Friday, 11 August 2017
Chandragupta2
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap
விக்ரமாதித்தன். ..
இரண்டாம் சந்திர குப்தர் மணஉறவுகளால்
தனது அரசின் வலிமையைப் பெருக்கினார். அவர் நாகநாட்டு இளவரசி குபேரநாகாவை
மணம் புரிந்தார். தனது மகள் பிரபாவதியை
வாகாடக அரசன் இரண்டாம் ருத்ர சேனனுக்கு
மணம் செய்து கொடுத்தார்.
அரசு நிர்வாகம் :பாடலிபுத்திரத்திலிருந்து
பேரரசின் தலைநகர் உஜ்ஜைனிக்கு மாற்றப் பட்டது .அரசு நிர்வாகத்தின் தலைவர் பேரரசர் .
அவரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்தி ருந்தன.நிர்வாகத்தில் அவருக்கு உதவிட அமை
ச்சர்கள் குழு இருந்தது .நாட்டை அந்நியப் படை
யெடுப்பிலிருந்து காப்பதும் மக்கள் நலம்பேணு
வதும் பேரரசரின் பொறுப்பு.பிரதம அமைச்சர்
நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், காவல்
துறை அமைச்சர் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் அரசருக்கு நிர்வாக ஆலோசனை
களை வழங்கினர். பிற துறைகளை நிர்வகிக்க
அரசு அலுவலர்கள் இருந்தனர். குமாரமத்யாதி
கர்ணா, பாலாதிகர்ணா, கர்ணாரத பாதாதி,
தண்டுபசாதி கர்ணா, வினய சூரியர் மகாபிர
திகாரர்,மகாதர்த நாயகர்,உபாரிகர் ஆகிய அலு
வர்கள் உண்டு. இவர்களைப் பேரரசரே நியமி
த்தார்.
பேரரசு பல மாநிலங்களாக (தேசம்)பிரிக்
கப்பட்டு ஆளுநர்களின் பொறுப்பில் விடப்
பட்டன. பேரரசின் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு
கிராமிகா(கிராமத்தலைவர்).மாநில ஆளுநர்க
ளாக அரச குடும்பத்தினர் அனுப்பப்பட்டனர்.
அரசுக்கு வருவாய் தோல்வியுற்ற படையெ
டுப்பாளர் செலுத்திய தண்டம், மக்களிடமிருந்து
வருமான வரி, நிலவரி, வணிகர் செலுத்தும்
விற்பனை வரி ஆகியவை.
பேரரசரே உயர்நிலை நீதிபதி. அவரு டைய வாக்கு இறுதித் தீர்ப்பு. குற்றம் புரிந்தவர்
கடும் தண்டனைக்கு உள்ளாயினர். பெருந்
தொகை தண்டமாகப் பெறப்பட்டது.மரணதண்
டனையும் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment