Friday, 11 August 2017

Vikramaditya

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap இரண்டாம் சந்திரகுப்தர். 2 பேரரசர் விக்ரமாதித்தன் எனும் சந்திரகுப்தர் சமயப்பொறையுடையவர். அவர் விஷ்ணுவை வழிபடும் வைணவர் எனினும் பௌத்தர், சமணர், சைவர் போன்ற பிற சமயத்தவரை வெறுக்கவில்லை. அவர்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். கலை இலக்கிய வளர்ச்சி : இந்த குப்த மன்னர் நுண்கலைகள் மற்றும் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் உடையவர். சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக இருந்தது. காலத்தால் அழியாத பல காவியங்கள் படைக்கப்பட் டன. பேரரசர் கவிஞர்களையும் கலைஞர்களையும் ஆதரித்தார். இசை, ஓவியம், அறிவியல், உலோகவியல் துறைகள் வளர்ச்சி யடைந்தன. சிற்பக்கலை, கட்டிடக்கலை சிறப்புக் கவனம் பெற்றன. பேரரசர் தனது உருவம் பொறித்த அழகிய தங்கநாணயங்கள் வெளியி ட்டார் .அவரது அரசவையில் கவி காளிதாஸ் இருந்தார். குடிமக்கள் உன்னதமான கலை இலக்கிய பண்பாட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். குமாரகுப்தர் (கி பி 413-453) விக்ரமாதித்தனுக்குப் பிறகு அவரது இளவரசன் குமாரகுப்தர் ஆட்சிக்கு வந்தார். அவரது நாணய ங்களைக் காணும்போது நல்லதொரு ஆட்சியாளராகத் தெரிகிறது . பேரரசு சிதைவுறாமல் காத்தார். அஸ்வமேத யாகம் நடந்தி 'மகேந்திர ஆதித்யா 'என்று பட்டம் சூட்டிக் கொண்டார் இவர். இவரது கால த்தில் குப்தர் பேரரசு தென்மேற்கு இந்திய பகுதிக்கு பரவிற்று. வணிக சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வணிக வருவாயைப் பெருக்கின. 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்த குமாரகுப்தர் இறுதிக்காலத்தில் ஹுனர், புஷ்யமித்ரன், படையெடுப்புக்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் குப்தப்பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக் கப்பட்டு 'உபாரிகர் மகாராஜா' எனும் ஆளுநர் பொறுப்பில் நிர்வாகம் இருந்தது. அவர்கள் அரசரின் உறவினர். குமாரகுப்தர் சமய சகிப்புத் தன்மை கொண்டவர். சிவ வழிபாடு செய்த இவர் அழகுமிளிரும் பல சிவாலயங்களைக் கட்டுவி த்தார் .மாண்ட சோர் எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இவரது பெருமையை உணர்த்துவதாம். பௌத்த மடாலயங்களைக் கட்டவும் உதவினார். குப்தப் பேரரசை சிதைவுறாமல் கட்டிக் காத்தவர் குமாரகுப்தர். வடக்கில் இமயமலைத் தொடர் முதல் தெற்கில் நர்மதை நதிக் கரை வரையில் கிழக்கில் வங்காளம் முதல் மேற்கில் சௌராஷ்ட்ரம் வரை. குப்தப் பேரரசு பரவி இருந்தது. (Cont'd ) குமாரகுப்தர், தங்கநாணயம்(courtesy :Wikipedia )

No comments:

Post a Comment