Monday, 14 August 2017
குப்தர் காலம் பொற்காலம். ..2
இந்திய வரலாறு
ஒரு மீள்பார்வை
Recap
************
குப்தப் பேரரசர்களின் ஆட்சிக்காலம்
பொற்காலம். ...2
வடமொழி வளர்ச்சி :பௌத்த, சமணர் சமயங்
கள் பாலி மொழி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி
னர்.பெருவாரியான மக்கள் பேசிய பாலியில்
தான் புத்தரின் போதனைகள் இருந்தன.தற்
போது சிறந்த காவியங்கள் சமஸ்கிருத மொழி
யில் எழுதப்பட்டன.அம்மொழிதான் குப்தர்கள்
ஆட்சி மொழி.
சமயப்பொறை:குப்தப் பேரரசர்கள் சமயசகிப்பு த்தன்மை கொண்டவர்கள். அவர்கள் சைவ,
வைணவ சமயங்களைச் சார்ந்திருந்த போதும்
பௌத்த சமண சமயங்களை வெறுக்கவில்லை.
இலக்கிய வளர்ச்சி:சமஸ்கிருத மொழி வல்லுனர்
பலர் அரசர்களின் ஆதரவு பெற்று பல நூல்களை
படைத்தனர். மகாகவி ஹரி சேனர் வாழ்ந்த
காலம் இது. கவி காளிதாசர் சாகுந்தலம், மேக
சந்தேசம் போன்ற அழியா காவியங்களைப்
படைத்தார். மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதி
நூல்கள் புதிய வடிவம் பெற்றன. மிமாம்ச சூத்
திரத்திற்கு உரையெழுதப்பட்டது. அசாங்கா
என்ற புத்தபிட்சு ஏராளமான தத்துவ நூற்களை
இயற்றினார். அமரகோசம் என்ற புகழ் பெற்ற
காவியம் அமர்சிங்கால் எழுதப்பட்டது.குமாரகுப்
தனின் கதையைக் கூறும் மிருக்ஷகடிகம் விசா
கதத்தரால் இயற்றப்பட்டது.பஞ்சதந்திரக் கதை
கள்,பட்டி விக்ரமாதித்தன் கதைகள், வேதாளக் கதைகள் ஆகிய காலத்தால் அழியாத புகழ்
பெற்ற கர்ணபரம்பரைக் கதைகள் இக்காலத்
தவை.
கல்வி வளர்ச்சி :குப்தர்கள் ஆட்சியில் கல்வி
வளர்ச்சியும் சிறந்திருந்தது.தட்சசீலம்,நாளந்தா
பல்கலைக்கழகங்களில் கல்வி பயில உலகெங்
கிலும் இருந்து மாணவர்கள் வந்தனர். அஜந்தா
சாரநாத் ஆகிய இடங்களிலும் உயர்கல்வி மைய
ங்கள் இருந்தன.இவை தவிர பாடலிபுத்திரம்
மதுரா,வாரணாசி, உஜ்ஜைனி,வல்லபி, ஆகிய
நகரங்களிலும் நல்ல கல்வி நிலையங்கள் இரு
தன. நாடெங்கும் பல புதிய பாடசாலைகள் கட்
டப்பட்டன
அறிவியல் முன்னேற்றம் : அறிவியல் வளர்ச்சி
யிலும் குப்தர் காலம் மேம்பட்டிருந்தது. ஆரிய
பட்டர் "சூரிய சித்தாந்தம் " இயற்றினார். அது
சூரிய சந்திர கிரகணங்கள் நிகழ்வதை விளக்
குகிறது கணித உலகிற்கு பூஜ்யத்தை(zero)
அறிமுகம் செய்தார். தாவரவியல், வானவியல்
நூல்களை எழுதிப் புகழ்பெற்றார் வராகமிகிரர்.
உலோகவியல் (metallurgy)வளர்ச்சி பெற்றது.
மருத்துவ ஆராய்ச்சிகள் செய்த சாரகர்,நாகார்
ஜுனர் இக்காலத்தில் வாழ்ந்தனர். அந்த துறைக்கு பிரம்ம குப்தரின் பங்களிப்பு மகத்
யானது.
நுண்கலைகள் வளர்ச்சி :ஓவியக்கலை, சிற்பக்
கலை ,கட்டிடக்கலை, இசை ,நாட்டியம் போன்ற
கலைகள் வளர்ந்தன.குப்தப்பேரரசர் பிரமாண்ட மான மாளிகைகளையும்,கோவில் களையும்
கட்டினர்.காஞ்சிபுரத்தில் புத்தர் கோவில், புமா
ராவில் சிவன்கோவில், அஜாய்கரில் பார்வதி
கோவில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சிற்பக்கலையும் பெருவளர்ச்சி கண்டது. கடவுளர்
உருவங்களும், அரசர்,அரசியர் உருவங்களும்
சிலைகளாக வடிக்கப் பட்ட ன.இந்துக்கள் வழி
படும் அனைத்து தெய்வச்சிற்பங்களும் குப்தர்
காலச் சிற்பிகளின் கற்பனையில் உருவான
கைவண்ணங்கள்.இந்தியப் பண்பாட்டை ஒட்டி
அவை செய்யப்பட்டன.
அழகிய பெருங்குகைகளும் ஓவியங்களும்
குப்தர் காலத்தவை.அஜந்தா. குகை ஓவியங்
களும் சிலைகளும் உலகப். புகழ்பெற்றவை.
அவை கௌதம புத்தரின் வரலாற்றைச் சித்தரி
க்கின்றன. அஜந்தா ஓவியங்களும் நெஞ்சை
அள்ளுபவை.
மக்கள் குரலிசை, கருவிஇசை இரண்டிலும்
ஆர்வம் காட்டினர். சமுத்திர குப்தர ஒரு வீணை
இசைக்கலைஞர் என்பதை அவரது நாணயங்
களிலிருந்து அறியலாம். இசையோடு நாட்டியக்
கலையும் வளர்ந்தது. சதுராடும் நடனமங்கையர்
பலர் இருந்தனர்.
வணிக வளர்ச்சி :வணிகமும், தொழில் துறை
யும் வளர்ந்தன.ரோமப்பேரரசு,சீனா,இலங்கை
மற்றும் கீழ்த்திசை ஆசிய நாடுகளுடன்இந்தியா
வணிகத்தொடர்பில் இருந்தது.காம்பே,புரோச்
துறைமுகங்கள் ஏற்றுமதி மையங்கள். அந்நிய
செலாவணி இந்தியருக்கு சாதகமாக இருந்தது.
பேரரசு விரிவடைதல்:குப்தப் பேரரசர்கள் இந்திய எல்லைகளைத் தாண்டிப் படையெடுத்துச்
சென்று வெற்றிகளக் குவித்தனர்.ஜாவா, சும
த்ரா, கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய
நாடுகளில் இந்தியர் குடியேற்றம் நிகழ்ந்தது.
மக்கள் கால்களைக் கடந்தும் உயர்ந்த மலைப்
பகுதிகளிலும் குடியேறினர்.
இங்ஙனம் அரசியல், பொருளாதாரம்,சமூக
வாழ்க்கை, கலாச்சாரம்,பண்பாடு, வணிகம்
ஆகிய அனைத்து துறைகளிலும் வளர்ச்சி
பெற்று நாட்டுமக்கள் அமைதியாகவும்,செல்வ
ச்செழிப்போடும் வாழ்ந்தமையால் குப்தப்
பேரரசர்களின் ஆட்சிக்காலம் "பொற்காலம் "
என்று அழைக்கப்படுகிறது.
**********************
ஆரிய பட்டர்-சூரிய சந்திர கிரகணங்கள் பற்றி
விளக்கம் அளித்தார்; பூஜ்யம்,22/7 இவற்றை
உலகிற்கு அளித்த கணித மேதை; காளிதாசர்
படைத்த சாகுந்தலம் காவியத்தில் ஒரு காட்சி
(ஓவியர்-இராஜா இரவிவர்மா/G images-நன்றி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment