Tuesday, 22 August 2017

Yuan tsang

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை.Recap . ******** யுவான் சுவாங் கௌதம புத்தர் வாழ்ந்த புண்ணிய பூமி இந்தியா .அதனைக் காண வந்த பௌத்த துறவியர் பலர்.அதில்' "புனிதப் பயணிகளில் இளவரசன்'என்றழைக்கப்படுபவர் சீனத் துறவி யுவான் சுவாங். அவர் சீனநாட்டுச் செல்வந்தர் குடும்பத்தில் கி பி 630 ம் ஆண்டு பிறந்தார்.தனது சகோதரனைப் பின்பற்றி தானும் துறவியானார் .கி பி 644 ம் ஆண்டு புறப்பட்டு இந்தியாவிற்கு வந்தார்.15 ஆண்டு கள் இங்கு வாழ்ந்தார்.தனது பயணத்தை அனுபவங்களைச் 'சி-யூ-கி'என்ற நூலாக இய ற்றினார். இந்திய வரலாற்றுக்கு மிகச்சிறந்த ஆதார நூலாக இது விளங்குகிறது. யுவான் சுவாங் தான் கண்டவற்றை மட்டும் இதில் பதிவு செய்தமையால் நம்பகத்தன்மை உள் ளது.சி -யூ-கி தரும் செய்திகள் சில. அரசியல் நிலை:ஹர்ஷரின் தலைநகர் கன்னோசி அழகிய நகரம்;மக்கள் மகிழ்ச்சி யாக வாழ்ந்தனர். குறைவான வரிவசூலிக்க ப்பட்டது. பேரரசர் பெரிய போர்ப் படையை பராமரித்தார். சமூகத்தில் சாதிப்பிரிவுகள் கடுமை யாக கடைப்பிடிக்கப்பட்டன.சாதிமறுப்புத் திருமணங்கள் தடை செய்யப்பட்டன.மக்கள் மாமிச உணவு உண்பதில்லை. விவசாயம் நாட்டுமக்களின் முக்கிய தொழில். வணகமும் வளர்ச்சி பெற்றது. அனைத்து சமயங்களும் -பௌத்தம் சமணம்,வைதீக பிராமணம்-தடையின்றி வளர்ந்தன. பேரரசர் அனைத்து சமயத்தவ ருக்கும் ஆதரவளித்தார். அவர் சமயப் பொறையுடையவர் ;நன்கொடைகள் வழங்கி னார். இலக்கியமும் நுண்கலைகளும் வளர்ச்சி பெற்றன கல்விக்கூடங்கள் பெரு கின.நாளந்தா பல்கலைக்கழகம் புகழ் பெற்று விளங்கியது. . சீனப்பயணி யுவான் சுவாங் (G images)

No comments:

Post a Comment