Friday, 11 August 2017
Post Sangam Age
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap
சங்கம் மருவிய காலம் 4:
இல்லறம், துறவறம் ஆகிய வாழ்க்கை முறைகள் சங்க காலத்தில் இல்லை.சமண,பௌத்த சமயங்
களின் வருகையால் துறவிகள் மிகுந்தனர்.
உயிர்க்கொலை செய்யாமை,மாமிசம் உண்
ண்மை நல்லதென்று அவர்கள்கூறினர். மூவகை
க்குற்றங்கள்,ஐவகை நல்வழிகள்போதிக்கப்
பட்டன.கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. சமணர் பள்ளி
கள் கல்விக் கூடங்களில் மக்கள் எழுத்தறிவு
படிப்பறிவு ,கணிதம் ஆகியவை கற்றனர். உயர்
கல்வி என்பது இலக்கணம் (சட்டம்),தத்துவம்
(மெய்ஞானம்),தர்க்கவியல் கற்றல். அரசர்கள்
இக்கல்விக் கூடங்களுக்கு கொடைகள் வழங்
கினர்.காஞ்சிபுரத்திலும், சோளிங்கரிலும்இவ்
வகைக்'கடிகைகள்'இருந்தன.பல்லவரும் பாண்டியரும் சமஸ்கிருதத்தை நிர்வாக மொழி
யாக ஏற்றனர்.தமிழறிஞர்களால் தமிழ் போற்றி
வளர்க்கப்பட்டது.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்க
ப்படவில்லை. பலதார மணங்கள் நடைபெற்றன
ஆண் குழந்தை பெறுவதை சமூகம் போற்றியது
கணவன் இறந்தபோது மனைவி உடன்கட்டை
ஏறும் வழக்கம் இருந்தது. அவர்களைப் போற்றி
மக்கள் சதிகளுக்கான நடுகற்கள்வைத்தனர் தமிழர் திருமண விதிமுறைகள் ஏற்பட்டன. 16 வயதுஆணும்12வயதுபெண்ணும்ணம்புரியலாம்
மணமகள் தாலி அணியும் பழக்கமும்,அவரது
பெற்றோர் சீர்வரிசை வழங்கும் முறையும் இரு
ந்தன.தாய்மாமனுக்கு ஒரு பெண்ணை மணந்து
கொள்ளும் முன்னுரிமை உண்டு.
கார்த்திகை மாதத்திருவிழா சிவன் கோவில்களில் கொண்டாடப்பட்டது வீடுகளிலும்
மலைமீதும் விளக்கேற்றிடும் வழக்கம் இருந்தது.
இந்திரவிழா, பொங்கல் பண்டிகை கொண்டா
ட்டங்கள் இல்லை.எல்லா விழாக்களும் சமயத்
தொடர்புடையவை.பௌத்தர் வைகாசி பௌர்
ணமி நாளிலும், சமணர் தை நீராடுவது ,சிவன்
கோவில்களில் தைப்பூசம் ,பங்குனி உத்திரம்
போன்ற திருவிழாக்கள் இருந்தன.அந்நாட்களில்
கடவுளர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு
கள் நடந்தன.மன்னர்களின் பிறந்த நாள் விழா
வும்,நடுகற்கள் வழிபாடும் சிறப்பாக நடைபெற்
றன.
இறந்தவர்களைப் புதைத்திடும் முறையும்,
எரியூட்டி சாம்பலை கலத்திலிட்டு புதைக்கும்
வழக்கமும் இருந்தன.
மக்கள் தலைவிதியை நம்பினர்.அதனை
'ஊழ்' என்றழைத்தனர். அவர்களுக்கு மறுபிறவி
யில் நம்பிக்கை உண்டு. திருமணம் செய்தல்,
நெடுந்தொலைவு மேற்கொள்ளல் பற்றி சோதி
டரிடம் ஆலோசனை பெற்றனர்.
நாட்டிய வகைகளும், பாடல்கள் இசைக்கப்
பண்களும், இசைக்கருவிகளும் கண்டு பிடிக்க
ப்பட்டன.
கோச்செங்கன் முதலாக பல்லவர் பல
கோவில்களைக் கட்டினர்.கோவில்களின்
அர்த்த மண்டபத்தில் மகாபாரதச் சொற்பொழி
வுகள் நடைபெற்றன இந்துசமயம் 6 பிரிவுகள்
கொண்டது. அவை: லோகாயுதம் ,பௌத்தம்
சாங்கியம் , நையாயிகம், வைசேசிதம்,மிமாம்
சும்மா. இக்காலத்தில் தான் தமிழரின் சைவ
சித்தாந்தம் உருப்பெற்றது.
சங்கம் மருவிய காலத்தில் தமிழக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, சமய
வாழ்க்கையில் பெருத்த பல மாற்றங்கள்நிகழ்ந். தன.
பழம்பெரும் கோவில்;
தற்கால பக்தர்கள் (சொரிமுத்து)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment