Friday, 18 August 2017

Huns invasion of India

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap * ஹுனர்கள் வருகை ******* ********* ******** ஹுனர் கள் படையெடுப்பு : நாகரீகம் இல்லாத முரட்டு குணம் படைத்த கூட்டம் தான் ஹுனர்கள். கொள்ளையடிப் பது இவர்தம் தொழில். ;வழியில் காண்பன வற்றை எல்லாம் அழிப்பது இயல்பு.எதிர்ப் படும் ஆண்,பெண்களைக் கொன்று நெருப் பிலிட்டு எரிப்பார்கள். இந்த நாடோடிக் கூட்ட த்திற்கு நாடுமில்லை ,சமயமில்லை , கடவுள் நம்பிக்கையும் இல்லை. இந்த ஹுனர்கள் சீனாவின் வடபகுதி யில் வாழ்ந்தவர்கள். அங்கு ஏற்பட்ட கடும் பஞ்சத்தாலும், யூ-ச்சி என்ற மற்றொரு கூட் டத்தால் விரட்டப்பட்டதாலும் இவர்கள் மத்திய ஆசியாவிற்குப் புலம்பெயர்ந்தனர். பின்னர் இரண்டாகப் பிரிந்து 'கருப்பு 'ஹுனர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும்,'வெள்ளை' ஹுனர்கள் பாரசீகத்திற்கும், அங்கிருந்து இந்தியாவிற்கும் வந்தனர். ரோமப்பேரரசு அழியக் காரணம் "அடி ல்லா'வின் தலைமையில் சென்ற ஹுனர் கள். அவனுடைய வம்சாவளியைச் சேர் ந்தவன்தான் பிந்நாட்களில் ஆசியக்கண்ட த்தைக் கலங்கடித்த மாவீரன் செங்கிஸ்கான் . ஹுனர் படையெடுப்பு :கி பி460ம் ஆண்டு ஹுனர்கள் குப்தப் பேரரசைத் தாக்கினர். குமாரகுப்தரின் இளவரசன் ஸ்கந்த குப்தன் வீரத்துடன் போரிட்டு ஹுனர்களைத் தோற் கடித்தான் .பெருங்கூட்டமாக ஹுனர்கள் ஸ்கந்த குப்தன் ஆட்சிக்காலத்தில் மீண்டும்படையெ டுத்து வந்தனர். குப்தப் பேரரசன் இந்தப் போரிலும் வென்று ஹுனர்களை விரட்டி யடித்தான். ஆனால் அவர்கள் ஸ்கந்த குப்தனின் மறைவுக்குப் பின்னர் எளிதில் குப்தப் பேரரசைக் கைப்பற்றினர். தோரமானர்:கி பி484ம் ஆண்டு தோரமானர் தலைமையில் ஹுனர் பஞ்சாப், சிந்து, இராஜ புதனம், மாளவம் ஆகிய பகுதிகளைக் கைப் பற்றினர் .மாளவம் பறிபோனதால் குப்தப் பேரரசு பெரும்பாதிப்பு அடைந்தது. தோரமா னர் "மகாஆதிராஜ்"பட்டம் சூட்டிக் கொண்டார் குப்த அரசன் நரசிம்ம குப்தன் தோரமானரு க்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டான். பின் னர் ஹுனர் காஷ்மீரத்தின் ஒரு பகுதியைப் பிடித்தனர். ஸகாலா நகரத்தை தலைமையில் டமாகக் கொண்டு ஆளத்தொடங்கினார் தோர மானர் .அவ்வரசன் சைவ சமயத்தை ஏற்று சிவவழிபாடு செய்தார்;கி பி 575 ல் மரணம டைந்தார் . மிகிரகுலன்:தோரமானருக்குப் பின் அவரது மகன் மிகிரகுலன் ஆட்சிக்கு வந்தான்.அவன் கொடுங்கோலன்; கொடூர குணம் படைத்த வன்.பௌத்த துறவிகளின் மடாலயங்களை யும் ஸ்தூபிகளையும் உடைத்து அழித்தான். பிற சமயத்தவரை ஈவிரக்கமின்றி கொன் றான்.பிராணிகளின் ஓலம் அவனது காதுக ளுக்கு இனிமையானதாம். யானைகளை மலை முகட்டில் இருந்து தள்ளி விட்டுக் கொல் அவனது பொழுதுபோக்கு. மேலும் பிராணி கள் சண்டையிடுவதைப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவனது கொடுமைகளைக் கண்டு மனம் கொதித்த இந்திய அரசர்களான மகதநாட்டு பாலாதித்யனும்,மத்திய இந்தியா வையாண்ட யசோதர்மனும் இணைந்து ஹுனர் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றனர் மிகிரகுலனைச் சிறை பிடித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அவன் காஷ்மீர த்தையும் காந்தாரத்தையும் வென்று தனதா க்கிக் கொண்டான். தற்போது 'சியால்கோட்'டைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய அவனது ஆட்சிக்கு உட்பட்டவை-ஆப்கானிஸ் தான், பஞ்சாப், மாளவம், இராஜஸ்தான். கிபி 540 ல் மிகிரகுலன் மறைந்தான். அதன் பின்னர் ஹுனர்களால் தமது அர சைக் காத்திட இயலவில்லை. இராஜ புத்திரர் களின் எழுச்சியால் பல பகுதிகள் பறிபோ யின.காலப்போக்கில் ஹுனர்கள் ஆட்சியை இழந்து பிற மக்களுடன் கலந்து வாழத்தொட ங்கினர் .இந்துசமயத்தை தழுவினர்.ஹுனர் களும் இந்தியராயினர். ஹுனர் படையெடுப்பின் விளைவுகள் : குப்தப் பேரரசு ஹுனர்களின் அடுத்தடுத்த படையயெடுப்புக்களால் அழிந்தது . இந்தியாவில் நிலவிய அரசியல் ஒருமைப் பாடும்,மக்களிடயில் ஒற்றுமையும் தளர்ந்தது பல சிற்றரசுக்கள் தோன்றின. நாடெங்கிலும் சட்டம் ஒழுங்கு இன்மையால் கொலைகள், கொள்ளைகள் அதிகரித்தன. ஹுனர் அழகிய மாளிகைகளையும் கட்டிடங் களையும், மடாலயங்களையும் அழித்துத் தரைமட்டமாக்கினர். நாட்டில் மக்கள் நலன் கருதி செயல்படும் ஆட்சி மறைந்து கொடுங்கோல் ஆட்சி வந்தது. ஹுனர்கள் இந்தியருடன் மணஉறவுகள் மேற்கொண்டமையால் புதிய சாதிப்பிரிவுகள் தோன்றின .சாதிப்பிரிவுகள் இறுகின.இந்து சாதிகள் ஹுனர்களைத் தமது ஜாதி களில் அனுமதிக்கவில்லை . புதிய உறவுகளால் தோன்றிய இனக்குழுக். கள் இராஜபுத்திரர்,குஜ்ஜார், ஜாட் ஆகியோர்

No comments:

Post a Comment