிலும், மனிதர்கள் மிருகங்கள் பலி
கொடுப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மூடநம்பிக்கை
கள் மக்களுக்கு மகிழ்சசி தந்தன.வேதீயசமயமும் சமண மும்,
பௌத்தமும் பலரால் பினபற்றப்பட்டன.
மௌரியப் பேரரசு பௌத்தசமயத்தை தேசிய அரசாக அங்கீகரித்த
பின்னர் அச்சமயத்தைப் பரவச்செய்திட பல முயற்சிகள் மேற்கொ
ண்டது .யாகங்கள் பலியிடுதல் எல்லாம் அதிக செலவினங்கள்.
பௌத்த துறவிகளுக்கும் அவற்றைக் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் அனைத்து மக்களுக்கும் சமய சகிப்புத்தன்மை இருந்தது .
பிற சமயங்களை அடக்கி ஒடுக்கும் மனநிலை இல்லை.
பொருளாதார நிலை :
மௌரியப் பேரரசின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். எருதுகள்
ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்தினர்.பாசனத்திற்காக
நீரோடைகள்,கிணறுகள், நீர்நிலைகள் இருந்தன.அவர்கள் பணப்பயி
ர்கள் ,பழத்தோட்டங்கள் உருவாக்கிட ஆர்வம் காட்டினர்.ஜவுளி த்தொ
ழிலும் வளரத்தொடங்கிற்று. நூல் நூற்றல் ,ஆடை நெய்தல் பணி
களில் ஏராளமான பேர் ஈடுபட்டனர். நாட்டின் அனைத்து நிலங்களும்
காடுகளும் அரசரது உடமைகள். உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம்
வளர்ச்சிபெற்றது.
அரசு சரியான அளவில் உலோகக் காசுகள் அச்சடித்து
புழக்கத்தில் விட்டது.
கலை இலக்கிய வளர்ச்சி :
அரசு மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டியமையால்
படிப்பறிவு உள்ள மக்கள் மிகுந்திருந்தனர்.கல்விநிறுவனங்களின்
அரசு நிதியுதவி வழங்கிற்று. ஆங்கிலேயர் காலத்ததை விட
அசோகர் ஆட்சிக்காலத்தில் தான் அதிகக் கல்விக்கூடங்கள் இரு
ந்தனவாம்.
அர்த்த சாஸ்திரம் சிற்பசாஸ்திரம் தவிர பல சமண, பௌத்த சமய
நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன.
அசோகர் காலத்தில் கட்டிடக்கலை வளர்ச்சி பெற்றது.மௌரிய
ரது கட்டிடங்களை காணவந்த அயல்நாட்டவரும் வியந்து பாரா
ட்டினர்.'இவை மனிதரால உருவாக்கப்பட்டதல்ல.தேவதைகளால்
கட்டப்பட்டவை' என்றனர்.
ஏறத்தாழ 8400 ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.அவற்றின் உயரம்
50-60 அடிகள்.ஒவ்வொன்றும் 50 டன் எடை உடைய இந்த
ஸ்தூபி கற்தாண்கள் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை.
ஒவ்வொரு ஸ்தூபி உச்சியில் ஒரு விலங்கின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
பௌத்த துறவிகளுக்கு குடைவரைக் குகைகள் உருவாயின
அவற்றின் சுவர்கள் பளிங்குக்கல் போன்று பளபளப்பாக உள்ளன்
நேபாளத்தில் உள்ள தேவப்பட்டான்,காஷ்மீரில் ஸ்ரீநகர் ஆகிய
நகரங்களைக் கட்டுவித்தவர் அசோகர். (வரும்...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment