Thursday, 7 September 2017

சிவகாசிப்பஞ்சம்( 1994 95)

சிவகாசிப்பஞ்சம் ****************** சாட்சியாபுரம்-சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில். உள்ளது.இங்கிருந்த கிருத்துவ பள்ளியில் 3,4 ,5 ம் வகுப்பு படித்தேன்.அது பெண் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி. வெளியிலிருந்து வரும் ஓரிரு என் போன்ற பசங்க ளையும் சேர்த்துக் கொள் வார்கள். இருவரில் மற்றொரு மாணவர் செல்வராஜ். தினமும் 2 கி மீ தூரம் நடந்து பள்ளிக்கு வருவோம். 1954-55 ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும்பஞ்சம்;வரட்சி. உண்ண உணவின்றி மக்கள் அலைந்தனர். மரவள்ளிக்கிழங்கு வேப்பம்பழம் போன்றவற்றைத் தேடிச்சென்று சாப்பிட்ட காலம்.வீடுகளில் கம்மங்கூழ்தான். புளித்தகஞ்சியில் களிக் கிண்டி கொடுத்தனர் எல்லா வகைக் கீரைகளும் உணவாகின. நானும் எனது தங்கை கைக்குழந்தையும் அம்மாவின் அரவணைப்பில். தந்தை காவல் துறை அதிகாரி. துப்பாக்கி தயாரிக்கும் பயி ற்சி க்காக செகந்திராபாத் சென்று விட்டார். இரண்டுஆண்டுகள்.அவர் அனுப்பும் பணம் தான்எங்கள் வீட்டு மாதச்செலவுக்கு.கடுமை யான வறுமை.சிவகாசியில் பட்டாசு,தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை தந்தன.ஒரு குரோஸ்(144) தீப்பெட்டி ஒட்ட கூலி அரை யணா.தீக்குச்சிகள் ஒரு சட்டம் அடுக்கினால் முக்காலணா(1ரூபாய்=-16அணா). அரசு நூல் நூற்றுத்தர அம்பர்சர்க்கா மெஷின்கள் வழங் கிற்று . இந்த வேலைகளில் அம்மாவிற்கு நான் உதவு வேன்.வேப்பமரத்தில் பழங்களைப் பறித்து வந்து காயவைத்து கொட்டைகளை விற்போம் நெடுஞ்சாலையில் மணி மாடுகள் மந்தையாக செல்லும். அவற்றை பின்தொடர்ந்து சென்று சாணம் சேகரித்து வந்து அம்மாவிடம் கொடுத் தால் அவர் வரட்டி தட்டி காயவைத்து அடுப்பு எரிக்க பயன்படுத்துவார். இந்த வரட்சி காலத் தின் உச்ச கட்டத்தில் காவல்துறையினர் பெரிய அண்டாக்களில் அமெரிக்கபால்பவுடர் கரைத்து கொதிக்க வைத்து குழந்தைகளு க்கு வழங்கினர். பள்ளிக்குச் செல்லும் எனது நிலை சொல்ல வொண்ணாதது. ஒட்டு போட்ட சட்டைதான் டிரவுசர்மேல்அரைஞாண் கயிறுதான்.ஒருநாள்நான்காம் வகுப்பில் ஆசிரியை பவல் மிஸ் எங்கள் இருவரையும் கூப்பிட்டு காலையில்சாப்பிட்டீர்களா என்று கேட்டார். எங்கள்முகம்வறறிப்போயிருந்ததால் அப்படிக் கேட்டார் .கொஞ்சம் கம்மங் கூழ் குடித்தோம் என்றோம் .பரவாயில்லை ஆசிரியர் விடுதிக்கு போய் சமையல்காரரைப் பாருங்க என் றார். அங்கு அந்த வேலையாள் இருவருக்கும் கேப்பைக்களி உருண்டைகள் தந்தார்.நீரில் கரைத்து குடித்தோம். வாழைப்பழம் தந்தார். சாப்பிட்டுவிட்டு வகுப்புக்கு வந்தோம். ஆசிரி யைகளும் களிதான் சாப்பிடுகிறார்கள் என அன்று தெரிந்தது . 3ம் வகுப்பு ஆசிரியை கிரேஸ் கிருத்துவ மதப் பாடல் களை இனிமையாகப் பாடுவார்அவை இன்னும் நினைவில் நிற்கின்றன. 5 ம் வகுப்பு ஆசிரியை ரமணி மிஸ் சிவகாசி யின் புகழ்பெற்ற தேவாலயப் பாதிரியார் மகள் .எங்களுக்கு நல்ல சட்டைத்துணிகள் வாங்கித் தந்தார்.அந்த ஆண்டு முழுவதும் அதே சட்டைதான். என் தந்தை பயிற்சி முடி ந்து செகந்திராபாத்திலிருந்து திரும்பினார். வறுமை ஒழிந்தது . தாயுள்ளத்தோடு எங்களுக்கு கல்வி புகட்டி அன்பு காட்டிய அந்த 3ஆசிரியைகளை இன் றளவும் நினைத்து வணங்குகிறேன். சிவகாசி ,சாட்சியாபுரம் கான்வென்ட், சர்ச் Images courtesy:Google.

Tuesday, 29 August 2017

Hacker on mobile

This day I am almost cheated.
A man called on me claiming that his name
Vijaykumar manager of State Bank of India.
He added that as it is last day for registering
Akhtar no.with my bank a/c.I shall be at loss.
My ATM card will be invalid.He asked me first
to tell my adhaar no. I obliged immediately fea
ring invalidation of my ATM card.
Then he asked for ATM serial no.and replied
forthwith.Then he demanded my pincode
which is not valid from next day and he offered
to tell new PIN. I told him my PIN with out least
suspicion. Immediately he gave me.new 4 digit
PIN.
After sometime he rang me up tell that adhaar is
not matching  with my mobile no. At this stage
I  recalled the warning from SBI that they never
call for any information from customer.I understo
odd that I have been taken for ride by a hacker.
Thank God there is a mistake  in my adhaar so
it is not working. The fellow again called me to
tell that I have given him wrong information.
I replied I don't need any new ATM card as I
don't  have any transaction with the bank and
my balance in my a/c is bare minimum. Finally
the fellow asked if I have  a/c in any other bank.
I cut my mobile and there was no more calls.

Tuesday, 22 August 2017

Yuan tsang

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை.Recap . ******** யுவான் சுவாங் கௌதம புத்தர் வாழ்ந்த புண்ணிய பூமி இந்தியா .அதனைக் காண வந்த பௌத்த துறவியர் பலர்.அதில்' "புனிதப் பயணிகளில் இளவரசன்'என்றழைக்கப்படுபவர் சீனத் துறவி யுவான் சுவாங். அவர் சீனநாட்டுச் செல்வந்தர் குடும்பத்தில் கி பி 630 ம் ஆண்டு பிறந்தார்.தனது சகோதரனைப் பின்பற்றி தானும் துறவியானார் .கி பி 644 ம் ஆண்டு புறப்பட்டு இந்தியாவிற்கு வந்தார்.15 ஆண்டு கள் இங்கு வாழ்ந்தார்.தனது பயணத்தை அனுபவங்களைச் 'சி-யூ-கி'என்ற நூலாக இய ற்றினார். இந்திய வரலாற்றுக்கு மிகச்சிறந்த ஆதார நூலாக இது விளங்குகிறது. யுவான் சுவாங் தான் கண்டவற்றை மட்டும் இதில் பதிவு செய்தமையால் நம்பகத்தன்மை உள் ளது.சி -யூ-கி தரும் செய்திகள் சில. அரசியல் நிலை:ஹர்ஷரின் தலைநகர் கன்னோசி அழகிய நகரம்;மக்கள் மகிழ்ச்சி யாக வாழ்ந்தனர். குறைவான வரிவசூலிக்க ப்பட்டது. பேரரசர் பெரிய போர்ப் படையை பராமரித்தார். சமூகத்தில் சாதிப்பிரிவுகள் கடுமை யாக கடைப்பிடிக்கப்பட்டன.சாதிமறுப்புத் திருமணங்கள் தடை செய்யப்பட்டன.மக்கள் மாமிச உணவு உண்பதில்லை. விவசாயம் நாட்டுமக்களின் முக்கிய தொழில். வணகமும் வளர்ச்சி பெற்றது. அனைத்து சமயங்களும் -பௌத்தம் சமணம்,வைதீக பிராமணம்-தடையின்றி வளர்ந்தன. பேரரசர் அனைத்து சமயத்தவ ருக்கும் ஆதரவளித்தார். அவர் சமயப் பொறையுடையவர் ;நன்கொடைகள் வழங்கி னார். இலக்கியமும் நுண்கலைகளும் வளர்ச்சி பெற்றன கல்விக்கூடங்கள் பெரு கின.நாளந்தா பல்கலைக்கழகம் புகழ் பெற்று விளங்கியது. . சீனப்பயணி யுவான் சுவாங் (G images)

Harsha 2

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap ஹர்ஷர் நிர்வாகச் சிறப்பு க்கள் **************** ஹர்ஷவர்தனர் ஒரு பேரரசை உருவா க்கியது மட்டுமல்ல; அதனை சிறப்பாக நிர்வ கித்தார். அனைத்து அதிகாரங்களும் பேரரச ரிடம் குவிந்திருந்தன. மக்கள் நலனே நல்லா ட்சிக்கு ஆதாரம் எனக் கருதினார் ஹர்ஷர். அவர்தம் கருத்துக்களையும், வாழ்க்கைநிலை யையும் கண்டறிய பேரரசர் மாறுவேடத்தில் நகரில் உலாவினார். அடிக்கடி பயணம் செய்து முகாமிட்டு நாட்டின் நிலைமையை நேரில் கண்டார் ஹர்ஷர். குப்தப் பேரரசர்களைப் போல இவருக்கும் திறன்கொண்ட அமைச்ச ரவை இருந்தது . பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டு ஆளுநர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடப்பட்டன. மாநிலம் ( புக்தி),பல விஷ்யா (மாவட்டம் )க்களாகவும்,பதாகா(வட்டம்)க்களா கவும்,கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன.மேக தார்,கிராமிகா ஆகிய அலுவலர்கள் இருந் தனர்.மக்கள் நலம்பேணும் நல்ல நிர்வாகம் இருந்தது குற்றவாளிகள் கடுமையாகத் தண் டிக்கப்பட்டமையால் நாட்டில் குற்றச்செயல் கள் குறைந்தன. ஆனால் நெடுஞ்சாலைகளில் திருடர்கள் தொல்லை இருந்தது . அரசுக்கு முதன்மை வருவாய் மக்களிடமிருந்து பெரும் நிலவரி; பிற வரிகளும் உண்டு. அனைத்தும் குறைவு என்பதால் மக்கள் மகிழ்ச்சியாக செலுத்தி னர்.அரசின் செயல்பாடுகள் அனைத்தும் பதிவேடு களில் எழுதப்பட்டன. ஹர்ஷர் நாட்டை அந்நியப் படையெடுப்பிலி ருந்து காத்திட வலிமையான போர்ப் படையை உருவாக்கினார். அதில் 60,000 யானைப்படையும் 100,000 குதிரைப் படையும் அடக்கம். ஹர்ஷர் சிவவழிபாடு செய்பவர். தனது தங்கை ராஜ்யஸ்ரீயின் அறிவுரை கேட்டு யுவான் சுவாங் என்ற சீனத்துறவியால் பௌத்த சமயத்தைத் தழுவி னார்.அவர் பின்பற்றியது மகாயான பௌத்தசமயம் . பேரரசர் அகிம்சையைப் போற்றும் விதமாக மிருகவதையைத் தடைசெய்தார். மக்கள் மாமிச உணவருந்த அனுமதி இல்லை. பௌத்த விகாரங் கள்,மடாலயங்கள், ஸ்தூபிகள் கட்டப்பட்டன. பழைய விவகாரங்கள் புதுப்பிக்கப்பட்டன.ஒவ்வொரு ஆண் டும் பௌத்த துறவிகளின் மகாநாடு தலைநகரில் நடத்தப்பட்டது . பௌத்த சமயம் பற்றிய நல்லறிவு இல்லாத துறவிகள் நீக்கப்பட்டனர் .ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பௌத்த சங்கங்களின் மகாநாடு பிரயாகையில் கூட்டப்பட்டது. கௌதம புத்தரின் கொள்கைகள் விவாதிக்கப்பட்டன. யுவான் சுவாங்கை சிறப்பிக்க ஹர்ஷர் அத்துறவி யின் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினார். ஹர்ஷர் தானம் செய்வதில் ஈடுபாடு கொண்டவர்.இந்த மாநாட் டில் அவர் தன்னிடமிருந்த பொருட்கள் அனைத்தை யும் ஏழைகளுக்கு வாரி வழங்கினார் இறுதியில் மேலாடையையும் இழந்து தனது சகோதரி இராஜ்யஸ்ரீ யிடம் கடன் பெற்றதாக அறிகிறோம். ஹர்ஷர் சமயப் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவினார். பௌத்த சமயத்திற்கு மாறிய பின்பும் அவர் சூரியன், சிவன் போன்ற கடவுளரை வணங்கினார். ஹர்ஷர் நுண்கலைகள் மற்றும் இலக்கியம் ஆகி யவற்றில் ஆர்வமுடையவர்.;கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் ஆதரித்தார். பேரரசர் எழுதிய நாடகங்கள் ரத்னாவளி, பிரியதர்ஷினி, நாகானந்தா ஆகியவை அனைவராலும் பாராட்டப்பட்டன. இரண்டு சமஸ்கிருத கவிதைகளையும் இயற்றினார். ஹர்ஷரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஹர்ஷசரிதம் பாணபட்டரால் எழுதப்பட்டது.காதம்பரி மற்றுமொரு புகழ்பெற்ற நாடகம். ஹர்ஷர் நல்ல ஓவி யர். கல்வி வளர்ச்சியில் நாட்டம் கொண்ட பேரரசர் கல்விநிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கி னார். கோவிலகளும் மடங்களும்கல்விக்கூடங்களா கச் செயல்பட்டன. அக்காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தில் மட்டும் 90 000 மாணவர் பயின்றவர். தர்ம பாலர்,சந்திரபாலர், சீலபத்திரர் ஆகிய நல்லாசிரியர் கள் பேரரசரின் ஆதரவைப் பெற்றிருந்தனர் அக்கால த்தில் வாழ்ந்த சான்றோர்களான பத்ருஹரி, ஜெய சேனர், திவாகரர் போன்றவர்களும் கௌரவிக்கப் பட்டனர்.

Sunday, 20 August 2017

Harsha 1

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap: ஹர்ஷவர்தனர்(கி பி 606-646) ********* ******** ****** இந்தியாவை ஆண்ட பேரரசர்களில் கடைசி யாக வந்தவர் ஹர்ஷவர்தனர். குறுநில மன் னராக இருந்த அவர் தனது மதி நுட்பத்தாலும் போர்க்குணத்தாலும் ஒரு பேரரசை உருவா க்கி ஆட்சி செய்தார் .பௌத்த சமயத்திற்கு அரசின் அங்கீகாரம் தந்தார். நல்லறிவும் திற மையும் கொண்ட ஹர்ஷர் சிறந்த நிர்வாகி யாகவும் விளங்கினார் ஹர்ஷர் ஆட்சிக்கு வரும் முன் இந்திய அரசியல் நிலை: குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தமையால் நாடு பல சிற்றரசுக்களாகச் சிதறியது. ஹுனர்கள் படையெடுத்து வந்து நாட்டின் பல பகுதிகளை ஆளத்தொடங்கினர். மிகிரகுலன் கொடுங் கோலாட்சி புரிந்தான்.மாளவமும் ,வல்லபியும் (குஜராத் )சுயாட்சி பெற்றன தென்னிந்திய அரசுக்களும் கட்டுப்பாட்டில் இல்லை.அசாமும் வங்காளமும் விடுதலை அடைந்தன.இந்தச் சூழலில்தான் ஹர்ஷர் தானேஸ்வரத்தின் அரசரானார். அண்டைநாடுகளுடன் போரிடத் தொடங்கினார் . குப்தப் பேரரசின் கடைசி அரசனை ஹர்ஷர் வென்றமையால் அப்பேரரசு முடிவுக்கு வந் தது. சியால்கோட்டைத் தலைநகராகக் கொண்ட ஹுனர் வடமேற்கு இந்தியா,ஆப்கானிஸ் தான் காபூல், காந்தாரம் ஆகிய பகுதிகளை ஆண்டனர். அவர்களை யசோதர்மன் வென்று தனது ஆதிக்கத்தை நிறுவினார். மாளவம் பிரிந்து போனது.இவை தவிர மைகாரிகள் நாடு,வாகாடகர் நாடு ஆகியவை தனித்து இயங்கின. ஹர்ஷரின் வெற்றிகள் ,அவரது ஆட்சிமுறை பற்றித் தெரிவிக்கும் ஆதாரங்கள் : சீனப்பயணி யுவான் சுவாங் எழுதிய 'சியூகி' என்ற புனிதப் பயணநூல்,பாணபட்டரின் 'ஹர்ஷசரிதம் ',மதுபன் தாமிரப் பட்டயங்கள், பானசேகரா பட்டயம், போன்றவை வரலாற் றுச் சான்றுகள். இவை தவிர ஹர்ஷர் கால த்து நாணயங்கள், சீனப்பேரரசின் பதிவேடு கள் நமக்குப் பல செய்திகளை அளிப்பவை. (Cont'd )

Friday, 18 August 2017

Huns invasion of India

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap * ஹுனர்கள் வருகை ******* ********* ******** ஹுனர் கள் படையெடுப்பு : நாகரீகம் இல்லாத முரட்டு குணம் படைத்த கூட்டம் தான் ஹுனர்கள். கொள்ளையடிப் பது இவர்தம் தொழில். ;வழியில் காண்பன வற்றை எல்லாம் அழிப்பது இயல்பு.எதிர்ப் படும் ஆண்,பெண்களைக் கொன்று நெருப் பிலிட்டு எரிப்பார்கள். இந்த நாடோடிக் கூட்ட த்திற்கு நாடுமில்லை ,சமயமில்லை , கடவுள் நம்பிக்கையும் இல்லை. இந்த ஹுனர்கள் சீனாவின் வடபகுதி யில் வாழ்ந்தவர்கள். அங்கு ஏற்பட்ட கடும் பஞ்சத்தாலும், யூ-ச்சி என்ற மற்றொரு கூட் டத்தால் விரட்டப்பட்டதாலும் இவர்கள் மத்திய ஆசியாவிற்குப் புலம்பெயர்ந்தனர். பின்னர் இரண்டாகப் பிரிந்து 'கருப்பு 'ஹுனர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும்,'வெள்ளை' ஹுனர்கள் பாரசீகத்திற்கும், அங்கிருந்து இந்தியாவிற்கும் வந்தனர். ரோமப்பேரரசு அழியக் காரணம் "அடி ல்லா'வின் தலைமையில் சென்ற ஹுனர் கள். அவனுடைய வம்சாவளியைச் சேர் ந்தவன்தான் பிந்நாட்களில் ஆசியக்கண்ட த்தைக் கலங்கடித்த மாவீரன் செங்கிஸ்கான் . ஹுனர் படையெடுப்பு :கி பி460ம் ஆண்டு ஹுனர்கள் குப்தப் பேரரசைத் தாக்கினர். குமாரகுப்தரின் இளவரசன் ஸ்கந்த குப்தன் வீரத்துடன் போரிட்டு ஹுனர்களைத் தோற் கடித்தான் .பெருங்கூட்டமாக ஹுனர்கள் ஸ்கந்த குப்தன் ஆட்சிக்காலத்தில் மீண்டும்படையெ டுத்து வந்தனர். குப்தப் பேரரசன் இந்தப் போரிலும் வென்று ஹுனர்களை விரட்டி யடித்தான். ஆனால் அவர்கள் ஸ்கந்த குப்தனின் மறைவுக்குப் பின்னர் எளிதில் குப்தப் பேரரசைக் கைப்பற்றினர். தோரமானர்:கி பி484ம் ஆண்டு தோரமானர் தலைமையில் ஹுனர் பஞ்சாப், சிந்து, இராஜ புதனம், மாளவம் ஆகிய பகுதிகளைக் கைப் பற்றினர் .மாளவம் பறிபோனதால் குப்தப் பேரரசு பெரும்பாதிப்பு அடைந்தது. தோரமா னர் "மகாஆதிராஜ்"பட்டம் சூட்டிக் கொண்டார் குப்த அரசன் நரசிம்ம குப்தன் தோரமானரு க்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டான். பின் னர் ஹுனர் காஷ்மீரத்தின் ஒரு பகுதியைப் பிடித்தனர். ஸகாலா நகரத்தை தலைமையில் டமாகக் கொண்டு ஆளத்தொடங்கினார் தோர மானர் .அவ்வரசன் சைவ சமயத்தை ஏற்று சிவவழிபாடு செய்தார்;கி பி 575 ல் மரணம டைந்தார் . மிகிரகுலன்:தோரமானருக்குப் பின் அவரது மகன் மிகிரகுலன் ஆட்சிக்கு வந்தான்.அவன் கொடுங்கோலன்; கொடூர குணம் படைத்த வன்.பௌத்த துறவிகளின் மடாலயங்களை யும் ஸ்தூபிகளையும் உடைத்து அழித்தான். பிற சமயத்தவரை ஈவிரக்கமின்றி கொன் றான்.பிராணிகளின் ஓலம் அவனது காதுக ளுக்கு இனிமையானதாம். யானைகளை மலை முகட்டில் இருந்து தள்ளி விட்டுக் கொல் அவனது பொழுதுபோக்கு. மேலும் பிராணி கள் சண்டையிடுவதைப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவனது கொடுமைகளைக் கண்டு மனம் கொதித்த இந்திய அரசர்களான மகதநாட்டு பாலாதித்யனும்,மத்திய இந்தியா வையாண்ட யசோதர்மனும் இணைந்து ஹுனர் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றனர் மிகிரகுலனைச் சிறை பிடித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அவன் காஷ்மீர த்தையும் காந்தாரத்தையும் வென்று தனதா க்கிக் கொண்டான். தற்போது 'சியால்கோட்'டைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய அவனது ஆட்சிக்கு உட்பட்டவை-ஆப்கானிஸ் தான், பஞ்சாப், மாளவம், இராஜஸ்தான். கிபி 540 ல் மிகிரகுலன் மறைந்தான். அதன் பின்னர் ஹுனர்களால் தமது அர சைக் காத்திட இயலவில்லை. இராஜ புத்திரர் களின் எழுச்சியால் பல பகுதிகள் பறிபோ யின.காலப்போக்கில் ஹுனர்கள் ஆட்சியை இழந்து பிற மக்களுடன் கலந்து வாழத்தொட ங்கினர் .இந்துசமயத்தை தழுவினர்.ஹுனர் களும் இந்தியராயினர். ஹுனர் படையெடுப்பின் விளைவுகள் : குப்தப் பேரரசு ஹுனர்களின் அடுத்தடுத்த படையயெடுப்புக்களால் அழிந்தது . இந்தியாவில் நிலவிய அரசியல் ஒருமைப் பாடும்,மக்களிடயில் ஒற்றுமையும் தளர்ந்தது பல சிற்றரசுக்கள் தோன்றின. நாடெங்கிலும் சட்டம் ஒழுங்கு இன்மையால் கொலைகள், கொள்ளைகள் அதிகரித்தன. ஹுனர் அழகிய மாளிகைகளையும் கட்டிடங் களையும், மடாலயங்களையும் அழித்துத் தரைமட்டமாக்கினர். நாட்டில் மக்கள் நலன் கருதி செயல்படும் ஆட்சி மறைந்து கொடுங்கோல் ஆட்சி வந்தது. ஹுனர்கள் இந்தியருடன் மணஉறவுகள் மேற்கொண்டமையால் புதிய சாதிப்பிரிவுகள் தோன்றின .சாதிப்பிரிவுகள் இறுகின.இந்து சாதிகள் ஹுனர்களைத் தமது ஜாதி களில் அனுமதிக்கவில்லை . புதிய உறவுகளால் தோன்றிய இனக்குழுக். கள் இராஜபுத்திரர்,குஜ்ஜார், ஜாட் ஆகியோர்

Monday, 14 August 2017

India over rated

Is ancient India overrated ? A mindblowing analysis by Chinese Ex Professor from University of Toronto Author: Pak L. Huide Publication: Postcard.news Date: July 22, 2017 URL: http://postcard.news/is-ancient-india-overrated-a-mindblowing-analysis-by-chinese-professor-from-university-of-toronto/ Seriously? If anything, ancient India is sorely UNDERRATED. I mean, I’m an ethnic Chinese living in Canada. But when I was growing up in Canada, I knew jackshit about India. Besides maybe curry. I mean, people here have a vague understanding of Chinese history but they have NO idea about Indian history. For example, most people know that the Middle Kingdom is how China referred to herself but how many people know about Bharat? How many know about even the Guptas? People know that China was famous for ceramics and tea but how many people know about ancient India’s achievement in metallurgy? People k now about the Great Wall, but how many know about the great temples of southern India? This is partly due to the lackluster historical records that ancient Indians kept and also partly because modern Indians have a tendency to look down upon their ancient heritage and view western ideas and ideals as superior. China also has this problem but not nearly to the same extent. The discovery that the earth is spherical is credited to the Greek philosopher Aristotle, who was born in 384 BCE. However, very few people know that a man from ancient India established the idea of “spherical earth” during the 8th-9th century BCE. The man was called Yajnavalkya who first discovered that the earth is round. He was the first to propose the heliocentric system of the planets. In his work Shatapatha Brahmana, he proposed that the earth and the other planets move around the sun. He also calculated the period of one year as 365.24675 days. This is only 6 minutes longer than the current established time of 365.24220 days Take the example of Kung Fu. The whole world knows about the martial art called Kung Fu. The person who founded Kung Fu was none other than a prince of the Pallava dynasty from Kanchipuram, Tamil Nadu who visited China during the 5th century CE. He became th e 28th patriarch of Buddhism and established the Shaolin temple and founded the martial art which became world famous today. That prince was called Bodhidharma. But how many people know about that Kung Fu and Shaolin was founded by an Indian? Precisely, if Indians are unaware of their heritage, why should they expect that someone else will know about their history and achievement? The achievements of ancient Indians are lost in obscurity. India’s ancestors had invented many ways which eased the basic life of a commo n man. These inventions may seem primitive today, but we can’t ignore the fact that these were revolutionary achievements during their era. The Indus Valley civilization is known for the broad and the sanitized drainage system which was no less than a miracle during those ancient times. But how many people know that the ancient Indians from Indus Valley Civilization (IVC) were the first to invent a flush toilet? The people around the world use rulers to measure everything. How many people know that Indus Valley Civi lization was the first to invent the rulers? A ruler has been found at Lothal which is 4400 years old. Not only this, the people of IVC were the first to invent buttons. The world knows that the Chinese discovered the art of weaving silk dresses. How many people know that IVC people were the first to weave dresses made of cottons The ancient Indians were first to invent the weighing scales. Archaeologists have discovered weighs and scales from the excavation sites of Harappa, Mohenjodaro, Lothal etc. These scales were extensively used for trading. Ancient India has given Yoga to the world- which is widely practiced almost all over the world to keep people fit and fine. Models, supermodels, film stars, athletes, etc. regularly attends Yoga session to keep themselves fit. Aryabhatta, Brahmagupta and Bhaskaracharya were the three eminent mathematicians from ancient India who established the concept of zero as a mathematical value in different eras. Brahmagupta was the first to invent a symbol for the value “shunya” (zero). Bhaskaracharya was the first to use it as algebra. The oldest inscription of zero can be found at the Chaturbhuj temple in Gwalior fort Ancient Indians were pioneers in the field of chemistry too. The person who first invented the “atomic theory” was none other than Acharya Kanad from ancient India. He explained the atomic theory using terms like “Anu”(atom) and “Paramanu”(nucleus). Ancient Indians were advanced in medical science too. The great physician of the time, Sage Shusrut was the first to carry out different surgeries which included plastic surgery and cataract surgery. His works are composed in his book called Shusrut Samhita (The works of Shusrut). The world hardly knows about Charak, the great specialist in medicine from ancient India. He was the first physician to establish the problems and medicinal treaties in fields like physiology, embryology, digestion, sexual disease, immunity, etc. His works on Ayurveda is composed as a book called Charak Samhita (The works of Charak). The Chera dynasty of Tamil Nadu invented the idea of producing finest steel by heating black magnetite ore along with carbon. The mixture was kept in a crucible and heated in charcoal furnace. The Wootz Steel originated from India, but today, is popular as Damascus Steel. India’s monuments are grand and are probably, the only way others recognize the importance of ancient Indian civilization. India’s gigantic monuments bear the testimony of the greatness of ancient India. This is the Kailash Temple. It is a megalith which was constructed by cutting out a single rock- a mountain. The whole mountain was cut from the top to carve out the temple campus. This is Dwarka, the grand and mysterious city submerged in the Arabian sea on the extreme west of India. The submerged heritage is no less than a treasure bearing the pride of Indian race! This is Khajuraho, the marvel where the rocks has taken the form. The best of our monuments are not built on soft rocks like marble. Our ancestors carved out even the hardest of the rocks to give it a beauty. The grandest and largest temple in India- Brihadeshwara temple. Breathtaking, isn’t it? India is the land of grandest temples and breathtaking architectures. The heritage of India can’t be encapsulated within a small answer! To end the answer with, I will now share my personal favorite- The Sun Temple of Konark! The main structure of the temple was partially destroyed by invaders like Kalapahad- a military general of the medieval period. Later, the prime structure totally collapsed when British stored gunpowder inside the structure and it caught fire accidentally. Even though the main temple is gone, the amount of what left is still breathtaking by every means. Nobel Laureate Rabindranath Tagore wrote about Konark- “here the language of stone surpasses the language of man.” The whole temple was designed like a huge chariot of Sun God having 24 wheels pulled by 7 horses. Each wheel had 8 major spokes denoting 1 prahar (Hindu time period of 3 hours). There was a huge magnet at the top of the temple which used to keep the idol of the Sun deity suspended in the air due to magnetic arrangement. Still think, that ancient India is overrated? Ancient India was a hub of culture and technology and the absolute capital of world spirituality. I could talk about India for hours. India is many things but OVERRATED is definitely not one of them.

குப்தர் காலம் பொற்காலம். ..2

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap ************ குப்தப் பேரரசர்களின் ஆட்சிக்காலம் பொற்காலம். ...2 வடமொழி வளர்ச்சி :பௌத்த, சமணர் சமயங் கள் பாலி மொழி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி னர்.பெருவாரியான மக்கள் பேசிய பாலியில் தான் புத்தரின் போதனைகள் இருந்தன.தற் போது சிறந்த காவியங்கள் சமஸ்கிருத மொழி யில் எழுதப்பட்டன.அம்மொழிதான் குப்தர்கள் ஆட்சி மொழி. சமயப்பொறை:குப்தப் பேரரசர்கள் சமயசகிப்பு த்தன்மை கொண்டவர்கள். அவர்கள் சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்திருந்த போதும் பௌத்த சமண சமயங்களை வெறுக்கவில்லை. இலக்கிய வளர்ச்சி:சமஸ்கிருத மொழி வல்லுனர் பலர் அரசர்களின் ஆதரவு பெற்று பல நூல்களை படைத்தனர். மகாகவி ஹரி சேனர் வாழ்ந்த காலம் இது. கவி காளிதாசர் சாகுந்தலம், மேக சந்தேசம் போன்ற அழியா காவியங்களைப் படைத்தார். மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதி நூல்கள் புதிய வடிவம் பெற்றன. மிமாம்ச சூத் திரத்திற்கு உரையெழுதப்பட்டது. அசாங்கா என்ற புத்தபிட்சு ஏராளமான தத்துவ நூற்களை இயற்றினார். அமரகோசம் என்ற புகழ் பெற்ற காவியம் அமர்சிங்கால் எழுதப்பட்டது.குமாரகுப் தனின் கதையைக் கூறும் மிருக்ஷகடிகம் விசா கதத்தரால் இயற்றப்பட்டது.பஞ்சதந்திரக் கதை கள்,பட்டி விக்ரமாதித்தன் கதைகள், வேதாளக் கதைகள் ஆகிய காலத்தால் அழியாத புகழ் பெற்ற கர்ணபரம்பரைக் கதைகள் இக்காலத் தவை. கல்வி வளர்ச்சி :குப்தர்கள் ஆட்சியில் கல்வி வளர்ச்சியும் சிறந்திருந்தது.தட்சசீலம்,நாளந்தா பல்கலைக்கழகங்களில் கல்வி பயில உலகெங் கிலும் இருந்து மாணவர்கள் வந்தனர். அஜந்தா சாரநாத் ஆகிய இடங்களிலும் உயர்கல்வி மைய ங்கள் இருந்தன.இவை தவிர பாடலிபுத்திரம் மதுரா,வாரணாசி, உஜ்ஜைனி,வல்லபி, ஆகிய நகரங்களிலும் நல்ல கல்வி நிலையங்கள் இரு தன. நாடெங்கும் பல புதிய பாடசாலைகள் கட் டப்பட்டன அறிவியல் முன்னேற்றம் : அறிவியல் வளர்ச்சி யிலும் குப்தர் காலம் மேம்பட்டிருந்தது. ஆரிய பட்டர் "சூரிய சித்தாந்தம் " இயற்றினார். அது சூரிய சந்திர கிரகணங்கள் நிகழ்வதை விளக் குகிறது கணித உலகிற்கு பூஜ்யத்தை(zero) அறிமுகம் செய்தார். தாவரவியல், வானவியல் நூல்களை எழுதிப் புகழ்பெற்றார் வராகமிகிரர். உலோகவியல் (metallurgy)வளர்ச்சி பெற்றது. மருத்துவ ஆராய்ச்சிகள் செய்த சாரகர்,நாகார் ஜுனர் இக்காலத்தில் வாழ்ந்தனர். அந்த துறைக்கு பிரம்ம குப்தரின் பங்களிப்பு மகத் யானது. நுண்கலைகள் வளர்ச்சி :ஓவியக்கலை, சிற்பக் கலை ,கட்டிடக்கலை, இசை ,நாட்டியம் போன்ற கலைகள் வளர்ந்தன.குப்தப்பேரரசர் பிரமாண்ட மான மாளிகைகளையும்,கோவில் களையும் கட்டினர்.காஞ்சிபுரத்தில் புத்தர் கோவில், புமா ராவில் சிவன்கோவில், அஜாய்கரில் பார்வதி கோவில் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சிற்பக்கலையும் பெருவளர்ச்சி கண்டது. கடவுளர் உருவங்களும், அரசர்,அரசியர் உருவங்களும் சிலைகளாக வடிக்கப் பட்ட ன.இந்துக்கள் வழி படும் அனைத்து தெய்வச்சிற்பங்களும் குப்தர் காலச் சிற்பிகளின் கற்பனையில் உருவான கைவண்ணங்கள்.இந்தியப் பண்பாட்டை ஒட்டி அவை செய்யப்பட்டன. அழகிய பெருங்குகைகளும் ஓவியங்களும் குப்தர் காலத்தவை.அஜந்தா. குகை ஓவியங் களும் சிலைகளும் உலகப். புகழ்பெற்றவை. அவை கௌதம புத்தரின் வரலாற்றைச் சித்தரி க்கின்றன. அஜந்தா ஓவியங்களும் நெஞ்சை அள்ளுபவை. மக்கள் குரலிசை, கருவிஇசை இரண்டிலும் ஆர்வம் காட்டினர். சமுத்திர குப்தர ஒரு வீணை இசைக்கலைஞர் என்பதை அவரது நாணயங் களிலிருந்து அறியலாம். இசையோடு நாட்டியக் கலையும் வளர்ந்தது. சதுராடும் நடனமங்கையர் பலர் இருந்தனர். வணிக வளர்ச்சி :வணிகமும், தொழில் துறை யும் வளர்ந்தன.ரோமப்பேரரசு,சீனா,இலங்கை மற்றும் கீழ்த்திசை ஆசிய நாடுகளுடன்இந்தியா வணிகத்தொடர்பில் இருந்தது.காம்பே,புரோச் துறைமுகங்கள் ஏற்றுமதி மையங்கள். அந்நிய செலாவணி இந்தியருக்கு சாதகமாக இருந்தது. பேரரசு விரிவடைதல்:குப்தப் பேரரசர்கள் இந்திய எல்லைகளைத் தாண்டிப் படையெடுத்துச் சென்று வெற்றிகளக் குவித்தனர்.ஜாவா, சும த்ரா, கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியர் குடியேற்றம் நிகழ்ந்தது. மக்கள் கால்களைக் கடந்தும் உயர்ந்த மலைப் பகுதிகளிலும் குடியேறினர். இங்ஙனம் அரசியல், பொருளாதாரம்,சமூக வாழ்க்கை, கலாச்சாரம்,பண்பாடு, வணிகம் ஆகிய அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று நாட்டுமக்கள் அமைதியாகவும்,செல்வ ச்செழிப்போடும் வாழ்ந்தமையால் குப்தப் பேரரசர்களின் ஆட்சிக்காலம் "பொற்காலம் " என்று அழைக்கப்படுகிறது. ********************** ஆரிய பட்டர்-சூரிய சந்திர கிரகணங்கள் பற்றி விளக்கம் அளித்தார்; பூஜ்யம்,22/7 இவற்றை உலகிற்கு அளித்த கணித மேதை; காளிதாசர் படைத்த சாகுந்தலம் காவியத்தில் ஒரு காட்சி (ஓவியர்-இராஜா இரவிவர்மா/G images-நன்றி)

Saturday, 12 August 2017

Skanda Gupta

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை ஸ்கந்த குப்தர் (கி பி 455-467) குமாரகுப்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஸ்கந்த குப்தர் பேரரசரானார். தனது தந்தை க்குத் தொல்லை கொடுத்த ஹுனர்க ளையும் புஷ்யமித்ரனையும் அடக்கினார். மீண்டும் ஹுனர் படையெடுத்து வந்த போது போரிட்டு அவர்களை விரட்டியடித்தார். அவ்வெ ற்றியின் நினைவாக பிரமாண்டமான விஷ்ணு சிலை நிறுவப்பட்டது. ஸ்கந்த குப்தர் தனது பேரரசைத் திறம்பட நிர் வகித்தார். தலைநகர் உஜ்ஜைனியிலிருந்து அயோத்திக்கு மாற்றப்பட்டது. திறமையான ஆளுநர்களை நியமித்தார். மக்கள் நலன் கருதி மாபெரும் நீர்நிலையான சுதன்சனா ஏரி கட்டப் பட்டது.குடிமக்கள் மகிழ்ச்சியுடனும் செல்வச் செழிப்புடனும் வாழ்ந்தனர்.பொருளாதார நிலை உயர்ந்து அரசின் வருவாய் பெருகிற்று. ஸ்கந்த குப்தர் தனது உருவம் பொறித்த தங்கநாணய ங்கள் வெளியிட்டார். அரசர் சமய சகிப்புத்தன்மை கொண் டவர். அவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஹுனர் மீண்டும் மீண்டும் படையெடுத்து வந்தமையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. கி பி467 ல் ஸ்கந்தகுப்தரின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் புருகுப்தர்.அவர் கால த்தில் பேரரசு வலிமை இழக்கத் தொடங்கிற்று நரசிம்ம குப்தர், இரண்டாம் குமாரகுப்தர், பூத குப்தர், பானுகுப்தர் அடுத்தடுத்து ஆண்டனர். (Cont'd ) தஙக,வெள்ளி நாணயங்கள் - ஸ்கந்த குப்தர் (கடைசி குப்தப் பேரரசர்)பேரரசின் எல்லை.

Kumara guptha

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap இரண்டாம் சந்திரகுப்தர். 2 பேரரசர் விக்ரமாதித்தன் எனும் சந்திரகுப்தர் சமயப்பொறையுடையவர். அவர் விஷ்ணுவை வழிபடும் வைணவர் எனினும் பௌத்தர், சமணர், சைவர் போன்ற பிற சமயத்தவரை வெறுக்கவில்லை. அவர்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். கலை இலக்கிய வளர்ச்சி : இந்த குப்த மன்னர் நுண்கலைகள் மற்றும் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் உடையவர். சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக இருந்தது. காலத்தால் அழியாத பல காவியங்கள் படைக்கப்பட் டன. பேரரசர் கவிஞர்களையும் கலைஞர்களையும் ஆதரித்தார். இசை, ஓவியம், அறிவியல், உலோகவியல் துறைகள் வளர்ச்சி யடைந்தன. சிற்பக்கலை, கட்டிடக்கலை சிறப்புக் கவனம் பெற்றன. பேரரசர் தனது உருவம் பொறித்த அழகிய தங்கநாணயங்கள் வெளியி ட்டார் .அவரது அரசவையில் கவி காளிதாஸ் இருந்தார். குடிமக்கள் உன்னதமான கலை இலக்கிய பண்பாட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். குமாரகுப்தர் (கி பி 413-453) விக்ரமாதித்தனுக்குப் பிறகு அவரது இளவரசன் குமாரகுப்தர் ஆட்சிக்கு வந்தார். அவரது நாணய ங்களைக் காணும்போது நல்லதொரு ஆட்சியாளராகத் தெரிகிறது . பேரரசு சிதைவுறாமல் காத்தார். அஸ்வமேத யாகம் நடந்தி 'மகேந்திர ஆதித்யா 'என்று பட்டம் சூட்டிக் கொண்டார் இவர். இவரது கால த்தில் குப்தர் பேரரசு தென்மேற்கு இந்திய பகுதிக்கு பரவிற்று. வணிக சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வணிக வருவாயைப் பெருக்கின. 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்த குமாரகுப்தர் இறுதிக்காலத்தில் ஹுனர், புஷ்யமித்ரன், படையெடுப்புக்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் குப்தப்பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக் கப்பட்டு 'உபாரிகர் மகாராஜா' எனும் ஆளுநர் பொறுப்பில் நிர்வாகம் இருந்தது. அவர்கள் அரசரின் உறவினர். குமாரகுப்தர் சமய சகிப்புத் தன்மை கொண்டவர். சிவ வழிபாடு செய்த இவர் அழகுமிளிரும் பல சிவாலயங்களைக் கட்டுவி த்தார் .மாண்ட சோர் எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இவரது பெருமையை உணர்த்துவதாம். பௌத்த மடாலயங்களைக் கட்டவும் உதவினார். குப்தப் பேரரசை சிதைவுறாமல் கட்டிக் காத்தவர் குமாரகுப்தர். வடக்கில் இமயமலைத் தொடர் முதல் தெற்கில் நர்மதை நதிக் கரை வரையில் கிழக்கில் வங்காளம் முதல் மேற்கில் சௌராஷ்ட்ரம் வரை. குப்தப் பேரரசு பரவி இருந்தது. (Cont'd ) குமாரகுப்தர், தங்கநாணயம்(courtesy :Wikipedia )

Friday, 11 August 2017

Post Sangam Age 1

சங்கம் மருவிய காலம் ************* சங்க காலம் கி.பி 3ம்நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது .அதன் பின்னர் பிற்கால பல்லவர் வரும் வரை உள்ள காலத்தை சங்கம் மருவியகாலம் என்கிறோம். களப்பிரர் தென் னாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலம் இதுதான். இதனை இருண்ட காலம் என்பர் சிலர். ஏனெ னில் களப்பிரர் ஆட்சியில் தமிழர்கலை,கலாச் சாரம்,பண்பாடு, இலக்கியம் வளரவில்லை. தெளிவான வரலாறும் இல்லை. சில இலக்கியச் சான்றுகளும், தொல்லியல் ஆய்வு சான்றுகளும் தற்போது கிடைத்துள்ளன. கி.பி 250 முதல் கி. பி 700 வரை தமிழ்நாட்டு சமூக பொரு ளாதார, சமய வரலாற்றை தேடுவது இக் கட்டுரையின் நோக்கமாகும்.சமூகநிலை சங்க காலச் சமூகத்தில் இருந்து மாறுபட்டது.இதனை தமிழர் வரலாற்றின் இரண்டாவது காலகட்டமா கக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் மொத்தம் 2381பாடல் கள் உள்ளன. அவற்றில் 80% (1861)அகத்திணை ப்பாடல்கள்.பின்னர் இயற்றப்பட்ட பதினெண் கீழ்கணக்கு நூல்களில் மொத்தம் 3250 பாடல் கள்.அவற்றில் 15% (421)க்கும் குறைவானவை அகப்பொருட் பாடல்கள் உள்ளன. சங்ககாலத் தில் அரசர்களது கீர்த்தியைப் புகழும் பாடல்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் அரச பரம்பரையின் ஆன்மிகச் சிறப்புக்கள் விவரிக் கப்படுகின்றன. இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இக்காலத்தில் இயற்றப்பட்டவை. சமூக மாற்றம் என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே சங்கம் மரு விய காலம் தமிழர் வரலாற்றின் இரண்டாவது காலகட்டம் எனலாம். பதினெண் கீழ்கணக்கு நூல்கள் காட்டும் தமிழர் சமூக நிலை : அந்த 18 நூல்களில் ஓன்று மட்டும் இயற்றியவர் பெயர் தெரியவில்லை 400 சமணத்துறவியர் பங்களிப்பு நாலடியார் என்ற நீதிநூல். 1.நாலடியார் (சமணத்துறவியர்) 2.நான்மணிக்கடிகை(விளம்பி நாகனார்) 3.இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்) 4.இன்னா நாற்பது (கபிலர்) 5.கார்நாற்பது(மதுரை கண்ணன் கூத்தனார்) 6.களவழிநாற்பது(பொய்கையார்) 7.ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்) 8.ஐந்திணைஎழுபது. (மூவடியார் ) 9.திணைமொழி ஐம்பது(கண்ணன் பூதனார்) 10.திணைமாலைநூற்றைம்பது(கனிமேதாவியா. 11.கைக்கிளை(புல்லன்காடனார்) 12.திருக்குறள்(திருவள்ளுவர் ) 13.திரிகடுகம்(நல்லாடனார்) 14.ஆச்சாரக்கோவை(முள்ளியார்) 15.பழமொழி(முன்றுறை அரையனார்) 16.சிறுபஞ்சமூலம்(மாக்கரியாசான்) 17.முதுமொழிக்காஞ்சி(கூடலூர்கிழார் 18.ஏலாதி(கனிமேதாவியார்) (cont'd )

Post Sangam Age2

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை -Recap சங்கம் மருவிய காலம் 2 ************************* இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இக்காலத்தில் இயற்றப்பட்டவை. நீதிநெறிகளையும் மனித ஒழுக்கத்தையும் பெற்றிருக்க அந்த நூல்கள். அவற்றில் அக்கால நகரங்கள்,சமூகவாழ்க்கை,அரசநீதி, வாணிபம் பற்றிய தகவல்கள் உள்ளன. முற்காலப் பல்லவர் ஆட்சியில் செதுக்கப் பட்ட கல்வெட்டுகள் தாமிரப் பட்டயங்கள் சிறந்த வரலாற்றுச் சான்றுகள். அவற்றில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கல்வெட்டுகள் (செங்கல்பட்டு,திருவண்ணாமலை, விழுப்புரம் திருச்சி மாவட்டங்கள்)வேள்விக்குடி,சிவராமங் கலம் செப்பேடுகள்; அவை தவிர ஆனைமங்க லம்,திருப்பரங்குன்றம் கல்வெட்டுகள் சிறந்த வரலாற்றுச் சான்றுகள். சங்க கால முடிவில் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய,சேர,சோழ அரசர்கள் ;உக்கிரப்பெரு வழுதி, மாரிவெண்கோ, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.என்கிறது இறையனார் அகப் பொருள் உரை . வேள்விக்குடி செப்பேடுகள் வடக்கில் இருந்து புலம்பெயர்ந்து வந்து தமிழ் நாட்டை ஆட்சி புரிந்த களப்பிரர் பற்றிக் கூறுகி றது.கி பி 250 ல் ஆண்ட உக்கிரப்பெரு வழுதி முதல் கி பி 575 ல் ஆண்ட களப்பிரர் வம்சாவளி பற்றி தெரிவிக்கிறது. இந்த காலத்தில் ஆட்சி புரிந்த களப்பிர அரசன் அச்சுதன் பற்றி புத்த துறவு பூதத்தர் இயற்றிய வினய வினிச்சயம் நூலில் உள்ளது. இந்த களப்பிரர் பௌத்த சமண சமயத்தை சேர்ந்தவரகள்; காலப்போ க்கில் சைவ சமயத்திற்கு மாறினர். சிவ வழி பாடு செய்தனர். சங்கம் மருவிய காலத்தில் இருந்த தமிழ்நாட்டின் சமூக ,பொருளாதார நிலை பற்றி ஆராய்ந்த பேராசிரியர் ஆலாலசுந்தரம் பல புதிய வரலாற்றுத் தகவல்களைவெளியிட்டு ள்ளார் . தமிழர் அரசியல் சமூக வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்திடக் காரணங்கள் : களப்பிரர், பல்லவர்படையெடுப்புக்கள்;பிரா மார்ச், பௌத்தர்,சமணர் குடியேற்றம் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இயற்றப் பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.பெரும் நிலப்பரப்பைக் ஆண்ட களப்பிர,பல்லவப் பேரரசர்கள் உள்ளாட்சி அமைப்புகளான நாடு (அவை),பிரம்மதேய சபை போன்றவற்றை அமைத்தனர்.ஏராளமான பிராமணரும், பௌத்த சமணத்துறவியர் குடி யேறினர். பிரம்ம தேயம்,பள்ளிசந்தம்,தேவதா னம் போன்ற நிலக்கொடைகளை அரசர்களி டம் பெற்றனர்.கோவிலகள், மடங்கள் கட்ட அரசு உதவிற்று. அவர்களுக்கு நிலவரி இல்லை. சபாக்கள் ,சமிதிகள் உள்ளாட்சி அதிகாரம் படைத்தவை.அவற்றின் உறுப்பினர் குடிமக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பு க்கள் பின்னர் சோழப்பேரரசர்களால் விரிவா க்கம் செய்யப்பட்டன.

Post Sangam Age

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap சங்கம் மருவிய காலம் 4: இல்லறம், துறவறம் ஆகிய வாழ்க்கை முறைகள் சங்க காலத்தில் இல்லை.சமண,பௌத்த சமயங் களின் வருகையால் துறவிகள் மிகுந்தனர். உயிர்க்கொலை செய்யாமை,மாமிசம் உண் ண்மை நல்லதென்று அவர்கள்கூறினர். மூவகை க்குற்றங்கள்,ஐவகை நல்வழிகள்போதிக்கப் பட்டன.கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. சமணர் பள்ளி கள் கல்விக் கூடங்களில் மக்கள் எழுத்தறிவு படிப்பறிவு ,கணிதம் ஆகியவை கற்றனர். உயர் கல்வி என்பது இலக்கணம் (சட்டம்),தத்துவம் (மெய்ஞானம்),தர்க்கவியல் கற்றல். அரசர்கள் இக்கல்விக் கூடங்களுக்கு கொடைகள் வழங் கினர்.காஞ்சிபுரத்திலும், சோளிங்கரிலும்இவ் வகைக்'கடிகைகள்'இருந்தன.பல்லவரும் பாண்டியரும் சமஸ்கிருதத்தை நிர்வாக மொழி யாக ஏற்றனர்.தமிழறிஞர்களால் தமிழ் போற்றி வளர்க்கப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்க ப்படவில்லை. பலதார மணங்கள் நடைபெற்றன ஆண் குழந்தை பெறுவதை சமூகம் போற்றியது கணவன் இறந்தபோது மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அவர்களைப் போற்றி மக்கள் சதிகளுக்கான நடுகற்கள்வைத்தனர் தமிழர் திருமண விதிமுறைகள் ஏற்பட்டன. 16 வயதுஆணும்12வயதுபெண்ணும்ணம்புரியலாம் மணமகள் தாலி அணியும் பழக்கமும்,அவரது பெற்றோர் சீர்வரிசை வழங்கும் முறையும் இரு ந்தன.தாய்மாமனுக்கு ஒரு பெண்ணை மணந்து கொள்ளும் முன்னுரிமை உண்டு. கார்த்திகை மாதத்திருவிழா சிவன் கோவில்களில் கொண்டாடப்பட்டது வீடுகளிலும் மலைமீதும் விளக்கேற்றிடும் வழக்கம் இருந்தது. இந்திரவிழா, பொங்கல் பண்டிகை கொண்டா ட்டங்கள் இல்லை.எல்லா விழாக்களும் சமயத் தொடர்புடையவை.பௌத்தர் வைகாசி பௌர் ணமி நாளிலும், சமணர் தை நீராடுவது ,சிவன் கோவில்களில் தைப்பூசம் ,பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இருந்தன.அந்நாட்களில் கடவுளர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு கள் நடந்தன.மன்னர்களின் பிறந்த நாள் விழா வும்,நடுகற்கள் வழிபாடும் சிறப்பாக நடைபெற் றன. இறந்தவர்களைப் புதைத்திடும் முறையும், எரியூட்டி சாம்பலை கலத்திலிட்டு புதைக்கும் வழக்கமும் இருந்தன. மக்கள் தலைவிதியை நம்பினர்.அதனை 'ஊழ்' என்றழைத்தனர். அவர்களுக்கு மறுபிறவி யில் நம்பிக்கை உண்டு. திருமணம் செய்தல், நெடுந்தொலைவு மேற்கொள்ளல் பற்றி சோதி டரிடம் ஆலோசனை பெற்றனர். நாட்டிய வகைகளும், பாடல்கள் இசைக்கப் பண்களும், இசைக்கருவிகளும் கண்டு பிடிக்க ப்பட்டன. கோச்செங்கன் முதலாக பல்லவர் பல கோவில்களைக் கட்டினர்.கோவில்களின் அர்த்த மண்டபத்தில் மகாபாரதச் சொற்பொழி வுகள் நடைபெற்றன இந்துசமயம் 6 பிரிவுகள் கொண்டது. அவை: லோகாயுதம் ,பௌத்தம் சாங்கியம் , நையாயிகம், வைசேசிதம்,மிமாம் சும்மா. இக்காலத்தில் தான் தமிழரின் சைவ சித்தாந்தம் உருப்பெற்றது. சங்கம் மருவிய காலத்தில் தமிழக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, சமய வாழ்க்கையில் பெருத்த பல மாற்றங்கள்நிகழ்ந். தன. பழம்பெரும் கோவில்; தற்கால பக்தர்கள் (சொரிமுத்து)

Chandragupta1

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap முதலாம் சந்திரகுப்தன் கிபி320-335 ************** கடோத்கஜனுக்கு அடுத்து வந்த அரசர் முதலாம் சந்திரகுப்தன். லிச்சாவி இளவரசியை மணம் புரிந்து அந்நாட்டின் நட்பைப் பெற்றார். அவர் களின் ஆதரவால் பீகார், திர்குத், அயோத்தி, அலகாபாத், மகதம் ஆகிய பகுதிகளை வென்று பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை நிறுவினார். சந்திரகுப்தனின் அரசு கங்கைச் சமவெளி முழுவதும் பரவியிரு ந்தது.அவனது 15 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் சமுத்திர குப்தர் பேரரசரானார். சமுத்திர குப்தர் (கி பி 335-375) பல கூறுகளாகப் பிரிந்துகிடந்த இந்திய சிற்றர சுக்களை வென்று ஒரு மாபெரும் அரசை உரு வாக்கி அதனை 40 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் சமுத்திரகுப்தர் அவர் வலிமையும் வேகமும் உடைய மாவீரர். அடுத்தடுத்து பல போர்களில் வென்றமையால் அவரை 'இந்திய நெப்போலி யன் 'என்று குறிப்பிடுவர். இவ்வரசரின் பதவி ஏற்பு விழா பற்றி அலகாபாத் கற்றூண் கல் வெட்டு விவரிக்கிறது. நாட்டில் அவருக்கு எதிராக ஏற்பட்ட அரசகுடும்பப் புரட்சியினை முறியடி த்தார் .சமுத்திர குப்தர். ஆங்காங்கே இருந்த சிற்றரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொண்டு ஒற்றுமையின்றி இருந்த நிலையைப் பயன்ப டுத்தி அவர்தம் நாடுகளை பேரரசுடன் இணை த்தார். குப்தப் பேரரசை உருவாக்க சமுத்திர குப்தர் மேற்கொண்ட படையெடுப்புக்களை 'திக்விஜயம்' என்பர். அலகாபாத் கல்வெட்டுகளின் கூற்றுப்படி சமுத்திர குப்தர் வென்ற சிற்றரசர்கள் : அச்சுத நாகசேனர் ,கோத்தர், நாகவம்ச அரசர்களான ருத்ர தேவன், மிதிலா நாகதத்தன், சந்திரவர்மன், கணபதி நாகர், நாகசேனர் நந்தின் புலவர்கள், ஆகியோர். வடகிழக்கு இந்தியாவும் குப்தரின்கட்டுப். பாட்டில் வந்தது.சமுத்திரகுப்தன் தனது அரசு முத்திரையாக போர்க்கழுகை வைத்துக் கொண்டான் சந்திரகுப்தன் பெரும் முயற்சி செய்து மத்திய இந்திய மலைப்பகுதியில் இருந்த ஆத்வீகர் நாட்டைக் கைப்பற்றினான். ஏறத்தாழ கி பி346 இல் வடஇந்தியப்பகுதிகளை வென்று விட்ட இந்த அரசன் தனது கவனத்தை தென்னிந்திய அரசுக்கள் மீது திருப்பினான். தெற்கு கோசலத்தை ஆண்ட மகேந்திரன், கௌரால மகாராஜா, மகாகௌதார நாட்டு வியாகராஜா, ஆகிய 12அரசர்களை வென்ற பின் குப்தர் படைகள் நர்மதை நதியைக் கடந்து தெற்கே சென்றன. அங்கே விஷ்ணு கோபனின் தலைமை யில் சிற்றரசர்களின் கூட்டுப்படை அப்படையை எதிர்கொண்டது.இப்போரில் சமு த்திர குப்தரால் வெல்ல இயலவில்லை எனவே அவனது சாம்ராஜ்யம் கிருஷ்ணா நதி வரை பரவவில்லை. தென்னிந்திய அரசுக்களை தனது பேரரசுடன் இமைக்காமல் அவர்களை மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளப் பணித்தான் "வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து வைத்து பின் னர் விடுவித்து விடும்"கொள்கையைப் பின் பற்றினான் என்பர்.(cont'd) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு ; சமுத்திர குப்தர் படையெடுப்பு(ஒவியம்) Courtesy : G images.
இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap முதலாம் சந்திரகுப்தன் கிபி320-335 ************** கடோத்கஜனுக்கு அடுத்து வந்த அரசர் முதலாம் சந்திரகுப்தன். லிச்சாவி இளவரசியை மணம் புரிந்து அந்நாட்டின் நட்பைப் பெற்றார். அவர் களின் ஆதரவால் பீகார், திர்குத், அயோத்தி, அலகாபாத், மகதம் ஆகிய பகுதிகளை வென்று பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை நிறுவினார். சந்திரகுப்தனின் அரசு கங்கைச் சமவெளி முழுவதும் பரவியிரு ந்தது.அவனது 15 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் சமுத்திர குப்தர் பேரரசரானார். சமுத்திர குப்தர் (கி பி 335-375) பல கூறுகளாகப் பிரிந்துகிடந்த இந்திய சிற்றர சுக்களை வென்று ஒரு மாபெரும் அரசை உரு வாக்கி அதனை 40 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் சமுத்திரகுப்தர் அவர் வலிமையும் வேகமும் உடைய மாவீரர். அடுத்தடுத்து பல போர்களில் வென்றமையால் அவரை 'இந்திய நெப்போலி யன் 'என்று குறிப்பிடுவர். இவ்வரசரின் பதவி ஏற்பு விழா பற்றி அலகாபாத் கற்றூண் கல் வெட்டு விவரிக்கிறது. நாட்டில் அவருக்கு எதிராக ஏற்பட்ட அரசகுடும்பப் புரட்சியினை முறியடி த்தார் .சமுத்திர குப்தர். ஆங்காங்கே இருந்த சிற்றரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொண்டு ஒற்றுமையின்றி இருந்த நிலையைப் பயன்ப டுத்தி அவர்தம் நாடுகளை பேரரசுடன் இணை த்தார். குப்தப் பேரரசை உருவாக்க சமுத்திர குப்தர் மேற்கொண்ட படையெடுப்புக்களை 'திக்விஜயம்' என்பர். அலகாபாத் கல்வெட்டுகளின் கூற்றுப்படி சமுத்திர குப்தர் வென்ற சிற்றரசர்கள் : அச்சுத நாகசேனர் ,கோத்தர், நாகவம்ச அரசர்களான ருத்ர தேவன், மிதிலா நாகதத்தன், சந்திரவர்மன், கணபதி நாகர், நாகசேனர் நந்தின் புலவர்கள், ஆகியோர். வடகிழக்கு இந்தியாவும் குப்தரின்கட்டுப். பாட்டில் வந்தது.சமுத்திரகுப்தன் தனது அரசு முத்திரையாக போர்க்கழுகை வைத்துக் கொண்டான் சந்திரகுப்தன் பெரும் முயற்சி செய்து மத்திய இந்திய மலைப்பகுதியில் இருந்த ஆத்வீகர் நாட்டைக் கைப்பற்றினான். ஏறத்தாழ கி பி346 இல் வடஇந்தியப்பகுதிகளை வென்று விட்ட இந்த அரசன் தனது கவனத்தை தென்னிந்திய அரசுக்கள் மீது திருப்பினான். தெற்கு கோசலத்தை ஆண்ட மகேந்திரன், கௌரால மகாராஜா, மகாகௌதார நாட்டு வியாகராஜா, ஆகிய 12அரசர்களை வென்ற பின் குப்தர் படைகள் நர்மதை நதியைக் கடந்து தெற்கே சென்றன. அங்கே விஷ்ணு கோபனின் தலைமை யில் சிற்றரசர்களின் கூட்டுப்படை அப்படையை எதிர்கொண்டது.இப்போரில் சமு த்திர குப்தரால் வெல்ல இயலவில்லை எனவே அவனது சாம்ராஜ்யம் கிருஷ்ணா நதி வரை பரவவில்லை. தென்னிந்திய அரசுக்களை தனது பேரரசுடன் இமைக்காமல் அவர்களை மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளப் பணித்தான் "வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து வைத்து பின் னர் விடுவித்து விடும்"கொள்கையைப் பின் பற்றினான் என்பர்.(cont'd) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு ; சமுத்திர குப்தர் படையெடுப்பு(ஒவியம்) Courtesy : G images.

Samudragupta

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap சமுத்திர குப்தர். .. ************* அண்டைநாடுகளுடன் அரசியல் உறவு: மாளவம், சௌராஷ்ட்ரம்,சாகிகள் நாடு, வடமேற்கு எல்லை நாடு,ஆகியவற்றுடன் சமுத்திர குப்தர் நட்புறவை வளர்த்தார். அவர்கள் பேரரசருக்கு பரிசுப்பொருட்கள் அளித்தும்,போர்க்காலங்களில் படைவீரர்களை அனுப்பியும் உதவினர். இலங்கை அரசன் மேகவர்மனுடன் நல்லு றது.கி கொண்ட சமுத்திர குப்தர் அந்நாட்டில் ருந்து வரும் பௌத்த துறவியரும், புனிதப் யணிகளும் தங்கிச் செல்ல மடாலயம் கட்ட உதவினார். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் வெற்றிகளைப் பறைசாற்றிட அஸ்வமேதயாகம் நடத்தினார்.வலிமை மிக்க இப்பேரரசனை எதிர் யாருமில்லை. அக்காலத்தில் குப்தப் பேரரசின் எல்லைக ளாக வடக்கில் இமயமலைகளும், தெற்கில் நர்மதை நதியும் , கிழக்கில் பிரம்மபுத்திராவும் மேற்கில் சம்பல் பள்ளத்தாக்கும் இருந்தன. இராம குப்தர் (கி பி 375-380) :சமுத்திர குப்த ரின் 40 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் அவ ரது மகன் இராமகுப்தர் ஆட்சிக்கு வந்தார்.இவ ரது 5 ஆண்டு கால ஆட்சி பற்றி விசாகதத்தரின் நாடகம்,பாணபட்டரின் ஹர்ஷசரிதம், இராஷ்ட்ர கூடர்களின் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. சாகர்கள் படையெடுத்து வந்து குப்தரை எளிதில் வென்று கப்பம் செலுத்த ஆணையிட்டனர். அர சியார் துருவதேவியையும் கவர்ந்து சென்றனர். இதனைக் கேள்வியுற்ற அரசனின் தம்பி சந்திரகுப்தர்(2) பெண் வேடத்தில் சாகர்களின் முகாமில் நுழைந்து தனதுஅண்ணன்.மனைவி யை மீட்டார். சாகர்களையும் போரிட்டு வென்று விரட்டியடித்தார். பின்னர் இராமகுப்தரைக் கொன்று, துருவதேவியைப் பட்டத்தரசியாக்கி அரியணையைக் கைப்பற்றினார் அவர். (Cont'd ) முத்ரா ராக்சக்ஷம் (நாடகம் ) விசாகதத்தர் Pic.courtsey wiki

Vikramaditya 2

இந்தியவரலாறு ஒரு மீள்பார்வை.Recap. *********** *********** ****** இரண்டாம்சந்திரகுப்தர் விக்ரமாதித்த ன் (கி பி380-413) இராமகுப்தருக்குப் பின்ஆட்சிக்கு வந்தவர் அவருடைய தம்பி விக்ரமாதித்தன்;இரண்டாம் சந்திரகுப்தர் என்றழைக்கப்பட்டார்.தனது தமை யன் இராமகுப்தரைக் கொன்று ஆட்சியைப் பிடி த்ததாக மிருக்ஷகடிகம் எனும் காப்பியம் கூறும். குப்தப் பேரரசர்களில் வீரமும், வல்லமையும் நல்லறிவும் கொண்டவர் இவர். பேரரசு விரிவாக்கம் : சமுத்திர குப்தர் மறைந்த பின் (கி பி 375) அவர் விட்டுச் சென்ற பேரரசை இராமகுப்தரால் காத்திட இயலவில்லை. மாநில ஆளுநர்கள் புரட்சி செய்தனர்.இதனால் குப்தப்பேரரசு சிதையத் தொடங்கியது. இரண்டாம் சந்திர குப்தர் பேரரசை மீட்க பல போர்களில் ஈடுபட்டார் இழந்த எல்லைப் புறங்களை மீட்டபின் ,பிற நாடுகளின் மீது படையெடுத்து வெற்றி கண் டார். வங்காளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை அட க்கி அந்நாட்டினைப் பேரரசுடன் இணைத்தார். அவந்திக் குடியரசை வென்று தனதாக்கிக் கொண்டார் ;சிந்து நதிக்கு அப்பால் இருந்த வகில்கா மலைநாட்டையும் வென்றார். அக்காலத்தில் வடஇந்தியப்பகுதிகளை ஆக் கிரமித்து வலிமையுடன் விளங்கியவர் சாகர் இன சத்ராப்புக்கள். சமுத்திர குப்தரால் கூட அவர்களை முழுமையாக அழிக்க முடியவில்லை. இரண்டாம் சந்திர குப்தர் வாகாடக அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களது ஆதரவுடன் மேலைச் சத்ராப்புக்கள் மீது படை யெடுத்துச் சென்றார். சாகர் அரசன் ருத்ரசின்கா போரில் மடிந்தான் .மாளவம், குஜராத் ,சௌரா ஷ்ட்ரம் குப்தப்பேரரசில்ணைந்தது . அரபிக் கடல் வரைப் பேரரசின் எல்லை விரிவடைந்தது .இத னால் மேலைநாடுகளுடன் நேரடி வணிக, கலா ச்சார உறவுகள் ஏற்பட வழி பிறந்தது. குப்தப் பேரரசின் தலைநகர் பாடலிபுத்திரத் திலிருந்து உஜ்ஜைனிக்கு மாற்றப்பட்டது. அந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் இமயமலைத் தொடர் முதல் தெற்கில் நர்மதை நதிக் கரை வரை,கிழக்கில் வங்காளம் முதல் மேற்கில் கத்தியவார் வரை பரந்து விரிந்திருந்தது. (contd -------- ----------- ---------- ------ துருவதேவி,விக்ரமாதித்தன் நாணயங்கள் (பிராகிருதம் மொழியில் பெயர்)குப்தர் அரசவை தற்கால படம்-வேதாளக்கதைகள்(36)

Chandragupta2

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap விக்ரமாதித்தன். .. இரண்டாம் சந்திர குப்தர் மணஉறவுகளால் தனது அரசின் வலிமையைப் பெருக்கினார். அவர் நாகநாட்டு இளவரசி குபேரநாகாவை மணம் புரிந்தார். தனது மகள் பிரபாவதியை வாகாடக அரசன் இரண்டாம் ருத்ர சேனனுக்கு மணம் செய்து கொடுத்தார். அரசு நிர்வாகம் :பாடலிபுத்திரத்திலிருந்து பேரரசின் தலைநகர் உஜ்ஜைனிக்கு மாற்றப் பட்டது .அரசு நிர்வாகத்தின் தலைவர் பேரரசர் . அவரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்தி ருந்தன.நிர்வாகத்தில் அவருக்கு உதவிட அமை ச்சர்கள் குழு இருந்தது .நாட்டை அந்நியப் படை யெடுப்பிலிருந்து காப்பதும் மக்கள் நலம்பேணு வதும் பேரரசரின் பொறுப்பு.பிரதம அமைச்சர் நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், காவல் துறை அமைச்சர் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் அரசருக்கு நிர்வாக ஆலோசனை களை வழங்கினர். பிற துறைகளை நிர்வகிக்க அரசு அலுவலர்கள் இருந்தனர். குமாரமத்யாதி கர்ணா, பாலாதிகர்ணா, கர்ணாரத பாதாதி, தண்டுபசாதி கர்ணா, வினய சூரியர் மகாபிர திகாரர்,மகாதர்த நாயகர்,உபாரிகர் ஆகிய அலு வர்கள் உண்டு. இவர்களைப் பேரரசரே நியமி த்தார். பேரரசு பல மாநிலங்களாக (தேசம்)பிரிக் கப்பட்டு ஆளுநர்களின் பொறுப்பில் விடப் பட்டன. பேரரசின் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு கிராமிகா(கிராமத்தலைவர்).மாநில ஆளுநர்க ளாக அரச குடும்பத்தினர் அனுப்பப்பட்டனர். அரசுக்கு வருவாய் தோல்வியுற்ற படையெ டுப்பாளர் செலுத்திய தண்டம், மக்களிடமிருந்து வருமான வரி, நிலவரி, வணிகர் செலுத்தும் விற்பனை வரி ஆகியவை. பேரரசரே உயர்நிலை நீதிபதி. அவரு டைய வாக்கு இறுதித் தீர்ப்பு. குற்றம் புரிந்தவர் கடும் தண்டனைக்கு உள்ளாயினர். பெருந் தொகை தண்டமாகப் பெறப்பட்டது.மரணதண் டனையும் உண்டு.

Vikramaditya

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap இரண்டாம் சந்திரகுப்தர். 2 பேரரசர் விக்ரமாதித்தன் எனும் சந்திரகுப்தர் சமயப்பொறையுடையவர். அவர் விஷ்ணுவை வழிபடும் வைணவர் எனினும் பௌத்தர், சமணர், சைவர் போன்ற பிற சமயத்தவரை வெறுக்கவில்லை. அவர்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். கலை இலக்கிய வளர்ச்சி : இந்த குப்த மன்னர் நுண்கலைகள் மற்றும் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் உடையவர். சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக இருந்தது. காலத்தால் அழியாத பல காவியங்கள் படைக்கப்பட் டன. பேரரசர் கவிஞர்களையும் கலைஞர்களையும் ஆதரித்தார். இசை, ஓவியம், அறிவியல், உலோகவியல் துறைகள் வளர்ச்சி யடைந்தன. சிற்பக்கலை, கட்டிடக்கலை சிறப்புக் கவனம் பெற்றன. பேரரசர் தனது உருவம் பொறித்த அழகிய தங்கநாணயங்கள் வெளியி ட்டார் .அவரது அரசவையில் கவி காளிதாஸ் இருந்தார். குடிமக்கள் உன்னதமான கலை இலக்கிய பண்பாட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். குமாரகுப்தர் (கி பி 413-453) விக்ரமாதித்தனுக்குப் பிறகு அவரது இளவரசன் குமாரகுப்தர் ஆட்சிக்கு வந்தார். அவரது நாணய ங்களைக் காணும்போது நல்லதொரு ஆட்சியாளராகத் தெரிகிறது . பேரரசு சிதைவுறாமல் காத்தார். அஸ்வமேத யாகம் நடந்தி 'மகேந்திர ஆதித்யா 'என்று பட்டம் சூட்டிக் கொண்டார் இவர். இவரது கால த்தில் குப்தர் பேரரசு தென்மேற்கு இந்திய பகுதிக்கு பரவிற்று. வணிக சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வணிக வருவாயைப் பெருக்கின. 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்த குமாரகுப்தர் இறுதிக்காலத்தில் ஹுனர், புஷ்யமித்ரன், படையெடுப்புக்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் குப்தப்பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக் கப்பட்டு 'உபாரிகர் மகாராஜா' எனும் ஆளுநர் பொறுப்பில் நிர்வாகம் இருந்தது. அவர்கள் அரசரின் உறவினர். குமாரகுப்தர் சமய சகிப்புத் தன்மை கொண்டவர். சிவ வழிபாடு செய்த இவர் அழகுமிளிரும் பல சிவாலயங்களைக் கட்டுவி த்தார் .மாண்ட சோர் எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இவரது பெருமையை உணர்த்துவதாம். பௌத்த மடாலயங்களைக் கட்டவும் உதவினார். குப்தப் பேரரசை சிதைவுறாமல் கட்டிக் காத்தவர் குமாரகுப்தர். வடக்கில் இமயமலைத் தொடர் முதல் தெற்கில் நர்மதை நதிக் கரை வரையில் கிழக்கில் வங்காளம் முதல் மேற்கில் சௌராஷ்ட்ரம் வரை. குப்தப் பேரரசு பரவி இருந்தது. (Cont'd ) குமாரகுப்தர், தங்கநாணயம்(courtesy :Wikipedia )

Wednesday, 12 July 2017

சாதவாகனர் 2

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap *************** ********* மௌரியர் ஆட்சியில். .சமய நிலை : அசோகரின் ஆளுகைக்கு முன்னர் மக்கள் சமயச்சடங்குகள் செய் வதிலும்,யாகங்கள் வளர்ப்பதிலும், மனிதர்கள் மிருகங்கள் பலி கொடுப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மூடநம்பிக்கை கள் மக்களுக்கு மகிழ்சசி தந்தன.வேதீயசமயமும் சமண மும், பௌத்தமும் பலரால் பினபற்றப்பட்டன. மௌரியப் பேரரசு பௌத்தசமயத்தை தேசிய அரசாக அங்கீகரித்த பின்னர் அச்சமயத்தைப் பரவச்செய்திட பல முயற்சிகள் மேற்கொ ண்டது .யாகங்கள் பலியிடுதல் எல்லாம் அதிக செலவினங்கள். பௌத்த துறவிகளுக்கும் அவற்றைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அனைத்து மக்களுக்கும் சமய சகிப்புத்தன்மை இருந்தது . பிற சமயங்களை அடக்கி ஒடுக்கும் மனநிலை இல்லை. பொருளாதார நிலை : மௌரியப் பேரரசின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். எருதுகள் ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்தினர்.பாசனத்திற்காக நீரோடைகள்,கிணறுகள், நீர்நிலைகள் இருந்தன.அவர்கள் பணப்பயி ர்கள் ,பழத்தோட்டங்கள் உருவாக்கிட ஆர்வம் காட்டினர்.ஜவுளி த்தொ ழிலும் வளரத்தொடங்கிற்று. நூல் நூற்றல் ,ஆடை நெய்தல் பணி களில் ஏராளமான பேர் ஈடுபட்டனர். நாட்டின் அனைத்து நிலங்களும் காடுகளும் அரசரது உடமைகள். உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் வளர்ச்சிபெற்றது. அரசு சரியான அளவில் உலோகக் காசுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது. கலை இலக்கிய வளர்ச்சி : அரசு மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டியமையால் படிப்பறிவு உள்ள மக்கள் மிகுந்திருந்தனர்.கல்விநிறுவனங்களின் அரசு நிதியுதவி வழங்கிற்று. ஆங்கிலேயர் காலத்ததை விட அசோகர் ஆட்சிக்காலத்தில் தான் அதிகக் கல்விக்கூடங்கள் இரு ந்தனவாம். அர்த்த சாஸ்திரம் சிற்பசாஸ்திரம் தவிர பல சமண, பௌத்த சமய நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. அசோகர் காலத்தில் கட்டிடக்கலை வளர்ச்சி பெற்றது.மௌரிய ரது கட்டிடங்களை காணவந்த அயல்நாட்டவரும் வியந்து பாரா ட்டினர்.'இவை மனிதரால உருவாக்கப்பட்டதல்ல.தேவதைகளால் கட்டப்பட்டவை' என்றனர். ஏறத்தாழ 8400 ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.அவற்றின் உயரம் 50-60 அடிகள்.ஒவ்வொன்றும் 50 டன் எடை உடைய இந்த ஸ்தூபி கற்தாண்கள் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. ஒவ்வொரு ஸ்தூபி உச்சியில் ஒரு விலங்கின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளுக்கு குடைவரைக் குகைகள் உருவாயின அவற்றின் சுவர்கள் பளிங்குக்கல் போன்று பளபளப்பாக உள்ளன் நேபாளத்தில் உள்ள தேவப்பட்டான்,காஷ்மீரில் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களைக் கட்டுவித்தவர் அசோகர். (வரும்...)

Sunday, 9 July 2017

Shunga Rulers

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap புஷ்ய மித்ர சுங்கர்(கி.மு 185-கி.பி 225) *************************************** பேரரசர் அசோகருக்குப் பின்னர் திறமையற்ற வாரிசுகளாலும் பதவிப்போட்டியாலும் மௌரியப் பேரரசு நிலைகுலைந்தது.இளவர சன் குணாளன் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்ய, அவரது தமையன் காஷ்மீரத்தை ஆளத்தொடங்கினார்.இதனால் பேரரசு பிளவுற்றது. குணாளனுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தமையால், அவனுடைய மகன்கள் தசரதன், சம்பிராதி என்ற இருவரும் நிர்வாகப் பொறுப்பே ற்றனர்.முதலவன் பாடலிபுத்திரத்தையும், அடுத்தவர் உஜ்ஜைனி யையும் தம் வசமாக்கிக் கொண்டனர்.பேரரசு மேலும் இரண்டா னது.மௌரிய அரசர்களில் கடைசியாக பிருகத்ரதன் ஆட்சிக்கு வந்தபோது படைத்தளபதி புஷ்ய மித்ர சுங்கர் அரசரைக கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.அத்தளபதியே சுங்க வம்சத்தை நிறு வியவர். சுங்கர்கள் யார்?: புஷ்ய மித்ர சுங்கர் ,பிம்பிசாரர் வம்சாவளி என்றும்,அவர் மௌரியர் என்றும் இரு கருத்துக்கள் உண்டு. பெய ரில்'மித்ரா ' இருப்பதால் அவர் பிராமண அரசர் என்று கூறப்படுகி றது.சுங்கர்கள் உஜ்ஜைனியிலிருந்து வந்து மௌரியர் படையில் பணியாற்றினர். மௌரிய அரசர் பிருகத்ரதன் குடிமக்களால் பெரிதும் வெறு க்கப்பட்டார்.இதனை அறிந்த கிரேக்கர்கள் பாடலிபுத்திரம் மீது படையெடுத்து வந்தனர். அப்போது ஏற்பட்ட படையினரின் புரட் சியால் அவர்களால் அயோத்தி, மதுரா வரைதான் முன்னேற முடி ந்தது.இந்த அரசியல் சூழ்நிலையில்தான் புஷ்ய மித்ர சுங்கர் ஆட்சி யைப் பிடித்தார். பேரரசு விரிவாக்கம்.:புஷ்ய மித்ர சுங்கர் பெரும் படையுடன் சென்று கிரேக்கப்படையினை விரட்டியடித்தார்.இந்திய விடுதலை காக்கப்பட்டது.பின்னர் யக்ஞசேனனை வென்று விதர்பா நாட்டைக் கைப்பற்றினார்.கலிங்க மன்னர் காரவேலனை வென்று அந்நாட்டை ப் பேரரசுடன் இணைத்தார்.இந்த வெற்றியை ஹாதி கும்பா கல்வெ ட்டு உறுதிப்படுத்துகிறது."மகாராஜ் ஆதிராஜ் " என்று பட்டம் சூட்டிக் கொண்ட புஷ்ய மித்ர சுங்கர் தனது மேலாண்மையை நிறுவிட "அஸ் வமேத யாகங்கள்" நடத்தினார்.மீண்டும் படையெடுத்து வந்த கிரேக் கர்களை அவரது மகன் வாசுமித்ரன் எதிர்கொண்டு வெற்றி பெற்றான். சுங்கர்கள் பேரரசில் பாடலிபுத்திரம், விதீசம் கலிங்கம், ஆக்ரா,அயோ த்தி, பீகார், திர்கட், சியால்கோட்(பஞ்சாப் )ஆகிய பகுதிகள் இருந்தன. சமயநிலை:புஷ்ய மித்ர சுங்கர் வைதிக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த சமயத்தைப் போற்றி வளர்த்தார்ஆனால் அவர் புத்த ,சமணத் துறவிகளை சித்திரவதை செய்ததாகவும் மடாலயங் களை இடித்ததாகவும் சமய நூல்கள் கூறுகின்றன.ஆனால் அது ஏற்புடையதல்ல.அவர் சமயச் சகிப்புத்தன்மை கொண்டவர்.வைதீக பிராமணர்களுக்கு ஆதரவளித்தார்.யாக வேள்விகள் அதிகரித்தன. சமண,பௌத்த மதங்களின் மீது மக்களுக்கு இருந்த நாட்டம் குறை யத் தொடங்கிற்று.போர்களில் தாம் பெற்ற வெற்றிகளைக் கொண் டாட இரண்டு முறை அஸ்வமேத யாகம் நடத்தினார். புஷ்ய மித்ர சுங்கரின் நீண்ட கால ஆட்சிக்குப் பின்னர் அவரது மகன் அக்னி மித்ரா 8 ஆண்டுகள் ஆண்டார். அந்த வம்சத்தின் கடைசி அரசர் தேவபூமியைக் கொன்று தளபதி வாசுதேவ கன்வர் பாடலிபுத்திரத்தின் அரசரானார். சுங்கர்கள் சிறப்பு :சத்திரிய வம்சம் நாடாளவேண்டும்;படை களுக்குத் தலைமை தாங்கிப் போருக்குச் செல்லவேண்டும் என்ற வர்ணாசிரம கோட்பாடுகளை மாற்றி பிராமணர் நாடாளமுடியும் எனக் காட்டியது சுங்க வம்சம்.கௌதமபுத்தர், மகாவீரர், அசோகர் ஆகிய சத்திரிய குலத்தவர் ஆட்சிப் பொறுப்பைத் துறந்து ஆன்மிக பாதையில் சென்றமையால் வேத பாரயணத்ததை விடுத்து பிரா மணர் நாடாளத் தொடங்கினர். சுங்கர்களின் சாதனையாக அவர்கள் கிரேக்கர்களையும், ஹூனர்களையும் கங்கைச்சமவெளியில் நுழையாமல் தடுத்த னர்.அந்த க் கால வைதிக சமயம் புத்துயிர் பெற்றது. மனுஸ்ம்ருதி போன்ற ஸ்மிருதி நூல்கள் எழுதப்பட்டன.வடமொழி இலக்கியம் வளர்ந்தது. நுன்கலைகளும் வளர்ச்சி பெற்றிருந்தது .மக்களின் கல்வி வளர்ச்சியில் சுங்கர்கள் அக்கறை காட்டினர் .மகாக் கவி காளிதாஸர் பிற்காலத்தில் இயற்றிய காவியம் "மாளவிகா அக்னி மித்ரா " நாயகன் சுங்க அரசன் அக்னி மித்ரா தான். புஷ்ய மித்ர சுங்கர் பேரரசு படம். வெள்ளிக்காசுகள, சுங்கர் அரசரின் clay mould. courtesy :Wikipedia

Friday, 7 July 2017

கௌடில்யர்

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap கௌடில்யர் ************** சந்திர குப்த மௌரியரின் ஆலோசகராகவும்,முதல் அமைச்சராக வும் இருந்தவர் கௌடில்யர்.தென்னிந்தியாவில் அவர் சாணக்கியன் என அறியப்படுகிறார்.மதிநுட்பம் மிக்கவர்; நந்தவம்ச அரசவையில் பணியாற்றினார்.அவரது கருப்பு நிறத்தை மகாபத்மநந்தன் கேலி செய்தமையால் கோபமுற்று வெளியேறிய கௌடில்யர் நந்தவம்ச த்தை அழித்திட உறுதி பூண்டார்.சந்திரகுப்தனை தன்னுடன் இணை த்துக் கொண்டார்.ஒரு பெரும்படை திரட்டப்பட்டது.அவ்வமயம இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரேக்க இளவரசர் அலெக் ஸாண்டரை சந்தித்து பாடலிபுத்திரத்தை தாக்குமாறு கௌடில்யஅ ரும், சந்திரகுப்தரும் வேண்டியதாக ஒரு செய்தி உண்டு. சந்திரகுப்தர் நந்தரை வீழ்த்தி மௌரியப் பேரரசினை நிறுவினார். கௌடில்யர் முதலமைச்சரானார்.அரசியல் மற்றும் நாட்டு நிர் வாகம் பற்றி பேரரசருக்குக் கற்பித்திட அவர் இயற்றிய வடமொழி நூல் அர்த்த சாஸ்திரம். மௌரியர் ஆட்சி நடைபெற்ற விதத்தை இந்நூலால் ஊகிக்கலாம். அரசர் அனைத்து அதிகாரங்களும் படைத்தவர். ஆனால் குடிமக்க ளுக்கு நலம் பயக்கும் விதத்தில் ஆட்சி புரியவேண்டும்.வலிமை மிக்க படையும் ஒற்றர் முறையும் ஒரு நாட்டினைக் காக்கும் என் கிறது அர்த்த சாஸ்திரம். அரசியல் சூழலுக்கு ஏற்ப பேரரசர் சிலசமயங்களில் சிங்கம் போல வும் சில சமயங்களில் ஆடு போன்று சாதுவாக இருக்கவேண்டும் என்கிறார் கௌடில்யர். ஒரு நல்ல குறிக்கோளை அடைந்ததிட பின்பற்றிடும் வழிமுறைகள் தவறானதாகவும் இருக்கலாம் என் பது அவருடைய அரசியல் கோட்பாடு

Wednesday, 5 July 2017

அசோகர் கலிங்கப்போர்

இந்திய வரலாறு மீள்பார்வை Recap ------ --------- -------- --------- ------ மௌரியப் பேரரசு (தொடர்ச்சி ) பிந்துசாரன(298-273): சநதிரகுப்த மௌரியர் தன்னுடைய மகன் பிந்துசாரரிடம் ஆட்சி யை ஒப்படைத்துவிட்டு துறவறம் மேற்கொண்டார்.போர் புரிவதில் வல்லமை படைத்த இளவரசன் அடுத்த 25 ஆண்டுகள் பேரரசைக் கட்டிக் காத்தார்.தென்னிந்தியாவில் கிருஷ்ணா நதிக்கு தெற்கே உள்ள நாடுகளையும் கலிங்க நாட்டையும் அவரால் கைப்பற்ற இயலவில்லை. மாவீரர் அசோகர் (கி.மு 273-232): இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் அரசராக கி.மு273-ல் ஆட் சிக்கு வந்த அசோகர் ஒரு போர் வெறியராக இருந்தார்.அதுகாறும் யாருக்கும் அடிபணியாத கலிங்க நாட்டைக் கைப்பற்றுவது அவரு டைய நோக்கமாக இருந்தது.அவரது தலைமையில் ஒரு மாபெரும் படை கலிங்கத்தைத் தாக்கிற்று. இந்தப் போரில் கலிங்கம் வீழ்ந்தது. அசோகர் வென்றார். 1 லட்சம் எதிரிப்படையினர் கொல்லப்பட்டனர்.2 லட்சம் பேர் காயமடைந்தனர். இதனால் இந்தியாவின் பெரும்பகுதினை முதன்முறையாக ஆட்சி புரிந்த பேரரசர் ஆனார் அசோகர். இந்த வெற்றி அசோகருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.துக்கததைக் கொண்டு வந்தது.கலிங்கப்போரால் ஏற்பட்ட அழிவும் உயிரிழப்பும் அசோகரைப் பெரிதும் பாதித்தது. போர்க்களத்தில் இறந்துகிடந்த மனித உடல்களும் கணவனை இழந்த பெண்களின் கதறல்களும் ஆதரவற்ற குழந்தைகளின் அழுகையும் பேரரசரின் உள்ளத்தினை உருக்கின. இனி எந்தக் காலத்திலும் போர் செய்வதில்லை என அவர் உறுதி பூண்டார்.(வரும். ..)

வர்த்தமான மகாவீரர்

இந்திய வரலாறு மீள்பார்வை Recap ********** வர்த்தமான மகாவீரர் (தொடர்ச்சி. ..) தமது சீடர்களைப் பல குழுக்களாகப் பிரித்து அவற்றிற்கு கண ங்கள் என்று பெயரிட்டார் மகாவீரர்.ஆடவர் மட்டுமின்றி பல இளம் துறவறம் பூண்டு சமண சங்கத்தில் இணைந்தனர்.சமண துறவிக்குழு க்கள் விரிவடைந்து சங்கங்கள் ஆயின.துறவிகள் போதனைப்படி வாழ் ந்தனர்.தாம் கேட்டதைப் பிறருக்கும் போதித்தனர்.ஆனால் யாரையும் சங்கத்தில் இணையும்படி வற்புறுத்தவில்லை. சஙகத்துறவிகளின் கடமைகளாகச் சில நியமங்கள் இருந்தன சமணசமயத்தில் சேர்ந்தவர்கள் எளிய வாழ்க்கை வாழ வேண்டும் அனைத்து உலகியல் இன்பங்களையும் விட்டு விலகவேண்டும். வன்முறை, பொய் பேசுதல், திருட்டு போன்றவை கூபாது;சுயகட்டுப் பாட்டுடன் உயரிய. நன்னெறிகளைப் பின்பற்றிட வேண்டும். தமது சொல் ,செயல்களால் பிறருக்கு. துன்பம் விளைவித்தல் ஆகாது.பிறரு டைய பொருட்களைக் கவரக்கூடாது.செல்வம் சேர்த்திடும் எக்காரிய த்தையும் செய்யக்கூடாது.எண்ணெய். வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தலாகாது,;அது போலவே காலனிகள்,குடைகள் கூடாது. குருவின் ஆணைகளுக்குக் கட்டுப்படவேண்டும். ;மேலும் 5 விரதங். களை மேற்கொள்ள வேண்டும். அவை. : வரன்முறையற்ற ஜீவகாருண்யம்,உண்மை பேசுதல் நல்லறிவை சேகரித்தல்,பிரமச்சாரிய விரதம் மேற்கொள்ளல் ,சரி யான முயற்சி, சரியான கவனம் . தமது 72 வது வயதில் வர்த்தமான மகாவீரர் காலமானார். அதன்பிறகு சமணசமயம் இரண்டாகப் பிரிந்தது.மகாவீரரின் சமயக் கொள்கைகளைச் சிறிதும் மாற்றமின்றி ஏற்றுக் கொண்ட சமணத் துறவிகள் திகம்பரர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் மேகமே ஆடை யாகக் கொண்டவர்கள்.ஆடைகளைத் துறந்து நாடெங்கிலும் பயணம் செய்து தமது சமயத்தைப் பரப்பினர். சுவேதம்பரர் என்ற சமணத்துற விகள் வெண்ணிற ஆடை அணிந்தவர்.கால, இட மாற்றங்களுக்கு ஏற்ப சிறிது கொள்கை மாற்றம் செய்வதில் தவறில்லை என்பது இப்பிரிவினரின் எண்ணம். சமணசமயத்தில் ஏற்பட்ட இப்பிரிவால் அம்மதத்தின் வளர்ச்சி தடைப்பட்டது. ஒரு காலத்தில் இச்சமயம் இந்தியத் துணைக் கண் டம் முழுவதும் பரவியிருந்தது.

மௌரியர் ஆட்சியில் பொருளாதார நிலை

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap *********** ********** ********* மௌரியர் ஆட்சியில் அரசியல், சமூக, சமயப் பொருளாதார நிலை : மௌரிய அரசர்களின் ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பகுதி ஒரே அரசரின் ஆதிக்கத்தில் இருந்தது .இதனால் இந்தியா ஒரே நாடு என்ற தேசிய உணர்வு வளரத்தொடங்கிற்று. குடிமக்களின் சமூகப் பொருளாதார நிலை உயர்ந்தது. அரசியல் நிலை: அரசப்பதவி மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. நாட்டின் ஆட்சியும் நிர்வாக அதிகாரங்களும் அரசனிடம் குவிந்து இருந்தன.அவனே அனைத்து சட்டங்களை இயற்றவும் ,நீதி வழங்கவும் உரிமை படைத் தவன்.அரசனின் ஆணைகள் முறைப்படி மக்களால் பின்பற்றப்படு வதை அரசு நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர். சந்திரகுப்த மௌரியர் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் எனக் கருதி அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. அவரைச் சுற்றி பெண் காவலர்கள் இருநதனர்.பேரரசர் அசோகர் அடிக்கடி தர்ம யாத்திரை சென்று மக்களை சந்தித்து அவர்தம் குறைகளைக் கேட்டறிந்தார். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கருதினார். பேரரசருக்கு ஆட்சியில் உதவி புரிய அமைச்சர் குழு இருந்தது. அது நல்ல ஆலோசனைகளை வழங்கிற்று;.அவற்றை அரசர் ஏற்கவேண்டுமென வற்புறுத்த இயலாது. அரசருக்கு குடிமக்களி டம் வரி வசூலிக்க உரிமை உண்டு. அந்த வருவாயினை சந்திரகுப்த மௌரியர் தனக்கு அரண்மனை, தர்பார் மண்டபம் கட்டி அலங்கரிக்க செலவிட்டார் ஆனால் அசோகர் அனைத்து வருவாயையும் மக்கள் நலப்பணிகளுக்குச் செலவிட்டார்.அந்நியர்கள் படையெடுத்து வந்தால் குடிகளைப் பாதுகாத்திடும் கடமை அரசனுடையது இவ்வாறு மௌரியர் ஆட்சியில் மக்கள் நலனே முதன்மையாக கருதப்பட்டது. அரசின் நிர்வாகம் திறம்பட இயங்கிட மௌரியப் பேரரசு ஒற்றர்கள் படையை உருவாக்கிற்று அப்படையினர் மக்களிடையே சென்று அவ்வப்போது அவர்தம் மனநிலையை அறிந்து வருவர். அரசுக்கு எதிரான கலகக்காரர்களையும் சதிகாரர்களையும் கண்ட றிவர். சமூகநிலை : மௌரியர் ஆட்சியில் மக்கள் பல வர்ணங்களாகவும்,வர்க்கங் களாகவும் பிரிந்திருந்தனர்.சாதிப்பிரிவுகளும் வலுப்பெற்று இருந் தது.வேதியர் உயர்நதவர்களாகவும்;சத்ரியரும்,வைசியரும் சமுதாயத்தால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர்.சூத்திரர் கடை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.சாதிமறுப்புத் திருமணங்கள் தடைசெய் யப்பட்டன.திருமணச் சடங்குகளுக்கு விதி முறைகள் இருந்தன. மணமுறிவு செய்வதும் எளிதல்ல. பெண்களின் நிலை உயர்வானதாக இல்லை. அவர்களுக்குத் தனியுரிமை ஏதுமில்லை. சில பெண்கள் முன்னணிக்கு வந்த போதும் சமூகம் அவர்களை அங்கீகரிக்கவில்லை. அடிமைமுறை வழக்கில் இருந்தது.செல்வந்தர்கள் அவர்களைப் பராமரிததனர்.அடிமைகளை வாங்கவும் விற்கவும் முடியும். செல்வந்தர் மது அருந்தினர்.அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகளில் மக்கள குடிக்கலாம்.வேட்டையாடுதல்,நடனமாடுதல், மக்களின் பொழுதுபோக்காக இருந்தது .பொதுமக்கள் ஒழுக்கநெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தனர். தர்மமகாமாத்திரர் கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து தண்டித்தனர்.இயற்கை அழகை ரசிப்பதிலும் உயர்தர ஆடைகள் மற்றும் நகைஅணிவதிலும்,மக்கள் ஆர்வம் காட்டி னர் பாடலிபுத்திரம் -கற்பனை ஓவியம் , கருதப்பட்டது.

மௌரியர் ஆட்சியில் சமய நிலை. .

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap *************** ********* மௌரியர் ஆட்சியில். .சமய நிலை : அசோகரின் ஆளுகைக்கு முன்னர் மக்கள் சமயச்சடங்குகள் செய் வதிலும்,யாகங்கள் வளர்ப்பதிலும், மனிதர்கள் மிருகங்கள் பலி கொடுப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மூடநம்பிக்கை கள் மக்களுக்கு மகிழ்சசி தந்தன.வேதீயசமயமும் சமண மும், பௌத்தமும் பலரால் பினபற்றப்பட்டன. மௌரியப் பேரரசு பௌத்தசமயத்தை தேசிய அரசாக அங்கீகரித்த பின்னர் அச்சமயத்தைப் பரவச்செய்திட பல முயற்சிகள் மேற்கொ ண்டது .யாகங்கள் பலியிடுதல் எல்லாம் அதிக செலவினங்கள். பௌத்த துறவிகளுக்கும் அவற்றைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அனைத்து மக்களுக்கும் சமய சகிப்புத்தன்மை இருந்தது . பிற சமயங்களை அடக்கி ஒடுக்கும் மனநிலை இல்லை. பொருளாதார நிலை : மௌரியப் பேரரசின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். எருதுகள் ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்தினர்.பாசனத்திற்காக நீரோடைகள்,கிணறுகள், நீர்நிலைகள் இருந்தன.அவர்கள் பணப்பயி ர்கள் ,பழத்தோட்டங்கள் உருவாக்கிட ஆர்வம் காட்டினர்.ஜவுளி த்தொ ழிலும் வளரத்தொடங்கிற்று. நூல் நூற்றல் ,ஆடை நெய்தல் பணி களில் ஏராளமான பேர் ஈடுபட்டனர். நாட்டின் அனைத்து நிலங்களும் காடுகளும் அரசரது உடமைகள். உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் வளர்ச்சிபெற்றது. அரசு சரியான அளவில் உலோகக் காசுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது. கலை இலக்கிய வளர்ச்சி : அரசு மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டியமையால் படிப்பறிவு உள்ள மக்கள் மிகுந்திருந்தனர்.கல்விநிறுவனங்களின் அரசு நிதியுதவி வழங்கிற்று. ஆங்கிலேயர் காலத்ததை விட அசோகர் ஆட்சிக்காலத்தில் தான் அதிகக் கல்விக்கூடங்கள் இரு ந்தனவாம். அர்த்த சாஸ்திரம் சிற்பசாஸ்திரம் தவிர பல சமண, பௌத்த சமய நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. அசோகர் காலத்தில் கட்டிடக்கலை வளர்ச்சி பெற்றது.மௌரிய ரது கட்டிடங்களை காணவந்த அயல்நாட்டவரும் வியந்து பாரா ட்டினர்.'இவை மனிதரால உருவாக்கப்பட்டதல்ல.தேவதைகளால் கட்டப்பட்டவை' என்றனர். ஏறத்தாழ 8400 ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.அவற்றின் உயரம் 50-60 அடிகள்.ஒவ்வொன்றும் 50 டன் எடை உடைய இந்த ஸ்தூபி கற்தாண்கள் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. ஒவ்வொரு ஸ்தூபி உச்சியில் ஒரு விலங்கின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளுக்கு குடைவரைக் குகைகள் உருவாயின அவற்றின் சுவர்கள் பளிங்குக்கல் போன்று பளபளப்பாக உள்ளன் நேபாளத்தில் உள்ள தேவப்பட்டான்,காஷ்மீரில் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களைக் கட்டுவித்தவர் அசோகர். (வரும்...)

Megasthanes

இந்திய வரலாறு ஒரு மீள்பார்வை Recap ************* மெகஸ்தனிஸ்-கிரேக்கத் தூதுவர் : சநதிரகுப்த மௌரியரின் ஆட்சி சிறப்புகளை அறிய உதவும் நூல் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் எழுதிய இண்டிகா INDIKA ஆகும். இந்நூலின் சில பகுதிகள் தான் தற்போது உள்ளன. கி மு 303 ல் சந்திர குப்தர் கிரேக்கத்தளபதி செல்யூகஸ் நிகேடர் மீது போர் தொடுத்தார். அலெக்சாண்டர் கைப்பற்றிய இந்தியப் பகுதி களின் ஆளுநர் அவர்.போரில் தோல்வியுற்ற கிரேக்கத் தளபதி மௌரியப் பேரரசருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி,ஹீரட்,காந்தாரம், காபூல், பலுசிஸ் தான் ஆகியவை பேரரசுடன் இணைக்கப்பட்டன.தனது சகோதரியை சந்திரகுப்தருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்;500 யானைகள் பரிசாக வழங்கினார். மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்து அரசவைக்கு தூதுவராக அனுப்பப் பட்டார்.அவர் கி மு 302 முதல் 297 வரை அங்கிருந்தபோது இய ற்றிய நூல்தான் இண்டிகா. மெகஸ்தனிஸ் கூறும் மௌரியப் பேரரசின் சிறப்புகள் : அரசப்பதவி : மௌரியப் பேரரசர் அனைத்து அதிகாரங்களும் படைத்த யதேச்சாதிகாரி;.பெரும் செல்வத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்தார்.அவரது அரசவை பாரசீகப் பேரரசர்களின் அவையை விடச் சிறந்து விளங்கிற்று.பேரரசர் அரண்மனையை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு;வனவிலங்குகளை வேட்டையாடுவற்கு செல்வதுண்டு.சந்திர குப்தர் இயற்கை ஆர்வலர்;அழகை ஆராதித் தவர்.சதிகாரர்களின் கொலை மிரட்டலுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அறையில் உறங்குவார்.பெண் பாதுகாப்புப் படை அரசரை எந்நேரமும் காத்து நின்றது.ஒற்றர்களின் உதவியால் அவர் நாட்டு நடப்பைக் கேட்டறிந்தார் தனது முதலமைச்சர் கௌடில்யரின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார் சந்திரகுப்தர். படை நிர்வாகம் :மௌரியப் படையில் 60, 000 காலாட்படை வீரர் 30,000 குதிரைப்படை வீரர்,1000 யானைகள்,8000 தேர்கள் இருந்தன.ஒவ்வொரு தேரிலும் 3வீரர் செல்வர்.படை நிர்வாகிகள் 30 பேர்;6 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர்.பேரரசர் படைகளு க்குத் தலைமை தாங்கி முன் செல்வார். பொதுநிர்வாகம்:உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டது.மக்களின் நலன் கருதி நீர் வழிகளும் ,நெடுஞ்சாலைகளும். அமைக்கப்பட்டன. சாலைகளில் மைல் கற்கள் நடப்பட்டன. வணிகர்கள் தஙகிச்செல்ல சத்திரங்கள் இருந்தன.வழிப்பறிக் கொள்ளையர் ஒழிக்கப்பட்டனர். சிறப்பான உள்நாட்டு வணிகம் நடைபெற்றது. விற்பனை வரியாக அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. நீதி நிர்வாகம் :குற்றவாளிகள் கடுந்தண்டனை பெற்றனர்.நாடெங்கி லும் சிறு நீதிமன்றங்கள் இருந்தன.அரசவையே தலைமை நீதி மன்றம் ; பேரரசர் தலைமை நீதிபதி. தவறிழைப்பவர்களின் கை , கால்கள் வெட்டப்பட்டன.(வரும்...) மெகஸ்தனிஸ், இண்டிகா. (courtesy :Google images )

Wednesday, 29 March 2017

Kambainallur

Dear sir கம்பையநல்லூர் மறக்கவியலாத நல்லூர் 1969-70 SSLC பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாளில் ஒரு வினா :A journey by train கட்டுரை எழுது அடுத்த ஆண்டு 11ம் வகுப்பு மாணவர்களிடம் நான் கேட்டேன் எத்தனை பேர் இரயில் பயணம் செய்திருக்கிறார் என்று. ஒருவருமில்லை! 4 பேர். ரயிலைப்பார்த் திருக்கிறார்கள் இதில் ஒன்றும் வியப்பில்லை,என் மகள் MSc MEd முடித்தவர் மணம்முடித்த பினனர்தான் மாப்பிள்ளையுடன் சேலத்தில் ரயிலேறினார். கம்பையநல்லூருககு அருகே மொரப்பூர் நிலையம் உள்ளது. தலைமை ஆசிரியர் அனுமதியுடன் எனது நண்பர் குழு(அனைவரும் B Ed ஆசிரியர்கள் )ஒரு சுற்றுலாவிற்கு திட்டமிட்டது 100மாணவ மாணவியர் திரண்டனர். ஒரு நாள் காலை அனைவரும் பள்ளியிலிருந்து TNT பஸ் ஏறி மொரப்பூர் இரயில் நிலையம் சென்றடைந்தோம் ஜோலார்பேட்டை பாசஞ்சர் 11 மணிக்கு வந்தது. ஸ்டேஷன்மாஸ்டர் அனைத்து குழந்தைகளும் ஏறிடும் வரை இரயிலை நிறுத்தினார். சுமார் 20 நிமிடப்பயணம் அடுத்த இரயில்நிலையம் தொட்டம்பட்டி வந்துவிட்டடது.அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.இதில் PET ஆல்பர்ட்அவர்களின் மேற்பார்வை மகத்தானது மாணவ மாணவியர் அருகில் இருந்த இரும்பு உருக்காலைக்குச் சென்று உருகியோடும் தீப்பிழம்பான இரும்பையும் அதனை வார்ப்படம் செய்யும் விதத்தையும் கண்டு வியந்தனர்.சுண்ணாம்புக்கல் கல்கரி இரும்புத்தாது கொஞ்சம் பழைய இரும்பு இவை கலந்து blast furnace ல்உருக்கப்படுகிறது. அடுத்ததாக அருகில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றின் தெளிந்த நீரில் அனைவரும் குளித்து விளையாடி மகிழ்ந்தனர் ஜோலார்பேட்டை -பாசஞ்சர் 4 மணி அளவில் திரும்ப வந்தது மீண்டும் இரயிலேறி குழந்தைகள் ஆடிப்பாடியபடி மொரப்பூர் வந்திறங்கினர்.TNT பஸ் பயணம் நடத்துனர் வஜ்ஜிரம் பொறுப்புடன் அனைவரையும் மாலை 6 மணியளவில் கம்பையநல்லூர் கொண்டு. சேர்த்தார்.அனைவரும் மகிழ்வுடன் வீடு திரும்பினா அடுத்து இது போன்ற பிக்னிக் ஆக இல்லாமல் தொலை தூரச் சுற்றுலாக்களும் நடைபெற்றன. இவ்வகையில் உங்கள் பணியும் மகத்தானது மாணவ சமுதாயம் என்றென்றும் உங்களை நினைத்துப் போற்றும். கம்பையநல்லூர் அரசு உயர்நிலைஉயர்நிலைப்பள்ளியில் அதன்பிறகு தேர்ச்சி அளவு உயர்ந்தது கடத்தூருக்கு இணையாக இந்தப்பள்ளியும் சிறந்த கல்வி நிலை யமாக மாறியது. மாணவர் பலர் அரசுப்பணிககுச சென்றனர் தலைமைச்செயலகத்தில் உயர் பதவி யில் அமர்ந்தனர் சட்டமன்ற உறுப்பினராயினர் ஒருவர் AG ஆகவே உயர்ந்தார் நண்பரே இதுவும் சமகாலத்து வரலாறு தானே? கம்பையநல்லூரை ஆண்ட ராஜா ஆங்கிலேயருக்கு கிருஷ்ணகிரி நகரை நிர்மாணிக்க உதவினான் என்பதை நீங்களும் அறிவீர்கள் நன்றி!