Friday, 11 August 2017

Samudragupta

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap சமுத்திர குப்தர். .. ************* அண்டைநாடுகளுடன் அரசியல் உறவு: மாளவம், சௌராஷ்ட்ரம்,சாகிகள் நாடு, வடமேற்கு எல்லை நாடு,ஆகியவற்றுடன் சமுத்திர குப்தர் நட்புறவை வளர்த்தார். அவர்கள் பேரரசருக்கு பரிசுப்பொருட்கள் அளித்தும்,போர்க்காலங்களில் படைவீரர்களை அனுப்பியும் உதவினர். இலங்கை அரசன் மேகவர்மனுடன் நல்லு றது.கி கொண்ட சமுத்திர குப்தர் அந்நாட்டில் ருந்து வரும் பௌத்த துறவியரும், புனிதப் யணிகளும் தங்கிச் செல்ல மடாலயம் கட்ட உதவினார். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் வெற்றிகளைப் பறைசாற்றிட அஸ்வமேதயாகம் நடத்தினார்.வலிமை மிக்க இப்பேரரசனை எதிர் யாருமில்லை. அக்காலத்தில் குப்தப் பேரரசின் எல்லைக ளாக வடக்கில் இமயமலைகளும், தெற்கில் நர்மதை நதியும் , கிழக்கில் பிரம்மபுத்திராவும் மேற்கில் சம்பல் பள்ளத்தாக்கும் இருந்தன. இராம குப்தர் (கி பி 375-380) :சமுத்திர குப்த ரின் 40 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் அவ ரது மகன் இராமகுப்தர் ஆட்சிக்கு வந்தார்.இவ ரது 5 ஆண்டு கால ஆட்சி பற்றி விசாகதத்தரின் நாடகம்,பாணபட்டரின் ஹர்ஷசரிதம், இராஷ்ட்ர கூடர்களின் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. சாகர்கள் படையெடுத்து வந்து குப்தரை எளிதில் வென்று கப்பம் செலுத்த ஆணையிட்டனர். அர சியார் துருவதேவியையும் கவர்ந்து சென்றனர். இதனைக் கேள்வியுற்ற அரசனின் தம்பி சந்திரகுப்தர்(2) பெண் வேடத்தில் சாகர்களின் முகாமில் நுழைந்து தனதுஅண்ணன்.மனைவி யை மீட்டார். சாகர்களையும் போரிட்டு வென்று விரட்டியடித்தார். பின்னர் இராமகுப்தரைக் கொன்று, துருவதேவியைப் பட்டத்தரசியாக்கி அரியணையைக் கைப்பற்றினார் அவர். (Cont'd ) முத்ரா ராக்சக்ஷம் (நாடகம் ) விசாகதத்தர் Pic.courtsey wiki

No comments:

Post a Comment