Friday, 11 August 2017

Chandragupta1

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap முதலாம் சந்திரகுப்தன் கிபி320-335 ************** கடோத்கஜனுக்கு அடுத்து வந்த அரசர் முதலாம் சந்திரகுப்தன். லிச்சாவி இளவரசியை மணம் புரிந்து அந்நாட்டின் நட்பைப் பெற்றார். அவர் களின் ஆதரவால் பீகார், திர்குத், அயோத்தி, அலகாபாத், மகதம் ஆகிய பகுதிகளை வென்று பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை நிறுவினார். சந்திரகுப்தனின் அரசு கங்கைச் சமவெளி முழுவதும் பரவியிரு ந்தது.அவனது 15 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் சமுத்திர குப்தர் பேரரசரானார். சமுத்திர குப்தர் (கி பி 335-375) பல கூறுகளாகப் பிரிந்துகிடந்த இந்திய சிற்றர சுக்களை வென்று ஒரு மாபெரும் அரசை உரு வாக்கி அதனை 40 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் சமுத்திரகுப்தர் அவர் வலிமையும் வேகமும் உடைய மாவீரர். அடுத்தடுத்து பல போர்களில் வென்றமையால் அவரை 'இந்திய நெப்போலி யன் 'என்று குறிப்பிடுவர். இவ்வரசரின் பதவி ஏற்பு விழா பற்றி அலகாபாத் கற்றூண் கல் வெட்டு விவரிக்கிறது. நாட்டில் அவருக்கு எதிராக ஏற்பட்ட அரசகுடும்பப் புரட்சியினை முறியடி த்தார் .சமுத்திர குப்தர். ஆங்காங்கே இருந்த சிற்றரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொண்டு ஒற்றுமையின்றி இருந்த நிலையைப் பயன்ப டுத்தி அவர்தம் நாடுகளை பேரரசுடன் இணை த்தார். குப்தப் பேரரசை உருவாக்க சமுத்திர குப்தர் மேற்கொண்ட படையெடுப்புக்களை 'திக்விஜயம்' என்பர். அலகாபாத் கல்வெட்டுகளின் கூற்றுப்படி சமுத்திர குப்தர் வென்ற சிற்றரசர்கள் : அச்சுத நாகசேனர் ,கோத்தர், நாகவம்ச அரசர்களான ருத்ர தேவன், மிதிலா நாகதத்தன், சந்திரவர்மன், கணபதி நாகர், நாகசேனர் நந்தின் புலவர்கள், ஆகியோர். வடகிழக்கு இந்தியாவும் குப்தரின்கட்டுப். பாட்டில் வந்தது.சமுத்திரகுப்தன் தனது அரசு முத்திரையாக போர்க்கழுகை வைத்துக் கொண்டான் சந்திரகுப்தன் பெரும் முயற்சி செய்து மத்திய இந்திய மலைப்பகுதியில் இருந்த ஆத்வீகர் நாட்டைக் கைப்பற்றினான். ஏறத்தாழ கி பி346 இல் வடஇந்தியப்பகுதிகளை வென்று விட்ட இந்த அரசன் தனது கவனத்தை தென்னிந்திய அரசுக்கள் மீது திருப்பினான். தெற்கு கோசலத்தை ஆண்ட மகேந்திரன், கௌரால மகாராஜா, மகாகௌதார நாட்டு வியாகராஜா, ஆகிய 12அரசர்களை வென்ற பின் குப்தர் படைகள் நர்மதை நதியைக் கடந்து தெற்கே சென்றன. அங்கே விஷ்ணு கோபனின் தலைமை யில் சிற்றரசர்களின் கூட்டுப்படை அப்படையை எதிர்கொண்டது.இப்போரில் சமு த்திர குப்தரால் வெல்ல இயலவில்லை எனவே அவனது சாம்ராஜ்யம் கிருஷ்ணா நதி வரை பரவவில்லை. தென்னிந்திய அரசுக்களை தனது பேரரசுடன் இமைக்காமல் அவர்களை மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளப் பணித்தான் "வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து வைத்து பின் னர் விடுவித்து விடும்"கொள்கையைப் பின் பற்றினான் என்பர்.(cont'd) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு ; சமுத்திர குப்தர் படையெடுப்பு(ஒவியம்) Courtesy : G images.

No comments:

Post a Comment