Saturday, 12 August 2017
Skanda Gupta
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை
ஸ்கந்த குப்தர்
(கி பி 455-467)
குமாரகுப்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஸ்கந்த குப்தர் பேரரசரானார். தனது
தந்தை க்குத் தொல்லை கொடுத்த ஹுனர்க
ளையும் புஷ்யமித்ரனையும் அடக்கினார். மீண்டும் ஹுனர் படையெடுத்து வந்த போது
போரிட்டு அவர்களை விரட்டியடித்தார். அவ்வெ
ற்றியின் நினைவாக பிரமாண்டமான விஷ்ணு
சிலை நிறுவப்பட்டது.
ஸ்கந்த குப்தர் தனது பேரரசைத் திறம்பட நிர்
வகித்தார். தலைநகர் உஜ்ஜைனியிலிருந்து
அயோத்திக்கு மாற்றப்பட்டது. திறமையான
ஆளுநர்களை நியமித்தார். மக்கள் நலன் கருதி
மாபெரும் நீர்நிலையான சுதன்சனா ஏரி கட்டப்
பட்டது.குடிமக்கள் மகிழ்ச்சியுடனும் செல்வச் செழிப்புடனும் வாழ்ந்தனர்.பொருளாதார நிலை
உயர்ந்து அரசின் வருவாய் பெருகிற்று. ஸ்கந்த
குப்தர் தனது உருவம் பொறித்த தங்கநாணய
ங்கள் வெளியிட்டார்.
அரசர் சமய சகிப்புத்தன்மை கொண் டவர்.
அவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஹுனர்
மீண்டும் மீண்டும் படையெடுத்து வந்தமையால்
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
கி பி467 ல் ஸ்கந்தகுப்தரின் மறைவுக்குப்
பின் ஆட்சிக்கு வந்தவர் புருகுப்தர்.அவர் கால
த்தில் பேரரசு வலிமை இழக்கத் தொடங்கிற்று
நரசிம்ம குப்தர், இரண்டாம் குமாரகுப்தர், பூத
குப்தர், பானுகுப்தர் அடுத்தடுத்து ஆண்டனர்.
(Cont'd )
தஙக,வெள்ளி நாணயங்கள் -
ஸ்கந்த குப்தர் (கடைசி குப்தப் பேரரசர்)பேரரசின் எல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment