Sunday, 20 August 2017

Harsha 1

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap: ஹர்ஷவர்தனர்(கி பி 606-646) ********* ******** ****** இந்தியாவை ஆண்ட பேரரசர்களில் கடைசி யாக வந்தவர் ஹர்ஷவர்தனர். குறுநில மன் னராக இருந்த அவர் தனது மதி நுட்பத்தாலும் போர்க்குணத்தாலும் ஒரு பேரரசை உருவா க்கி ஆட்சி செய்தார் .பௌத்த சமயத்திற்கு அரசின் அங்கீகாரம் தந்தார். நல்லறிவும் திற மையும் கொண்ட ஹர்ஷர் சிறந்த நிர்வாகி யாகவும் விளங்கினார் ஹர்ஷர் ஆட்சிக்கு வரும் முன் இந்திய அரசியல் நிலை: குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தமையால் நாடு பல சிற்றரசுக்களாகச் சிதறியது. ஹுனர்கள் படையெடுத்து வந்து நாட்டின் பல பகுதிகளை ஆளத்தொடங்கினர். மிகிரகுலன் கொடுங் கோலாட்சி புரிந்தான்.மாளவமும் ,வல்லபியும் (குஜராத் )சுயாட்சி பெற்றன தென்னிந்திய அரசுக்களும் கட்டுப்பாட்டில் இல்லை.அசாமும் வங்காளமும் விடுதலை அடைந்தன.இந்தச் சூழலில்தான் ஹர்ஷர் தானேஸ்வரத்தின் அரசரானார். அண்டைநாடுகளுடன் போரிடத் தொடங்கினார் . குப்தப் பேரரசின் கடைசி அரசனை ஹர்ஷர் வென்றமையால் அப்பேரரசு முடிவுக்கு வந் தது. சியால்கோட்டைத் தலைநகராகக் கொண்ட ஹுனர் வடமேற்கு இந்தியா,ஆப்கானிஸ் தான் காபூல், காந்தாரம் ஆகிய பகுதிகளை ஆண்டனர். அவர்களை யசோதர்மன் வென்று தனது ஆதிக்கத்தை நிறுவினார். மாளவம் பிரிந்து போனது.இவை தவிர மைகாரிகள் நாடு,வாகாடகர் நாடு ஆகியவை தனித்து இயங்கின. ஹர்ஷரின் வெற்றிகள் ,அவரது ஆட்சிமுறை பற்றித் தெரிவிக்கும் ஆதாரங்கள் : சீனப்பயணி யுவான் சுவாங் எழுதிய 'சியூகி' என்ற புனிதப் பயணநூல்,பாணபட்டரின் 'ஹர்ஷசரிதம் ',மதுபன் தாமிரப் பட்டயங்கள், பானசேகரா பட்டயம், போன்றவை வரலாற் றுச் சான்றுகள். இவை தவிர ஹர்ஷர் கால த்து நாணயங்கள், சீனப்பேரரசின் பதிவேடு கள் நமக்குப் பல செய்திகளை அளிப்பவை. (Cont'd )

No comments:

Post a Comment