Friday, 11 August 2017

Vikramaditya 2

இந்தியவரலாறு ஒரு மீள்பார்வை.Recap. *********** *********** ****** இரண்டாம்சந்திரகுப்தர் விக்ரமாதித்த ன் (கி பி380-413) இராமகுப்தருக்குப் பின்ஆட்சிக்கு வந்தவர் அவருடைய தம்பி விக்ரமாதித்தன்;இரண்டாம் சந்திரகுப்தர் என்றழைக்கப்பட்டார்.தனது தமை யன் இராமகுப்தரைக் கொன்று ஆட்சியைப் பிடி த்ததாக மிருக்ஷகடிகம் எனும் காப்பியம் கூறும். குப்தப் பேரரசர்களில் வீரமும், வல்லமையும் நல்லறிவும் கொண்டவர் இவர். பேரரசு விரிவாக்கம் : சமுத்திர குப்தர் மறைந்த பின் (கி பி 375) அவர் விட்டுச் சென்ற பேரரசை இராமகுப்தரால் காத்திட இயலவில்லை. மாநில ஆளுநர்கள் புரட்சி செய்தனர்.இதனால் குப்தப்பேரரசு சிதையத் தொடங்கியது. இரண்டாம் சந்திர குப்தர் பேரரசை மீட்க பல போர்களில் ஈடுபட்டார் இழந்த எல்லைப் புறங்களை மீட்டபின் ,பிற நாடுகளின் மீது படையெடுத்து வெற்றி கண் டார். வங்காளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை அட க்கி அந்நாட்டினைப் பேரரசுடன் இணைத்தார். அவந்திக் குடியரசை வென்று தனதாக்கிக் கொண்டார் ;சிந்து நதிக்கு அப்பால் இருந்த வகில்கா மலைநாட்டையும் வென்றார். அக்காலத்தில் வடஇந்தியப்பகுதிகளை ஆக் கிரமித்து வலிமையுடன் விளங்கியவர் சாகர் இன சத்ராப்புக்கள். சமுத்திர குப்தரால் கூட அவர்களை முழுமையாக அழிக்க முடியவில்லை. இரண்டாம் சந்திர குப்தர் வாகாடக அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களது ஆதரவுடன் மேலைச் சத்ராப்புக்கள் மீது படை யெடுத்துச் சென்றார். சாகர் அரசன் ருத்ரசின்கா போரில் மடிந்தான் .மாளவம், குஜராத் ,சௌரா ஷ்ட்ரம் குப்தப்பேரரசில்ணைந்தது . அரபிக் கடல் வரைப் பேரரசின் எல்லை விரிவடைந்தது .இத னால் மேலைநாடுகளுடன் நேரடி வணிக, கலா ச்சார உறவுகள் ஏற்பட வழி பிறந்தது. குப்தப் பேரரசின் தலைநகர் பாடலிபுத்திரத் திலிருந்து உஜ்ஜைனிக்கு மாற்றப்பட்டது. அந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் இமயமலைத் தொடர் முதல் தெற்கில் நர்மதை நதிக் கரை வரை,கிழக்கில் வங்காளம் முதல் மேற்கில் கத்தியவார் வரை பரந்து விரிந்திருந்தது. (contd -------- ----------- ---------- ------ துருவதேவி,விக்ரமாதித்தன் நாணயங்கள் (பிராகிருதம் மொழியில் பெயர்)குப்தர் அரசவை தற்கால படம்-வேதாளக்கதைகள்(36)

No comments:

Post a Comment