Friday, 11 August 2017
Post Sangam Age2
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை -Recap
சங்கம் மருவிய காலம் 2
*************************
இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்,
மணிமேகலை இக்காலத்தில் இயற்றப்பட்டவை.
நீதிநெறிகளையும் மனித ஒழுக்கத்தையும்
பெற்றிருக்க அந்த நூல்கள். அவற்றில் அக்கால
நகரங்கள்,சமூகவாழ்க்கை,அரசநீதி, வாணிபம்
பற்றிய தகவல்கள் உள்ளன.
முற்காலப் பல்லவர் ஆட்சியில் செதுக்கப் பட்ட கல்வெட்டுகள் தாமிரப் பட்டயங்கள் சிறந்த
வரலாற்றுச் சான்றுகள். அவற்றில் முதலாம்
மகேந்திரவர்ம பல்லவன் கல்வெட்டுகள் (செங்கல்பட்டு,திருவண்ணாமலை, விழுப்புரம்
திருச்சி மாவட்டங்கள்)வேள்விக்குடி,சிவராமங்
கலம் செப்பேடுகள்; அவை தவிர ஆனைமங்க
லம்,திருப்பரங்குன்றம் கல்வெட்டுகள் சிறந்த
வரலாற்றுச் சான்றுகள்.
சங்க கால முடிவில் தமிழ் நாட்டை ஆண்ட
பாண்டிய,சேர,சோழ அரசர்கள் ;உக்கிரப்பெரு
வழுதி, மாரிவெண்கோ, இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி.என்கிறது இறையனார் அகப்
பொருள் உரை . வேள்விக்குடி செப்பேடுகள்
வடக்கில் இருந்து புலம்பெயர்ந்து வந்து தமிழ்
நாட்டை ஆட்சி புரிந்த களப்பிரர் பற்றிக் கூறுகி
றது.கி பி 250 ல் ஆண்ட உக்கிரப்பெரு வழுதி
முதல் கி பி 575 ல் ஆண்ட களப்பிரர் வம்சாவளி
பற்றி தெரிவிக்கிறது. இந்த காலத்தில் ஆட்சி
புரிந்த களப்பிர அரசன் அச்சுதன் பற்றி புத்த
துறவு பூதத்தர் இயற்றிய வினய வினிச்சயம்
நூலில் உள்ளது. இந்த களப்பிரர் பௌத்த
சமண சமயத்தை சேர்ந்தவரகள்; காலப்போ
க்கில் சைவ சமயத்திற்கு மாறினர். சிவ வழி
பாடு செய்தனர்.
சங்கம் மருவிய காலத்தில் இருந்த
தமிழ்நாட்டின் சமூக ,பொருளாதார நிலை பற்றி
ஆராய்ந்த பேராசிரியர் ஆலாலசுந்தரம் பல
புதிய வரலாற்றுத் தகவல்களைவெளியிட்டு ள்ளார் .
தமிழர் அரசியல் சமூக வாழ்க்கையில்
மாற்றங்கள் நிகழ்ந்திடக் காரணங்கள் :
களப்பிரர், பல்லவர்படையெடுப்புக்கள்;பிரா
மார்ச், பௌத்தர்,சமணர் குடியேற்றம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இயற்றப் பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் பல மாற்றங்கள்
நிகழ்ந்தன.பெரும் நிலப்பரப்பைக் ஆண்ட
களப்பிர,பல்லவப் பேரரசர்கள் உள்ளாட்சி
அமைப்புகளான நாடு (அவை),பிரம்மதேய
சபை போன்றவற்றை அமைத்தனர்.ஏராளமான
பிராமணரும், பௌத்த சமணத்துறவியர் குடி
யேறினர். பிரம்ம தேயம்,பள்ளிசந்தம்,தேவதா
னம் போன்ற நிலக்கொடைகளை அரசர்களி
டம் பெற்றனர்.கோவிலகள், மடங்கள் கட்ட அரசு
உதவிற்று. அவர்களுக்கு நிலவரி இல்லை.
சபாக்கள் ,சமிதிகள் உள்ளாட்சி அதிகாரம்
படைத்தவை.அவற்றின் உறுப்பினர் குடிமக்க
ளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பு
க்கள் பின்னர் சோழப்பேரரசர்களால் விரிவா
க்கம் செய்யப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment