Friday, 11 August 2017
Post Sangam Age 1
சங்கம் மருவிய காலம்
*************
சங்க காலம் கி.பி 3ம்நூற்றாண்டில்
முடிவுக்கு வந்தது .அதன் பின்னர் பிற்கால
பல்லவர் வரும் வரை உள்ள காலத்தை சங்கம்
மருவியகாலம் என்கிறோம். களப்பிரர் தென்
னாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலம் இதுதான்.
இதனை இருண்ட காலம் என்பர் சிலர். ஏனெ
னில் களப்பிரர் ஆட்சியில் தமிழர்கலை,கலாச்
சாரம்,பண்பாடு, இலக்கியம் வளரவில்லை.
தெளிவான வரலாறும் இல்லை.
சில இலக்கியச் சான்றுகளும், தொல்லியல்
ஆய்வு சான்றுகளும் தற்போது கிடைத்துள்ளன.
கி.பி 250 முதல் கி. பி 700 வரை தமிழ்நாட்டு சமூக
பொரு ளாதார, சமய வரலாற்றை தேடுவது இக்
கட்டுரையின் நோக்கமாகும்.சமூகநிலை சங்க
காலச் சமூகத்தில் இருந்து மாறுபட்டது.இதனை
தமிழர் வரலாற்றின் இரண்டாவது காலகட்டமா கக் கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை நூல்களில் மொத்தம் 2381பாடல் கள் உள்ளன. அவற்றில் 80% (1861)அகத்திணை
ப்பாடல்கள்.பின்னர் இயற்றப்பட்ட பதினெண்
கீழ்கணக்கு நூல்களில் மொத்தம் 3250 பாடல்
கள்.அவற்றில் 15% (421)க்கும் குறைவானவை
அகப்பொருட் பாடல்கள் உள்ளன. சங்ககாலத்
தில் அரசர்களது கீர்த்தியைப் புகழும் பாடல்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் அரச பரம்பரையின் ஆன்மிகச் சிறப்புக்கள் விவரிக்
கப்படுகின்றன. இரட்டைக் காப்பியங்களான
சிலப்பதிகாரம், மணிமேகலை இக்காலத்தில்
இயற்றப்பட்டவை. சமூக மாற்றம் என்பது
தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே சங்கம் மரு
விய காலம் தமிழர் வரலாற்றின் இரண்டாவது
காலகட்டம் எனலாம்.
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் காட்டும்
தமிழர் சமூக நிலை : அந்த 18 நூல்களில் ஓன்று
மட்டும் இயற்றியவர் பெயர் தெரியவில்லை
400 சமணத்துறவியர் பங்களிப்பு நாலடியார்
என்ற நீதிநூல்.
1.நாலடியார் (சமணத்துறவியர்)
2.நான்மணிக்கடிகை(விளம்பி நாகனார்)
3.இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்)
4.இன்னா நாற்பது (கபிலர்)
5.கார்நாற்பது(மதுரை கண்ணன் கூத்தனார்)
6.களவழிநாற்பது(பொய்கையார்)
7.ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
8.ஐந்திணைஎழுபது. (மூவடியார் )
9.திணைமொழி ஐம்பது(கண்ணன் பூதனார்)
10.திணைமாலைநூற்றைம்பது(கனிமேதாவியா. 11.கைக்கிளை(புல்லன்காடனார்)
12.திருக்குறள்(திருவள்ளுவர் )
13.திரிகடுகம்(நல்லாடனார்)
14.ஆச்சாரக்கோவை(முள்ளியார்)
15.பழமொழி(முன்றுறை அரையனார்)
16.சிறுபஞ்சமூலம்(மாக்கரியாசான்)
17.முதுமொழிக்காஞ்சி(கூடலூர்கிழார்
18.ஏலாதி(கனிமேதாவியார்)
(cont'd )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment