Tuesday, 22 August 2017
Harsha 2
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap
ஹர்ஷர் நிர்வாகச் சிறப்பு க்கள்
****************
ஹர்ஷவர்தனர் ஒரு பேரரசை உருவா க்கியது மட்டுமல்ல; அதனை சிறப்பாக நிர்வ கித்தார். அனைத்து அதிகாரங்களும் பேரரச
ரிடம் குவிந்திருந்தன. மக்கள் நலனே நல்லா
ட்சிக்கு ஆதாரம் எனக் கருதினார் ஹர்ஷர்.
அவர்தம் கருத்துக்களையும், வாழ்க்கைநிலை யையும் கண்டறிய பேரரசர் மாறுவேடத்தில்
நகரில் உலாவினார். அடிக்கடி பயணம் செய்து
முகாமிட்டு நாட்டின் நிலைமையை நேரில்
கண்டார் ஹர்ஷர். குப்தப் பேரரசர்களைப் போல இவருக்கும் திறன்கொண்ட அமைச்ச
ரவை இருந்தது .
பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப்
பட்டு ஆளுநர்களின் நிர்வாகப் பொறுப்பில்
விடப்பட்டன. மாநிலம் ( புக்தி),பல விஷ்யா
(மாவட்டம் )க்களாகவும்,பதாகா(வட்டம்)க்களா
கவும்,கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன.மேக
தார்,கிராமிகா ஆகிய அலுவலர்கள் இருந் தனர்.மக்கள் நலம்பேணும் நல்ல நிர்வாகம்
இருந்தது குற்றவாளிகள் கடுமையாகத் தண் டிக்கப்பட்டமையால் நாட்டில் குற்றச்செயல் கள் குறைந்தன. ஆனால் நெடுஞ்சாலைகளில் திருடர்கள் தொல்லை இருந்தது .
அரசுக்கு முதன்மை வருவாய் மக்களிடமிருந்து
பெரும் நிலவரி; பிற வரிகளும் உண்டு. அனைத்தும்
குறைவு என்பதால் மக்கள் மகிழ்ச்சியாக செலுத்தி
னர்.அரசின் செயல்பாடுகள் அனைத்தும் பதிவேடு
களில் எழுதப்பட்டன.
ஹர்ஷர் நாட்டை அந்நியப் படையெடுப்பிலி ருந்து காத்திட வலிமையான போர்ப் படையை உருவாக்கினார். அதில் 60,000 யானைப்படையும்
100,000 குதிரைப் படையும் அடக்கம்.
ஹர்ஷர் சிவவழிபாடு செய்பவர். தனது தங்கை
ராஜ்யஸ்ரீயின் அறிவுரை கேட்டு யுவான் சுவாங்
என்ற சீனத்துறவியால் பௌத்த சமயத்தைத் தழுவி
னார்.அவர் பின்பற்றியது மகாயான பௌத்தசமயம் .
பேரரசர் அகிம்சையைப் போற்றும் விதமாக
மிருகவதையைத் தடைசெய்தார். மக்கள் மாமிச
உணவருந்த அனுமதி இல்லை. பௌத்த விகாரங்
கள்,மடாலயங்கள், ஸ்தூபிகள் கட்டப்பட்டன. பழைய
விவகாரங்கள் புதுப்பிக்கப்பட்டன.ஒவ்வொரு ஆண்
டும் பௌத்த துறவிகளின் மகாநாடு தலைநகரில்
நடத்தப்பட்டது . பௌத்த சமயம் பற்றிய நல்லறிவு
இல்லாத துறவிகள் நீக்கப்பட்டனர்
.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பௌத்த சங்கங்களின் மகாநாடு பிரயாகையில் கூட்டப்பட்டது.
கௌதம புத்தரின் கொள்கைகள் விவாதிக்கப்பட்டன.
யுவான் சுவாங்கை சிறப்பிக்க ஹர்ஷர் அத்துறவி
யின் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினார். ஹர்ஷர் தானம் செய்வதில் ஈடுபாடு கொண்டவர்.இந்த மாநாட் டில் அவர் தன்னிடமிருந்த பொருட்கள் அனைத்தை
யும் ஏழைகளுக்கு வாரி வழங்கினார் இறுதியில்
மேலாடையையும் இழந்து தனது சகோதரி இராஜ்யஸ்ரீ
யிடம் கடன் பெற்றதாக அறிகிறோம். ஹர்ஷர் சமயப்
பாகுபாடின்றி அனைவருக்கும் உதவினார். பௌத்த
சமயத்திற்கு மாறிய பின்பும் அவர் சூரியன், சிவன்
போன்ற கடவுளரை வணங்கினார்.
ஹர்ஷர் நுண்கலைகள் மற்றும் இலக்கியம் ஆகி
யவற்றில் ஆர்வமுடையவர்.;கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் ஆதரித்தார். பேரரசர் எழுதிய
நாடகங்கள் ரத்னாவளி, பிரியதர்ஷினி, நாகானந்தா
ஆகியவை அனைவராலும் பாராட்டப்பட்டன. இரண்டு
சமஸ்கிருத கவிதைகளையும் இயற்றினார்.
ஹர்ஷரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும்
ஹர்ஷசரிதம் பாணபட்டரால் எழுதப்பட்டது.காதம்பரி
மற்றுமொரு புகழ்பெற்ற நாடகம். ஹர்ஷர் நல்ல ஓவி
யர்.
கல்வி வளர்ச்சியில் நாட்டம் கொண்ட பேரரசர்
கல்விநிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கி
னார். கோவிலகளும் மடங்களும்கல்விக்கூடங்களா
கச் செயல்பட்டன. அக்காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தில் மட்டும் 90 000 மாணவர் பயின்றவர். தர்ம
பாலர்,சந்திரபாலர், சீலபத்திரர் ஆகிய நல்லாசிரியர்
கள் பேரரசரின் ஆதரவைப் பெற்றிருந்தனர் அக்கால
த்தில் வாழ்ந்த சான்றோர்களான பத்ருஹரி, ஜெய
சேனர், திவாகரர் போன்றவர்களும் கௌரவிக்கப்
பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment